HOME»NEWS»LIFESTYLE»home interior how to sprout methi seeds benefits of sprouted methi for diabetes 2 esr ghta

நீரிழிவு நோய்க்கு அதிமருந்தான வெந்தய கீரை.. வீட்டிலேயே எளிதாக வளர்க்க சூப்பரான டிப்ஸ்..

வெந்தய கீரையைத் தொடர்ந்து 50 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

நீரிழிவு நோய்க்கு அதிமருந்தான வெந்தய கீரை.. வீட்டிலேயே எளிதாக வளர்க்க சூப்பரான டிப்ஸ்..
வெந்தய கீரை
  • Share this:

வெந்தயத்தில் (Fenugreek seeds) ஏராளமான ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. ஆனால் வெந்தயக் கீரையை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை. வெந்தய கீரை நம் உடலில் ஏற்படும் பல முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கிறது. வெந்தயக் கீரையை வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா செய்வது மட்டுமின்றி கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவார்கள். இரத்த சோகைக்கு அற்புத மருந்து இது, அதோடு பித்தத்தையும் குறைக்கும்.

தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. மேலும் நீரிழிவுக்கு மருந்தாக உள்ளது. வெந்தயம் இந்தியாவின் பல உணவு தயாரிப்புகளில் மசாலாவாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை சுவையில் சற்று கசப்பானவை, எனவே இந்த வெந்தயம் மற்ற விதைகளைப் போல பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை பலரும் இதை விரும்பியும் சாப்பிடுவதில்லை.

ஆனால் நீங்கள் வெந்தய விதைகளை முளை விட்டு சாப்பிட்டால் அவற்றின் கசப்பு நீங்கி, அவை ஜீரணிக்க எளிதாக இருக்கும், மேலும் வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகளும் பெருகும். வெந்தய கீரையில் உள்ள அதிகபட்ச அளவு ஊட்டச்சத்துக்களைப் பெற நீங்கள் பாசிப்பருப்பை முளைகட்டுவதைப் போலவே, உங்கள் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மை பயக்கும் வகையில் வெந்தய விதைகளையும் முளைக்க வைக்கலாம்.



வெந்தயக்கீரையை எளிமையாக வீடுகளிலேயே தேவைக்கு ஏற்ப வளர்த்துக் கொள்ளலாம். வீடுகளில் இருக்கக் கூடிய பயனற்ற டப்பாக்கள் மற்றும் தகரங்கள் அல்லது தொட்டிகளில் சிறிது மண்ணை போட்டு அதில் வெந்தய விதைகளை தூவி தினசரி நீர் தெளித்து வர வெந்தயக்கீரை வீட்டிலேயே நினைத்த மாத்திரத்திலேயே கிடைக்கும். கீரையாக வளர்ந்த வெந்தயம் பயன்தர சுமார் 10-13 நாட்கள் ஆகும். எனவே 5-6 தொட்டிகளில் மண் நிரப்பி 10 நாள் இடைவெளியில் வெந்தயத்தை தூவி தினசரி நீர் தெளித்து வந்தால் வாரம் ஒரு நாள் வெந்தயக்கீரை தொடர்ச்சியாக கிடைத்து விடும். இதை வாரம் 2 முறை சாப்பிட்டு வர நீரிழிவு கட்டுக்குள் இருக்கும் மேலும் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும்.



வெந்தயக் கீரையும் நீரிழிவு நோயும்.

* வெந்தயக்கீரை லவங்கப்பட்டையின் பண்புகளை ஒத்து இருக்கிறது இதனால் நீரிழிவு நோயை எதிர்க்கும் ஆற்றல் இதில் அதிகம் காணப்படுகிறது. நீரிழிவு நோயை போல் மிகவும் மோசமான இதய பிரச்சனைகளுக்கும் இந்த வெந்தயக்கீரை நல்ல பலனை அளிக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியமாகும்.

* வெந்தய கீரையைத் தொடர்ந்து 50 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.

* இந்த வெந்தய கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது. இதன் ஹைபோகிளைசெமிக் பண்புகள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை மேம்படுத்துவதிலும் குளுக்கோஸ் அளவை குறைக்கவும் பயன்படுகிறது.

* வெந்தய இலையில் உள்ள நார்ச்சத்துக்கள் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்தை மெதுவாக உறிஞ்சுகின்றன. இதனால் டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது.

குளிர்காலத்தில் இஞ்சி டீ குடிப்பதால் உங்களுக்கே தெரியாமல் இத்தனை நன்மைகளைப் பெறுகிறீர்கள்..

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு நாட்களாவது இந்த வெந்தயக் கீரையை எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு வெந்தயத்தையும் ஊறவைத்து, ஒரு இன்ச் அளவுக்கு முளை கட்ட வைத்து, வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

* ஒரு இன்ச் அளவுக்கு முளை கட்டிய பின் சாப்பிட ஆரம்பித்தால், கசப்பே இருக்காது. கொஞ்சம் இனிப்புச் சுவையுடன் தான் இருக்கும்.
* வெந்தயக் கீரையின் இலைகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதனால், ரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவு குறைகிறது.

* கீரையில் உள்ள அமினோ அமிலம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் எப்போதும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

முளைத்த வெந்தய விதைகளின் நன்மைகள்:

* முளைத்த பிறகு, வெந்தய விதைகள் மென்மையாகவும், ஜீரணிக்க எளிதாகவும் மாறும்.

* சிறந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு வெந்தய கீரைகள் அதிக சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கிறது.

* மாதவிடாய் வலி, பிரச்சினைகளைப் போக்கும். 47 வயதுக்கு மேற்பட்டப் பெண்கள் மாதவிடாய் நின்ற பிறகு, அவர்களின் உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். மனதுக்கும் உடலுக்கும் சக்தியைத் தரும்.

* முளைகட்டிய வெந்தய கீரைகளை சாப்பிட்டால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுவதற்கும், இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

* வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.

* வெந்தயத்திற்கு கொலஸ்ட்ராலை குறைக்கும் சக்தி உள்ளது. இதில் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளன. இது செரிமானத்தை அதிகரித்து கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பித்த அமிலங்களின் சுரப்பை குறைக்கிறது.

* பத்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

* முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.

* உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும்.

* வெந்தயத்தில் ஏராளமாக நீரில் கரையக் கூடிய நார்ச்சத்துகள் உள்ளன.

இது குடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி சீரண சக்தியை மேம்படுத்தி மலம் கழித்தலை எளிதாக்குகிறது. இது குடல் சுருங்கி விரிதலை தூண்டி குடல் வழியாக மலத்தை எளிதாக வெளியேற்றுகிறது.

 

 
Published by:Sivaranjani E
First published: