லாக்டவுன் நேரத்தில் தண்ணீர் அதிகம் செலவாகிறதா..? சேமிக்க வழிகள் இதோ...!

ஆய்வில் ஒரு மாதத்திற்கு 4 பேர் கொண்ட வீட்டில் 30,000 லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுகிறதாம்.

லாக்டவுன் நேரத்தில் தண்ணீர் அதிகம் செலவாகிறதா..? சேமிக்க வழிகள் இதோ...!
தண்ணீர் அதிகம் செலவாகிறதா..?
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வரும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் இந்த நேரத்தில் தண்ணீர் செலவு அதிமாகலாம்.

அதேசமயம் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டி அதிக தண்ணீரை செலவழிக்கக் கூடும். இந்த சமயத்தை தண்ணீரை சேமித்து , சுகாதாரத்தையும் காப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஆய்வில் ஒரு மாதத்திற்கு 4 பேர் கொண்ட வீட்டில் 30,000 லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுகிறதாம். அதாவது ஒருநாளைக்கு ஒருவர் 250 லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இதில் 3 - 4 லிட்டர் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்தினாலும் மீதம் உள்ள தண்ணீரை 100 முறை மற்ற விஷயங்களுக்காகவே செலவு செய்கிறோம் என்கிறது.


காய்கறிகளை வாங்கி வந்தாலோ அல்லது சுகாதாரம் கருதி வெளியிலிருந்து வாங்கி வரும் பொருட்களை கழுவினால் குழாய் தண்ணீரை திறந்தபடி கழுவாதீர்கள். வாளி அல்லது பாத்திரத்தில் தண்ணீர்ப் பிடித்து அதில் அலசிவிட்டு பயன்படுத்தலாம்.

’ஸ்டவ் பர்னர்’ புதிது போல் பளபளக்க வேண்டுமா..? இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க..!

ஆய்வுப் படி ஒருவர் பாத்ரூம் பயன்பாட்டிற்கு மட்டும் ஒருநாளைக்கு 30-50 லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகிறார். எனவே வீட்டில் தண்ணீர் சேமிப்பு கருதி ஃபிளஷ் செய்யாமல் குழாயில் பிடித்து ஊற்றுவது நல்லது.வாஷிங் மிஷின் தண்ணீரும் 20 - 22% தண்ணீரை உறிஞ்சுகிறதாம். அந்த நீரைக்கூட முடிந்தால் இரண்டாவது வாஷில் வரும் தண்ணீரை வாளியில் பிடித்து டாய்லெட்டில் ஊற்ற பயன்படுத்தலாம். இதனால் கழிவறைகளில் சுத்தமான நீரை ஊற்றுவதை குறைக்கலாம்.பாத்திரம் கழுவும் தண்ணீரை செடிகள் இருந்தால் அவற்றிற்கு ஊற்றலாம். கிச்சன் குழாயில் aerators taps பொருத்தலாம். இதனால் குறைந்த நீரே செலவாகும். மேலும், டைனிங் ஹாலில் கைக்கழுவும் குழாயிலும் பொருத்தலாம்.

ஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்தி இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா..?

தண்ணீரை சுத்தீகரிக்கும் மிஷின் வெளியேற்றும் நீரை சேமித்து கார், பைக் ஆகியவற்றை கழுவ பயன்படுத்தலாம். வீட்டைத் துடைக்க, சுத்தம் செய்யக் கூட பயன்படுத்தலாம்.

துணி துவைக்க, மாப், மற்ற அழுக்குகளை சுத்தம் செய்ய கெமிக்கல் முறையிலான டிட்டர்ஜெண்டுகள் அதிக தண்ணீரை செலவழிக்கலாம். அதற்கு மாற்றாக இயற்கை வழியைப் பின்பற்றலாம். பேக்கிங் சோடா, எலுமிச்சை என பல இயற்கை வழிகள் உள்ளன.

பார்க்க :

 
First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading