Home /News /lifestyle /

இந்த ராசிக்காரர்கள் நற்பலன்கள் கிடைக்க கிறிஸ்துமஸ் மரத்தை இப்படித்தான் அலங்கரிக்கனுமாம்..! 

இந்த ராசிக்காரர்கள் நற்பலன்கள் கிடைக்க கிறிஸ்துமஸ் மரத்தை இப்படித்தான் அலங்கரிக்கனுமாம்..! 

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு சர்ச்களிலும், வீடுகளிலும் மேலும் வண்ணமயமாக்குகிறது.

கிறிஸ்துமஸ் மரங்கள் (Christmas tree) கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு சர்ச்களிலும், வீடுகளிலும் மேலும் வண்ணமயமாக்குகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களின் வீடுகளில் இருக்கும் பெரியவர்களும் சிறியவர்களும் குதூகலமாக அலங் கரிக்க தொடங்கும் கிறிஸ்துமஸ் மரங்களை தயாரிக்க வாரக்கணக்கில் எடுத்துகொள்பவர்கள் உண்டு.

இப்போது நாமும் அழகான கிறிஸ்துமஸ் மரத்தை தயாரிப்போம். குறிப்பாக அவர்கள் கைப்பட அரைமணி நேரத்தில் இதை தயாரித்துவிட முடியும் என்று உங்கள் வீட்டில் உள்ள குட்டீசுகளை தயாரிக்க சொல்லுங்கள். வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே தயாரிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. அதோடு கூட உங்கள் ராசிக்கு எம்மாதிரியான கிறிஸ்துமஸ் மரத்தை நீங்கள் தயாரிக்கலாம் என்பதை இங்கே காண்போம்.

மேஷம் :

மேஷத்திற்கான இந்த விடுமுறை காலத்தின் தீம் சிவப்பு. கிறிஸ்துமஸ் மரத்தில் பிரகாசமான விளைவை ஏற்படுத்தும் சிவப்பு வண்ணங்கள் மற்றும் தேவதை விளக்குகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

ரிஷபம் :

ரிஷப ராசியினர் வனப்பகுதி உயிரினங்களுக்காக காடு சார்ந்த கருப்பொருளைத் தேர்வு செய்யலாம். நீங்கள் நட்சத்திரங்கள் மற்றும் சில கட்-அவுட்களை உங்கள் கிறிஸ்துமஸ் மரங்களில் பயன்படுத்தலாம்.



மிதுனம் :

மிதுன ராசியினர் பல்துறை மற்றும் சமூக ஆளுமை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். பல வண்ணங்களை கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க மல்டிகலருடன் பிரகாசமான தேவதை விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

கடகம் :

கடக ராசிக்காரர்கள் தங்கள் கிறிஸ்துமஸ் மரத்தை நட்சத்திரங்கள், ஸ்னோஃப்ளேக்ஸ் மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கலாம்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்கள் வீட்டை அழகாக அலங்கரிக்க சில யோசனைகள் இதோ..!

சிம்மம் :

சிம்ம ராசியினர் தங்கள் கிறிஸ்துமஸ் மரத்தை தங்கத்தில் ஒளிர செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் மஞ்சள் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். கோல்ட் டின்சல் மற்றும் மாலைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

கன்னி :

கன்னி ராசியினர் தங்கள் கிறிஸ்துமஸ் மரத்திற்காக கிராம கருப்பொருளைத் தேர்வு செய்யலாம். குறிப்பாக கர்த்தருக்கு நெருக்கமான வைக்கோலை அவர்கள் தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது.



துலாம் :

அனைத்து துலாம் ராசிக்காரர்களும் அலங்கரிக்க வேண்டிய கிறிஸ்துமஸ் மரம் எளிமையாக இருக்க வேண்டும். ஒரு ஒல்லியான கிறிஸ்துமஸ் மரத்தில் குறைந்தபட்ச அலங்காரத்துடன் எளிதாக வைத்திருங்கள். மேலும் அதில் பந்துகள் மற்றும் தேவதை விளக்குகளையும் அதில் சேர்க்கவும்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்கள் அவர்களின் கிறிஸ்துமஸ் மரத்தை பனியில் சறுக்கி ஓடும் வாகனம், கலைமான், கையுறைகள் மற்றும் சாக்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி அலங்கரிக்க முடியும். உங்கள் மரத்தை காண வருபவருக்கு உங்களால் முடிந்த சிறு பரிசினை அளியுங்கள்.

மகரம் :

குறைவான அலங்காரங்களுடன் கூடிய குறைந்தபட்ச கிறிஸ்துமஸ் மரம் மகர ராசிக்காரர்களுக்கு உகந்தது. மரத்தின் மேற்புறத்தில் ஒரு நட்சத்திரத்தையும் மஞ்சள் தேவதை விளக்குகளையும் சேர்ப்பதன் மூலம் நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

கும்பம் :

கும்ப ராசிக்கார்களின் அவர்களுக்கே உரித்தான ஆளுமைக்கு ஏற்ற வித்தியாசமான ஸ்டைலை முயற்சி செய்யலாம். உங்கள் கிறிஸ்துமஸ் மரத்தில் கடல் உயிரினங்கள், கடல் அலைகள் மற்றும் நீல அலங்காரங்களைச் சேர்ப்பதன் மூலம் அதை தனித்துவமாகவும் அழகாகவும் வைத்திருக்க முடியும்.



விருச்சிகம் :

இந்த விருச்சிக ராசியினர் ஒரு வெள்ளை கிறிஸ்துமஸ் கருப்பொருளை தேர்வு செய்யலாம். ஸ்னோஃப்ளேக்குகளை உருவாக்க உங்கள் கிறிஸ்துமஸ் மரத்தை வெள்ளை உலோக அலங்காரத்துடன் சில சிகப்பு மற்றும் பரிசுகளுடன் அலங்கரிக்கவும்.

கிறிஸ்துமஸ் அன்று அனைத்து கிறித்துவர்களின் வீட்டிலும் இருக்கும் ஒரு ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால் அது கிறிஸ்துமஸ் மரம் தான். மேலும் கிறிஸ்துமஸ் வரப்போகிறது என்று சொன்னாலே, அனைத்து கிறித்துவர்களும் தங்கள் வீடுகளை அலங்கரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதில் முக்கியமாக கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பார்கள். இது இந்த பண்டிகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் மேலே சொன்ன ராசிக்காரர்கள் அவர்களுக்கு செட் ஆகும் கிறிஸ்மஸ் மரங்களை செய்தால் அவர்களுக்கான பலன் தானாக வந்து சேரும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Christmas, Christmas tree, Rasi Palan, Zodiac signs

அடுத்த செய்தி