இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரெய்னா காசியாபாத்தில் 18 கோடி ரூபாய் மதிப்பில் கட்டியுள்ள வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அதுவும் தனது நண்பரான மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களிலேயே ரெய்னாவும் அறிவித்தது, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த ரெய்னா, சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக அறிவித்து, மற்றொரு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால், ஐ.பி.எல் போட்டியில் அவரைக் காணலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய அவர், கொரோனா காலத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். கிரிக்கெட் மைதானத்தில் இறங்கி ரசிகர்களை குஷிப்படுத்தாவிட்டாலும், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார். ஓய்வு நேரங்களை குழந்தைகளுடன் செலவிட்ட ரெய்னா, அந்த அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். அப்போது, அவரின் வீட்டில் அழகு சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ள செய்தின்படி, காஷியாபாத்தில் சுரேஷ் ரெய்னா கட்டியுள்ள வீடு 18 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவீடு சுரேஷ் ரெய்னாவின் ரசனைக்கு ஏற்ப மாளிகை வடிவில் கட்டப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பழங்கால மற்றும் தற்கால கட்டட கலைகளின் கலவையை ஒருங்கே அமையும் வகையில் சூப்பராக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெய்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் வீட்டின் அழகியலை தெரிந்து கொள்ள முடிந்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உடற்பயிற்சி செய்வதற்கு பிரத்யேக ஜிம், போட்டிகளில் வாங்கிய மெடல்கள் மற்றும் விருதுகளை வைப்பதற்கான அறை, குழந்தைகளுடன் விளையாடுவதற்கான பூங்கா மற்றும் புத்தக அறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்திய வீரர் ரெய்னா வீட்டிற்கு சென்று இருவரும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஜாம்பவான் ரெய்னாவின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
பால்கனியில் விதவிதமான பூக்களின் தொட்டியை வைத்து ரெய்னா பராமரித்து வருகிறார். அந்த பூக்களுடன் அமர்ந்து காசியாபாத்தின் நகரின் அழகையும் ரசிக்கலாம். கிரிக்கெட் மைதானத்தை தவறவிட்டாலும், போதுமான நேரத்தை வீட்டில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலவிட்டுள்ளார்.