Home /News /lifestyle /

கிறிஸ்துமஸ் 2021 : உங்கள் வீட்டை அழகாக அலங்கரிப்பது எப்படி?

கிறிஸ்துமஸ் 2021 : உங்கள் வீட்டை அழகாக அலங்கரிப்பது எப்படி?

கிறிஸ்துமஸ் 2021

கிறிஸ்துமஸ் 2021

கிறிஸ்துமஸ் பண்டிகையை பிரம்மாண்டமாகக் கொண்டாடினாலும், எளிமையாகக் கொண்டாடினாலும், அதன் முக்கிய பகுதியாக கிறிஸ்துமஸ் மரங்கள், மாலைகள் மற்றும் தோரணங்கள் என்று வீட்டு அலங்கரத்துக்கே முக்கியத்துவம் இருக்கும்.

    இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நெருங்கி விட்டது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். ஒவ்வொரு பண்டிகைக்கும் வீட்டை சுத்தம் செய்து பிரத்யேகமாக அலங்கரிப்போம். அதே போல, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய பகுதி, வீடு முழுக்க கண்கவரும் வண்ணம் அலங்கரிப்பதாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை பிரம்மாண்டமாகக் கொண்டாடினாலும், எளிமையாகக் கொண்டாடினாலும், அதன் முக்கிய பகுதியாக கிறிஸ்துமஸ் மரங்கள், மாலைகள் மற்றும் தோரணங்கள் என்று வீட்டு அலங்கரத்துக்கே முக்கியத்துவம் இருக்கும். இந்த ஆண்டு, உங்கள் வீட்டை அழகாக அலங்கரிப்பது எப்படி என்பதற்கான டிப்ஸ் இங்கே.

    கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அலங்காரங்கள் கிறிஸ்துமஸ் மரம் இன்றி கிறிஸ்துமஸ் இல்லை. பாரம்பரியமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஃபிர் அல்லது பைன் மரங்கள் இடம்பெறும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கே உயிரூட்டுவதாக இந்த மரங்கள் அமையும். ஆனால், நீங்கள் உண்மையான மரங்கள் போலவே செயற்கை மரங்களையே பயன்படுத்தலாம். பல்வேறு வகையான செயற்கை மரங்கள் கிடைக்கின்றன. இந்த மரங்களில் அலங்கார மணிகள், செயற்கை பூக்கள், தெர்மாகோல் பந்துகள், சிறிய பரிசுப் பெட்டிகள், வண்ண வண்ண நட்சத்திரங்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கலாம்.

    மரத்தில் அலங்கரிக்கும் பொருட்களை பல வண்ணங்களில் தேர்வு செய்யலாம் அல்லது இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் கொண்ட வண்ணத் தீம் பயன்படுத்தி, அலங்கரிக்கலாம்.

    பல்வேறு வடிவத்தில் கிடைக்கும் வண்ண வண்ண சர விளக்குகளைக் கொண்டு, உங்கள் வீட்டின் உட்புற அலங்காரம் மட்டுமல்லாமல், வெளிப்புறத்தையும் ஜொலிக்க வைக்கலாம்.

    டின்செல் மாலைகள்

    வண்ணப்பூக்களால் தொடுக்கப்படும் மலர் மாலைகளைப் போல, செயற்கை அலங்காரப் பொருட்களால் ஒரு மெல்லிய ஃபாயிலில் டின்செல் மாலைகள் செய்யப்படும். கிறிஸ்துமஸ் வந்துவிட்டதை இந்த மாலைகளின் அலங்காரம் பிரபதிலிக்கும். பல வண்ணங்களில், அளவு மற்றும் நீளங்களில் கிடைக்கும் இந்த மாலைகளை நீங்கள் தோரணங்களாக கட்டி மகிழலாம்.

    கிறிஸ்துமஸ் ரீத்

    டின்செல் மாலைகளைப் போலவே, ஆனால் வட்ட வடிவத்தில் இருப்பது தான் கிறிஸ்துமஸ் ரீத். கிறிஸ்துமஸ் ரீத் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகையே இல்லை என்று கூறலாம். இலைகள், பூக்கள், பழங்கள் மற்றும் மணிகளால் தயாரிக்கப்படும் இந்த வட்ட வடிவ ரீத், வாழ்க்கை சுழற்சியை மற்றும் அன்பைக் குறிக்கிறது.

    கிறிஸ்துமஸ் ஸ்டாக்கிங்க்ஸ்

    கிறிஸ்துமஸ் என்றாலே, பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்கள் இன்றியமையாதவை. சிவப்பும் வெள்ளையும் தான் சாண்டா கிளாஸ் ஆடையின் நிறங்களாகும். எனவே, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வீடு முழுவதும் வெவ்வேறு வடிவத்தில் ஸாக்ஸ் வடிவ ஸ்டாக்கிங்குகளைத் தொங்க விடலாம். சாண்டா கிளாஸ் இந்த ஸ்டாக்கிங்குகளில் குழந்தைகளுக்கான பரிசுகளை அளிப்பார். குழந்தைகள் அறை, சமையல் அறை, வரவேற்பறை, உணவு மேஜை ஆகிய இடங்களை இந்த ஸ்டாக்கிங்குகளால் அலங்கரிக்கலாம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chirstmas

    அடுத்த செய்தி