ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் கியாஸ் அடுப்பை டீப் க்ளீன் செய்ய ஈசியான டிப்ஸ்..!

உங்கள் கியாஸ் அடுப்பை டீப் க்ளீன் செய்ய ஈசியான டிப்ஸ்..!

கியாஸ் அடுப்பை டீப் க்ளீன் செய்ய ஈசியான டிப்ஸ்

கியாஸ் அடுப்பை டீப் க்ளீன் செய்ய ஈசியான டிப்ஸ்

என்னதான் தினம் தினம் சுத்தம் செய்தாலும் வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு முறையேனும் டீப் கிளீன் செய்தாக வேண்டும். அப்போதுதான் எண்ணெய் பிசுக்குகள் இல்லாமல் பாத்திரங்களும், அடுப்பும் சுத்தமாக இருக்கும் என்பதை விட நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிட்சனில் சமைப்பதை விட அந்த கிட்சனை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரிய டாஸ்க். சமைத்து முடித்தவுடன் சமையல் மேடையை சுத்தம் செய்வது, அடுப்பை சுத்தம் செய்வது என எப்போதும் கிட்சனை விட்டு நகராத படி வேலை இருந்துகொண்டே இருக்கும்.

என்னதான் தினம் தினம் சுத்தம் செய்தாலும் வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு முறையேனும் டீப் கிளீன் செய்தாக வேண்டும். அப்போதுதான் எண்ணெய் பிசுக்குகள் இல்லாமல் பாத்திரங்களும், அடுப்பும் சுத்தமாக இருக்கும் என்பதை விட நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அந்த வகையில் கிட்சனை சுத்தம் செய்வதில் முக்கிய டாஸ்கான கியாஸ் அடுப்பை டீப் கிளீன் செய்ய இந்த டிப்ஸை கவனியுங்கள்.

மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது கிட்சன் ஹேக்ஸுகளை பகிர்வார். அந்த வகையில் கியாஸ் ஸ்டவை எப்படி டீப் கிளீன் செய்வது என டெமோ காட்டும் வீடியோவை பகிர்ந்துள்ளார் அதில்...


பேக்கிங் சோடா மற்றும் வினிகர் இரண்டையும் ஒன்றாக கலந்து கியாஸ் ஸ்டவ் மீது தெளித்துவிடுங்கள். குறிப்பாக கறை படிந்துள்ள இடங்களில் நன்கு தெளித்துவிடுங்கள். பின் 20 நிமிடங்களுக்கு நன்கு ஊற வையுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்து எடுத்தால் படிந்திருந்த கறைகள் எளிதாக நீங்கிவிடும். பின் ஸ்டவ் பார்ப்பதற்கு புதிது போல் பளபளக்கும்.

First published:

Tags: Kitchen Hacks