வீட்டில் சுத்தமான காற்றை சுவாசிக்க இந்தச் செடிகளை வளர்க்கலாம்!

வீட்டிற்குள் பரவக் கூடிய காற்று மாசுபாட்டால் அலர்ஜிகள், தலைவலி, சுவாசக் கோளாறு, சோர்வு அல்லது களைப்பு, புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

வீட்டில் சுத்தமான காற்றை சுவாசிக்க இந்தச் செடிகளை வளர்க்கலாம்!
தூய காற்றை சுவாசிக்க வீட்டில் வளர்க்கக் கூடிய செடிகள்
  • News18
  • Last Updated: May 6, 2019, 2:15 PM IST
  • Share this:
வீட்டை என்னதான் துடைத்து வைத்தாலும் எப்படியாவது தூசு புகுந்துவிடும். அதில் கார்பன் மோனாக்ஸைட், நைட்ரோஜின் ஆக்ஸைட் , பெஸ்டிசைட் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய கிருமிகள் இருக்கும். அதனால், அலர்ஜி, தலைவலி, சுவாசக் கோளாறு, சோர்வு அல்லது களைப்பு, புற்று நோய் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

சமையல் செய்தல், வாசனைத் திரவியங்கள், ஸ்பிரே, மெத்தை தூசிகள், மனிதன் மூலம் பரவும் தூசு போன்ற காரணங்களாலும் வீட்டில் உள்ள காற்று மாசுபடலாம்.

இவற்றைத் தடுக்க, காற்றில் கலந்துள்ள கிருமிகளை உறிஞ்சக் கூடிய தாவரங்களை வீட்டில் வளர்க்கலாம். அவை என்னென்ன என்பதைக் காணலாம்.
கற்றாழை : கற்றாழை சருமப் பராமரிப்பிற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அழகுக்கு மட்டுமல்ல காற்றில் கலந்திருக்கும் கிருமிகளை உறிஞ்சவும் இந்தச் செடி பயன்படுகிறது.

மருள் கற்றாழை : இதை பாம்புக் கற்றாழை என்றும் அழைப்பார்கள். இது காற்றில் கலந்திருக்கும் நியூட்ரோஜன் ஆக்சைட், சைலின், ஃபார்மல்டிஹைட் போன்ற கிருமிகளை அழிக்க உதவுகிறது. இதை வளர்ப்பதும் சுலபமே.மூங்கில் மரம் : இது குட்டையாக வீட்டில் அழகிற்கு வளர்க்கக் கூடிய மரம் மட்டுமல்ல. காற்றில் கலந்திருக்கக் கூடிய வாகன மாசு, வீட்டில் உள்ள மெத்தை மாசு போன்றவற்றில் இருக்கும் கிருமிகள் காற்றில் பரவுவதைக் கண்டறிந்து உடனே உறிஞ்சு தூய காற்றை உங்களுக்குக் கொடுக்கக்கூடியது.ஈச்சை மரம் : மரம் என்றதும் வீட்டில் எப்படி வளர்ப்பது என்று பதற வேண்டாம். இது அழகுக்காகக் குட்டையாகவும் செடி போல் வளர்த்து பராமரிக்கப்படுகிறது. பல கார்ப்ரேட் அலுவலகங்களில் கூட இந்தச் செடியைப் பார்த்திருப்பீர்கள். நீங்களும் வீட்டில் வளர்த்தால் ஆரோக்கியமான காற்றைச் சுவாசிக்கலாம்.ரப்பர் மரம் : இதுவும் ஈச்ச மரத்தைப் போன்றுதான் பராமரிக்க வேண்டும். இதை நேரடியாகச் சூரிய வெளிச்சத்தில் வைக்காமல் பராமரிக்க வேண்டும். அதிகமான நீர் இதன் வேரைப் பாதிக்கும்.
First published: May 6, 2019, 2:15 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading