அனைவரது வீட்டு சமையல் அறையிலும் உருளைக்கிழங்கு இன்றியமையாதது. அனைத்து குழந்தைகளும் விரும்பமாக சாப்பிடும் உணவு ரெசிபிகளில் உருளைக்கிழங்கு முக்கிய இடத்தில் உள்ளது. இதனால் எப்போதும் உருளைக்கிழங்கு வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் நீண்ட நாள் சேமித்து வைக்கும்போது, உருழைக்கிழங்கானது அதன் புத்துணர்வை இழந்து படிப்படியாக முளைக்கத் தொடங்குகின்றன. உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் பிரெஷ்சாக இருக்க சில எளிய வழிகளை பின்பற்ற வேண்டும் என செஃப் குணால் கபூர் விளக்குகிறார். இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் அளித்துள்ளார். அந்த சிம்பிள் குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
“உருளைக்கிழங்கு மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை விட நீண்ட காலம் நீடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால், சரியாக சேமித்து வைக்காவிட்டால் அவை பச்சை தளிர்களை முளைக்க ஆரம்பித்து அவற்றின் புத்துணர்ச்சியையும், சுவையையும் இழந்துவிடும். உருழைக்கிழங்கை எவ்வாறு ஒழுங்காக சேமிப்பது என்று உங்களுக்குத் தெரிந்தால், அவை வாரங்கள் அல்லது மாதங்கள் கூட பிரெஷ்சாக இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.
உருளைக்கிழங்கை சரியாக சேமிப்பது எப்படி?
* உருளைக்கிழங்கை குளிர்ந்த, நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
* ஒரு சிலர் குளிர்சாதன பெட்டியில் உருளைக்கிழங்கை வைப்பார்கள். ஆனால் அது தவறாது. குளிர்சாதன பெட்டியில் இருக்கும் காலநிலை உருளைக்கிழங்கின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்ற காரணமாகிறது, இதன் விளைவாக இனிப்பு சுவை மற்றும் சமைக்கும்போது நிறமாற்றம் ஏற்படும். எனவே உருளைக்கிழங்கை வெளியில் வைத்தாலே போதுமானது.
* உங்கள் வீட்டில் அதிக வெப்பமான பகுதிகள் மற்றும் சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களில் உருளைக்கிழங்குகளை சேமித்து வைப்பதை தவிர்க்கவும். வெளிச்சம் குறைந்த இருண்ட இடத்தில் சேமித்து வைக்கலாம்.
View this post on Instagram
* உருளைக்கிழங்கின் தோலில் பச்சையாக நிறமாறுவதற்கு சோலனைன் என்ற வேதிப்பொருளை உருவாக்குவது தான் காரணம், உருளைக்கிழங்கை அதிக வெளிச்சத்தில் வைத்தால் இது இயற்கையான எதிர்வினையால் இப்படி மாறுகிறது.
* சோலனைன் உருளைக்கிழங்கில் கசப்பான சுவையை உருவாக்குகிறது, மேலும் இதனை அதிக அளவில் சாப்பிட்டால் நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உருளைக்கிழங்கில் லேசாக பச்சை நிறம் இருந்தால் சமைத்து சாப்பிடுவதற்கு முன் தோலின் பச்சை பகுதிகளை வெட்டி விடுங்கள். அதிகமாக இருந்தால் அதனை பயன்படுத்த வேண்டாம்.
* உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் பிரெஷ்சாக இருக்க துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காகித பைகளில் வைக்கலாம்.
சிக்கன் குழம்பு சுவையில் உருளைக்கிழங்கு கிரேவி : சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்
* நீங்கள் உருளைக்கிழங்குகளை வாங்கி வந்தவுடன் அவற்றை கழுவி விட்டு சேமித்து வைக்க கூடாது. ஈரப்பதம் அவை விரைவில் கெட்டுப்போக வழிவகுக்கும்.
* உருளைக்கிழங்கில் சிறு சிறு முளைகள் இருந்தால், உருளைக்கிழங்கு வளர ஆரம்பிக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். உருளைக்கிழங்கை சமைப்பதற்கு முன் முளைகளை வெட்டி விடுங்கள். முடிந்தவரை முளைப்பதற்கு முன்னர் சாப்பிடுவது நல்லது. இதற்கு மிகவும் குளிர்ச்சியான இடங்களில் உருழைக்கிழங்குகளை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cooking tips, Potato