ஃபிரிட்ஜ் தண்ணீரை விட மண்பானை தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

மண்பானை தண்ணீர்

கோடைக்காலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக்கொள்ளும். இதைத்தடுக்க மண் பானை நீர் சிறந்த இயற்கை மருந்து.

 • Share this:
  மண் பானையில் தண்ணீர் அருந்துவது நமக்குப் புதிதல்ல. இருப்பினும் அவற்றையெல்லாம் மறந்து போன இன்றைய தலைமுறையினருக்கு அதன் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கும் அவசியத்தில் இருக்கிறோம்.

  மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் : மண் பானையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

  இயற்கையாகவே நீர் குளிர்சியாதல் : வெயில் நாட்களில் மண் பானை நீர் அருந்தும்போது தேன் போன்று சுவைக்கும் என்பார்கள். அது உண்மைதான். இயற்கையாகவே மண் பானைகளில் நீர் குளிர்ச்சியாக மாறும். அதுமட்டுமன்றி அந்த நீரின் சுவையும் எதிலும் கிடைக்காத தனித்துவமானது.

  இதற்குக் காரணம் மண் பானையில் உள்ள மண் நீரை உறிஞ்சி அதை வெளியேற்றும் இது இயற்கையாக நிகழக்கூடியது. அதேபோல் திறக்கும்போது உட்செல்லும் காற்று உள்ளேயே சூழ்ந்து கொண்டு நீரால் குளிர்சியாகிவிடும். அதனால்தான் நீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.  கோடைக்கால நோய்களைத் தடுக்கும் : கோடைக்காலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக்கொள்ளும். இதைத்தடுக்க மண் பானை நீர்  சிறந்த இயற்கை மருந்து. கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமன்றி தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும்.

  இயற்கையான கரத் தன்மை (Alkaline) கொண்டது : காரத் தன்மை என்பது உடலில் பி.எச் அளவை சீராக வைக்க உதவுவது. இது உடலுக்கு நீரின் அளவை தக்க வைக்க உதவக் கூடியது. இது பானை நீரை அருந்தும் போது இயற்கையாகவே உடலுக்கு கிடைக்கிறது.

  குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டா..? அதன் விளைவு என்ன தெரியுமா..?

  தொண்டைக்கு நல்லது : குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. குறிப்பாக சளி, இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்த தேர்வு.

  எனவே வீட்டில் மணல் பரப்பி அதன் மேல் பானை வைத்து குடிநீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள். அடிக்கடி மணம் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போதுதான் நீர் குளுர்ச்சியாக இருக்கும். கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  பார்க்க :
  Published by:Sivaranjani E
  First published: