• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • யுவராஜ் சிங்கின் வீடு ரூ.64 கோடியா..? அதற்குள் என்னென்ன வசதிகள் இருக்குன்னு தெரிஞ்சா அசந்துபோவீங்க..

யுவராஜ் சிங்கின் வீடு ரூ.64 கோடியா..? அதற்குள் என்னென்ன வசதிகள் இருக்குன்னு தெரிஞ்சா அசந்துபோவீங்க..

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

29வது மாடியில் இருக்கும் யுவராஜின் வீட்டில் இருந்து அரபிக் கடலின் அழகை கண்குளிர கண்டு ரசிக்கலாம்.

  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த யுவராஜ் சிங் செய்துள்ள சாதனைகள் ஏராளம். 2002-ஆம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில், கங்குலியின் தலைமையின் கீழ் விளையாடிய அவர், நார்வெஸ்ட் கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

2007-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்து இருந்தார். அப்போது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவார்ட் பிராடு வீசிய 6 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி கிரிக்கெட் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தார்.

17 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள யுவராஜ் சிங், ஓய்வுக்குப் பிறகு இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர், தொழிலதிபர் என பன்முகங்களை கொண்டுள்ள யுவராஜ் சிங் மும்பையில் வோர்லி (Worli) பகுதியில் உள்ள சொகுசு அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அவருடன் மனைவி ஹசல் கீச்சல் மற்றும் 2 குழந்தைகளும் தங்கியுள்ளனர். 2013 ஆண்டில் 64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கிய இந்த குடியிருப்பு, 64 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். 29வது மாடியில் இருக்கும் யுவராஜின் வீட்டில் இருந்து அரபிக் கடலின் அழகை கண்குளிர கண்டு ரசிக்கலாம். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், யுவராஜ் குடியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினரும் வசித்து வருகின்றனர். 
View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)
 
View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)


யுவராஜின் லிவ்விங் ரூம், பார்ப்பதற்கு மிகவும் காஸ்டிலி லுக்குடன் உள்ளது. பழுப்பு மற்றும் மண் கலரில் சூப்பரான பெயிண்டிங், சில இடங்களில் சிவப்பு நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காமிபை சோபா, கை நாற்காலி, பச்சை மற்றும் சிவப்பு நிற தலையணைகள் மற்றும் காஃபி டேபிள் ஆகியவை உள்ளன. பெட்ரூம் விசாலமாக உள்ளது. ஒருமுறை வீட்டில் ஹேர் கட் செய்யும்போது, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பெட்ரூம் ஸ்பெஷலை ரசிகர்களுக்கு யுவராஜ் காண்பித்தார். கண்ணாடி கதவுகள், மற்றும் அழகிய மின்விளக்குகள், மார்பிள் தரைத்தளத்துடன், நவீன வசதிகளை கொண்ட படுகைகள் உள்ளன. 
View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)
 
View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)


மற்றொரு வீடியோவில் தன்னுடைய சமையலறையில் இருக்கும் அம்சங்களை காண்பித்துள்ளார் யுவராஜ் சிங். பளிங்கு மார்பிள் தரைத்தளம் உள்ளது. பொருட்களை வைப்பதற்கு வெள்ளை மற்றும் கருப்பு நிற கபோர்டுகள் உள்ளன. வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்ட அவர், என்டர்டெயின்ட்மென்டுக்காக பிரத்யேக ரூம் ஒன்றை உருவாக்கியுள்ளார். பால்கனியுடன் சேர்ந்து இருக்கும் அந்த ரூமில் விளையாட்டு துறையில் யுவராஜ் வாங்கிய பதக்கங்கள் மற்றும் மெடல்கள் இடம்பெற்றுள்ளன. காஸ்டிலியாக இருந்தாலும், லைஃபை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ்வதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் அந்த வீட்டில் உள்ளன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: