ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டிற்குள் மணி பிளான்ட் வளர்த்தால் இத்தனை நன்மைகளா..? மிஸ் பண்ணிடாதீங்க...

வீட்டிற்குள் மணி பிளான்ட் வளர்த்தால் இத்தனை நன்மைகளா..? மிஸ் பண்ணிடாதீங்க...

மணி பிளான்ட்

மணி பிளான்ட்

இவை வாஸ்து படி ஒரு நல்ல பாசிட்டிவ் ஆற்றலை வெளிப்படுத்த கூடிய சிறந்த இன்டோர் தாவரமாகும். இந்த செடிகளை வீடுகளின் உட்புறத்தில் அல்லது வீட்டின் வெளிப்புறத்தில் வைப்பது வீட்டை செல்வ செழிப்புடன் வைக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் வீடுகளை அழகாக மாற்றவும், வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதிகபட்ச நேர்மறை ஆற்றலை பெறவும் நாம் விரும்புகிறோம். இதற்கு பசுமையான தாவரங்கள் பெரிதும் உதவுகின்றன. நாட்டில் மிகவும் பிரபலமான இன்டோர் தாவரங்களில் ஒன்று மணி பிளான்ட் (Money Plant) .

இவை வாஸ்து படி ஒரு நல்ல பாசிட்டிவ் ஆற்றலை வெளிப்படுத்த கூடிய சிறந்த இன்டோர் தாவரமாகும். இந்த செடிகளை வீடுகளின் உட்புறத்தில் அல்லது வீட்டின் வெளிப்புறத்தில் வைப்பது வீட்டை செல்வ செழிப்புடன் வைக்கும். இவை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையின் காரணமாக வீடுகள் மட்டுமின்றி அலுவலகங்கள், கஃபேக்கள், கடைகள் என பல இடங்களில் தொங்கும் கூடையில் வைக்கப்படுகின்றன. பொதுவாக மணி பிளான்ட்கள் நிதி ரீதியாக நாம் எதிர்கொள்ளும் சவால்களை தவிர்க்க உதவுகிறது, நம் வீட்டிற்கு அதிர்ஷ்டம் & செல்வத்தை கொண்டு வருகிறது.

அது மட்டுமின்றி அசுத்தமான காற்றை வடிகட்டுவது மற்றும் ஆக்ஸிஜன் வரத்தை அதிகரிப்பது முதல் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து தூக்கக் கோளாறுகளை மேம்படுத்துவது வரை பல ஆரோக்கிய நம்மைகளையும் இவை நமக்கு தருகின்றன.

நீங்கள் உங்கள் வீட்டில் மணி பிளான்ட் வைத்திருந்து அது சரியான வளர்ச்சியில் இல்லாவிட்டால், அதை மீண்டும் விரைவாக வளர வைக்க கீழ்க்காணும் டிப்ஸ்களை பின்பற்றுங்கள்...

- நீங்கள் மணி பிளான்ட்-ஐ தண்ணீரில் வைக்க விரும்புகிறீர்கள் என்றால் ஒவ்வொரு முறை நீங்கள் அதன் தண்ணீரை மாற்றும் போது ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை (aspirin tablet) தண்ணீரில் போட்டு விடுங்கள். நல்ல ஆரோக்கியமான வளர்ச்சிக்கு 15 - 20 நாட்களுக்கு ஒருமுறை மணி பிளான்ட் உள்ள தண்ணீரை மாற்றி விடுங்கள். அதே போல இந்த செடியின் கணு தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போல வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூரிய ஒளிக்கு அருகில் மணி பிளான்ட் வைத்துள்ள கன்டெயினரை வைக்க வேண்டும். அதே சமயம் நேரடியாக வெயிலில் படும்படி மணி பிளாண்டை வைக்கக் கூடாது
- நீர் மட்டத்தை பராமரிக்க அடிக்கடி தண்ணீர் சேர்க்க வேண்டும். மற்றும் பண ஆலை தண்ணீரில் வளர்க்கப்படும் போது, ​​உரங்களை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
- அவ்வப்போது உலர்ந்த அல்லது இறந்த இலைகளை அகற்றி வழக்கமாக அடிப்படையில் இந்த தாவரத்தை பராமரிப்பது நல்லது.
- உரம் சேர்த்தாலும் ஓரளவிற்கு மேல் சேர்க்காதீர்கள். அதிக உரம் ஒரு கட்டத்தில் இலைகளை மற்றும் வேர்களை கடுமையாக சேதப்படுத்தி விடும்.
- உங்கள் மணி பிளான்ட்டில் புதிய வேர்கள் உருவாகவில்லை என்றால் அதை மண்ணில் நட்டு வளர்ப்பது நல்லது. மண் நிரப்பப்பட்ட தொட்டியில் உங்கள் தாவரத்தை வைக்கும் அதன் தண்டு மற்றும் இலைகளை ஒழுங்கமைக்கவும். அதன் பிறகு அதை மண்ணில் நடவும். நன்கு வடிகட்டிய மண்தான் மணி பிளான்ட்டுக்கு தேவை. அதன் வேர்கள் அழுகாமல் இருக்க, முதலில் உரங்களை பயன்படுத்த வேண்டாம். நன்கு வளர்ச்சியடைந்த பின் உரங்களை பயன்படுத்த துவங்கலாம்.
- மணி பிளான்ட்டின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எப்சம் உப்பை (Epsom salt) அதில் சேர்க்கலாம்.
- மணி பிளான்ட்டின் நல்ல வளர்ச்சிக்கு ஓரளவு வெயில் மற்றும் ஓரளவு நிழலான பகுதி சிறந்தது. எனவே நேரடியாக சூரிய ஒளியில் வைப்பதை தவிர்த்து புல்வெளி, மொட்டை மாடி, தோட்டம் அல்லது உட்புற இடத்தில் நிழலான ஆனால் பிரகாசமான இடத்தில் வைப்பது இந்த செடிகளைப் பராமரிப்பதற்கு மிக சிறந்ததாக இருக்கும்.
- நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் உரங்கள் மாலையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் பகல் நேரத்தில் உரங்களை பயன்படுத்துவது மணி பிளான்ட்களின் வேர்களை சேதப்படுத்தலாம். அதே போல குளிர்காலம் என்பது உரங்களைத் தவிர்க்க வேண்டிய மாதம் ஆகும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Home and Interior, Money Plant