கொரோனா பரவலுக்கு பின்னர் சொந்த வீடு வாங்க திட்டமா? இதை எல்லாம் கவனியுங்கள்!

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறையும் நேரம் வரை நீங்கள் காத்திருந்தால், உங்கள் கனவு இல்லத்தை எளிதாக வாங்கிவிடலாம்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறையும் நேரம் வரை நீங்கள் காத்திருந்தால், உங்கள் கனவு இல்லத்தை எளிதாக வாங்கிவிடலாம்

  • Share this:
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தங்களுக்கென ஒரு சொந்தமான வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு தோன்றி இருக்கும். இத்தொற்றுநோய் காலம், குடியிருப்பு இடத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. நம்மில் பலர் வாடகை வீட்டிலிருந்தோ அல்லது சிறிய வீடுகளிலிருந்தோ வெளியேறி சொந்தமாக ஒரு குடியிருப்பு இடத்தை வாங்க திட்டமிட்டிருப்பார்கள். மேலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறையும் நேரம் வரை நீங்கள் காத்திருந்தால், உங்கள் கனவு இல்லத்தை எளிதாக வாங்கிவிடலாம். ஆனால், நீங்கள் வீடு வாங்கும் முன்னர் சில விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

ஓய்வு அல்லது 'Work from Home' அறை

கொரோனா காலத்தில் வீட்டில் தங்கியிருக்கும் நேரத்தில் கூடுதலாக அறைகள் இருப்பதன் அவசியத்தை உணர்ந்திருப்போம். குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்வது போன்ற காரணங்களினால் கூடுதலாக அறைகள் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். எனவே சமையலறை, குளியல் அறை, படுக்கை அறைளுடன் கூடுதலாக அறைகள் இருக்குமாறு வீட்டை வாங்குங்கள்.

வீட்டுக் கடன்கள்: உங்களுக்கான சிறந்த சலுகைகள்

தொற்றுநோய்களுக்கு மத்தியில் பல வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் வீடு வாங்குபவர்களுக்கும், முதல்முறையாக வீடு வாங்குபவர்களுக்கும் புதிய மற்றும் சிறப்பு வீட்டுக் கடன் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் கொரோனாவுக்கு பிந்தைய காலங்களில் கூட தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய வீட்டுக் கடன் சலுகைகளில் கவனம் செலுத்துவது நிச்சயமாக உங்களுக்கு உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிளாட் வாங்குங்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல துறைகள் தங்கள் பணிகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் துறையும் சிக்கி தவித்து வருகிறது. இதனால் ஊரடங்கு நிறைவடைந்த பின்னர் தற்போது சந்தித்த பிரச்சனைகளை மனதில் வைத்து, பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்கள் பணியை துரிதப்படுத்துவர். மேலும் சீக்கிரம் பிளாட்களை விற்பனை செய்ய ஆர்வமாக இருப்பார்கள். அந்த நேரத்தை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பிளாட்டுகளை வாங்கி கொள்ளுங்கள்.

முக்கிய தேவைகளை கருத்தில் வைத்து கொள்ளுங்கள்

நீங்கள் வீடு வாங்கும்போதோ அல்லது இடம் வாங்கி கட்டும்போதோ கவனிக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. அதாவது மருத்துவமனைகள், பொது போக்குவரத்து வசதிகள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் தினசரி வாழ்க்கையின் பிற முக்கிய தேவைகள் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். போக்குவரத்து, பள்ளிகள், மருத்துவமனைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றிற்கு அருகிலேயே மக்கள் தங்க விரும்புகிறார்கள் என்பது பல்வேறு ஆய்வுகளில் கவனிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அன்றாட தேவைகளை சுலபமாக தொந்தரவில்லாமல் செய்ய முடியும் என்பது அனைவரது விரும்பபமாக உள்ளது.
Published by:Archana R
First published: