காய்கறிகளை நறுக்க பலகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் : நீண்ட நாள் உழைக்க டிப்ஸ்...

காய்கறிகளை நறுக்கும் பலகை

பலகை அதிக இடுக்குகள் இல்லாமல் சமமான அளவில் இருக்க வேண்டும். இல்லையெனில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் அல்லது பாக்டீரியாக்ளை பெருக்கிவிடும்.

  • Share this:
அரிவாள்மனைகளை பயன்படுத்திய காலம் மறைந்து பலரும் இன்று பலகை , கத்திக்கு மாறிவிட்டனர். இது அவர்களின் வேலையை சற்று எளிதாக்கிவிட்டது என்று கூட சொல்லலாம். அப்படி காய்கறிகளை நறுக்க சாப்பிங் போர்டுகள் வாங்கும்போது சில விஷயங்களை கவனிப்பது அவசியம். எனவே எப்படி பார்த்து வாங்க வேண்டும், நீண்ட நாட்கள் உழைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

காய்கறி நறுக்கும் பலகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

பிளாஸ்டிக் , கண்ணாடி, பீங்கான், மரம் அல்லது இரும்பு இப்படி எந்த பொருளால் செய்யப்பட்டுள்ளது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பின் அதன் நீளம் , அகலத்தை கவனிக்க வேண்டும்.

அதேபோல் அதன் தடிமன் அளவையும் கவனிக்க வேண்டும். அதாவது பலகை செவ்வக வடிவில் இருந்தால் நல்லது. அதன் அங்குல அளவு 2-18 இருக்க வேண்டும். பெரியதாக வேண்டும் எனில் 15-20 அல்லது 24-36 அங்குல வரை தேர்வு செய்யலாம். பிளாஸ்டிக் பலகை என்றால் மெல்லியதாக இருக்க வேண்டும். 1/2-1 அங்குல தடிமன் இருக்க வேண்டும். மரப்பலகை என்றால் அதன் தடிமன் 11/4-2 அங்குலம் வரைக்கும் இருக்கலாம்.



பலகை அதிக இடுக்குகள் இல்லாமல் சமமான அளவில் இருக்க வேண்டும். இல்லையெனில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் அல்லது பாக்டீரியாக்ளை பெருக்கிவிடும்.

முடிந்த வரை மரப் பலகை வாங்குவது நல்லது. அதுதான் காய்கறிகளை நறுக்க வசதியாகவும் இருக்கும். அதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது. மூங்கில், தேக்கு பலகையை தவிருங்கள். அவை கத்திகளை சேதப்படுத்தும்.

பூஜை பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...

பிளாஸ்டி நறுக்கும்போது கத்தி பட்டு அதன் துகள்கள் காய்கறிகளில் கலக்கக் கூடும். இதனால் தேவையற்ற உடல் நல பாதிப்புகளை அனுபவிப்பீர்கள். அதேபோல் கண்ணாடி , பீங்கான் பலகைகளையும் தவிருங்கள். இதைக் கையாள்வது சிரமம். அதேசமயம் கத்தியின் கூர்மையை மழுங்கடித்துவிடும்.

செராமிக் கற்களிலும் தற்போது சாப்பிங் போர்டுகள் வந்துவிட்டன. அவையும் காய்கறிகளை நறுக்க எளிதானவை. ஆனால் அவற்றை தூக்கி கழுவ சிரமமாக இருக்கலாம். உங்களுக்கு வசதியான வகையில் ஒரே இடத்தி வைத்து நறுக்கலாம். பராமரிக்கவும் எளிதாக இருக்கும். சில நேரங்களில் இவை கத்தியின் கூர்மையையும் மழுங்கடிக்கலாம்.



பராமரிக்கும் வழிகள் :

மரப் பலகையாக இருந்தால் ஈரப்பதத்துடன் வைக்காதீர்கள். பின் விரைவில் விரிசல் விழலாம். ஈரப்பதம் கூடி துர்நாற்றம் வீசலாம். கிருமிகளும் தேங்க வாய்ப்புகள் உள்ளது.

பலகைகளை வெறும் தண்ணீரில் கழுவுவதற்கு பதிலாக, சோப்பு போட்டு தேய்த்து சுடு தண்ணீரில் அலசி காய வையுங்கள்.வெயில் படும் இடத்தில் வைத்தல் நல்லது. வெயில் இல்லை எனில் துணியால் துடைத்து உலர்த்துங்கள்.

செப்பு , பித்தளை , மண்பானை...இவற்றில் எது குடிநீரை சேகரிக்க ஆரோக்கிமானது..? ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ்

பாத்திரம் கழுவும் இடம், சிங்க் அல்லது தண்ணீர் அதிகம் படும் இடங்களில் பலகைகளை வைக்காதீர்கள். ஈரப்பதம் இருக்க வாய்ப்புகள் அதிகம்.



2-4 வாரங்களுக்கு ஒரு முறை தேன் மெழுகு அல்லது எண்ணெய்யை பலகையை சுற்று தேயுங்கள். இதனால் பூச்சி அரிக்காமல், விரிசல் விழாமல் இருக்கும். பயன்படுத்தவும் மென்மையாக இருக்கும்.

காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி வகை என காய்கறிகளை நறுக்க தனித்தனியாக சாப்பிங் போர்டுகள் பயன்படுத்துதல் நல்லது. இவை மூன்றும் வெவ்வேறு தன்மை கொண்ட உணவுகள் என்பதால் அவற்றை ஒரே பலகையில் பயன்படுத்துவது நல்லது அல்ல.
Published by:Sivaranjani E
First published: