வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்ட நிலையில், ஏசி கடைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கிவிட்டது. ஏசி வாங்குவது, சாதாரண விஷயம் இல்லை. வாங்குவதற்கு முன் அதுகுறித்து சில தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
அறைக்கு ஏற்ற ஏசி கொள்ளளவு:
ஏசி வாங்கும் முன் அதன் கொள்ளளவைக் கணக்கிடுதல் அவசியம். அறையில் அளவிற்கு ஏற்ப ஏசியின் கொள்ளளவு இருக்க வேண்டும். உதாரணமாக 100 - 120 சதுர அடியில் அறை இருக்கிறதெனில் 1 டன் கொள்ளளவு ஏற்றது. அதைவிட அதிகமாக இருந்தால் 1.5 டன் அல்லது 2 டன் கொள்ளளவு ஏற்றதாக இருக்கும். அதேபோல் அறையில் சூரிய வெளிச்சம் படும் அளவையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
விண்டோ ஏசி அல்லது ஸ்ப்ளிட் ஏசி:
ஸ்ப்ளிட் ஏசியை விட விண்டோ ஏசியின் விலை மலிவாக இருக்கும். விண்டோ ஏசி ஒரே வடிவில் எல்லாம் அடங்கியதாக இருக்கும். ஸ்ப்ளிட் ஏசி இரண்டு பகுதிகளாக ஒன்று உள்ளும் மற்றொன்று வெளியேயும் வைக்கப்படும். எதுவாயினும் ஏதுவான காற்றோட்டம் தேவை.
பயன்பாடு:
ஏசியை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்பது முக்கியம். அதற்கு ஏற்ப அதன் ஆற்றல் திறனைக் கணக்கிட்டு வாங்குங்கள். பலரும் கடைக்காரர் ஐந்து ஸ்டார் ஆற்றல் கொண்ட ஏசியை வாங்கப் பரிந்துரைப்பார்கள். ஆனால் அது அத்தனை சிறந்த யோசனை அல்ல. அது அதிக விலை கொண்டதாக இருக்கும். நீங்கள் அதிகபட்சமாக 6 மணி நேரம் மட்டும் பயன்படுத்தப் போகிறீர்கள். வெயில் நாட்களில் மட்டும் பயன்படுத்தப்போகிறீர்கள் எனில் மூன்று ஸ்டார் ஏசி ஏற்றதாக இருக்கும்.
மின்சாரம் சேமிப்பு:
ஸ்டார் மதிப்பு போல் BEE ஸ்டார் மதிப்பையும் கவனிப்பது அவசியம். இதில் 5 ஸ்டார் BEE என இருந்தால் அதன் மின்சார சேமிப்பு அதிகமாக இருக்கும், 3 என இருந்தால் குறைவாக இருக்கும். ஆனால் இரண்டிலும் டன் கொள்ளளவு ஒரே மாதிரியாகவே இருக்கும்.
இன்வெர்டர் ஏசி வாங்கலாம்
பலரும் இன்வெர்டர் ஏசி வாங்குவது நல்ல யோசனை என்கின்றனர். பலரும் இன்று இதைத்தான் விரும்புகின்றனர். ஏனெனில் அதன் வேகம் நிலையானதாக இருக்கும். அதன் மோட்டார் வேகம் அதிகமாக இருக்கும். விரைவில் அரை குளுமையாகிவிடும். அதேசமயம் மின்சாரத்தை மிச்சப்படுத்தவும் இது சிறந்தது என்கின்றனர்.
காற்று வெளியேற ஏற்ற இடம்:
ஏசிகள் மின்விசிறி வைக்கப்பட்டுள்ளதால், அந்தக் குளிர்ந்த காற்று பரவ ஏதுவான இடம் அவசியம். எந்த இடத்தில் பொருத்தினால் ஏசி காற்று நன்றாகப் பரவும் என்பதைக் கண்டறிய வேண்டும். இடையூறுகள் இல்லாமல் இருந்தால் காற்று நன்றாகப் பரவும். அதேபோல் முகத்தில் நேராகப் படும்படி வைக்கக்கூடாது. அதற்கு ஏற்ப பொருத்துங்கள்.
ஏர் ஃபில்டரைக் கவனிக்கவும்:
இன்று ஏர் ஃபில்டர்கள் பல வகைகளில் வருகின்றன. அறையில் உள்ள கிருமிகளை உள்ளிழுத்து சுத்தமான காற்றை வெளியேற்றும். அதேபோல் அறையின் துர்நாற்றத்தை நீக்கும் ஃபில்டர்கள் பல வகையில் அதன் விலைக்கு ஏற்ப கிடைக்கின்றன. அதுபோன்ற அம்சங்கள் உங்களுக்குத் தேவை எனில் வாங்கலாம்.
கூடுதல் அம்சங்களுக்கு கூடுதல் விலை:
ஃபில்டரில் மட்டுமல்ல, ஸ்மார் ஏசிக்களும் இருக்கின்றன. நீங்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னரே உங்கள் செல்ஃபோனால் ஆன் செய்து வீட்டைக் குளுமையாக்கலாம், மின்விசிறியின் குறைந்த சத்தம், கொசுவைக் கண்டால் ஒழிப்பது போன்ற அம்சங்கள் கொண்டு வருகின்றன. அவை அதன் அம்சங்களுக்கு ஏற்ப விலையிலும் ஏற்றங்கள் இருக்கின்றன.
வெயில் காலத்தில் ஏசியே தேவையில்லை... இந்த பத்து விஷயங்களை டிரை பண்ணுங்க...!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.