வெயில் காலத்தில் ஏசியால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கிறதா... இப்படி செய்தால் குறைக்கலாம்..!

கடுமையான வெயில் தாக்கத்தால் பல வீடுகள் படுக்கை அறை மட்டுமன்றி ஹாலிலும் ஏசி போட்டுக்கொள்கின்றனர். இதன் விளைவு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கிறது.

news18
Updated: May 18, 2019, 4:00 PM IST
வெயில் காலத்தில் ஏசியால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கிறதா... இப்படி செய்தால் குறைக்கலாம்..!
ஏ.சி
news18
Updated: May 18, 2019, 4:00 PM IST
வெயில் நாட்கள் வந்துவிட்டாலே குளுகுளு ஏசி ஆஃபர் என்று சம்மர் சேல் களைக்கட்டத் தொடங்கும். அதுவும் பருவநிலை மாற்றத்தால் இந்த வருடம் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பல வீடுகள் படுக்கை அறை மட்டுமன்றி ஹாலிலும் ஏசி போட்டுக்கொள்கின்றனர். அது இரவு பகல் என்று அணையாமல் ஒடிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பதென்று பார்க்கலாம்.


இரவில் தூங்கும் முன் மட்டும் ஏ.சி போட்டு அறையைக் கூலாக வைத்துக்கொள்ளுங்கள். நடு இரவில் ஏ.சியை அணைத்துவிடலாம். அதற்குப் பதிலாக சீலிங் ஃபேன் பயன்படுத்தலாம்.
மாலை நேரம் தொடங்கியதும் அறையின் வெப்பம் வெளியேற இயற்கைக் காற்றை உள்ளே அனுமதியுங்கள். அதற்கு ஜன்னல் மற்றும் கதவை திறந்து வையுங்கள்.Loading...


ஏ.சி இருக்கும் அறையில் வெப்பம் வெளியேற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வைக்காதீர்கள். உதாரணமாக ஃபிரிஜ், வாஷிங் மிஷின், மைக்ரோவேவ் போன்ற அதிக வெப்பத்தை வெளியேற்றும் பொருட்களை ஏ.சி இருக்கும் அறையில் வைக்க வேண்டாம்.


இரவு தூங்கும்போது லேப்டாப், கணினி, டிவி போன்றவற்றைப் பயன்படுத்திய பின் அணைத்துவிட்டுத் தூங்கவும். இல்லையெனில் அதிலிருந்து வெளியேறும் வெப்பத்தால் ஏ.சி கூடுதலாக இயங்கும்.


சீலிங் லைட் அணைந்துவிட்டுத் தூங்கவும்.


மாலை நேரத்தில் வீட்டின் சீலிங் மொட்டை மாடியாக இருந்தால் சுற்றிலும் தண்ணீர் தெளித்து வையுங்கள். இதனால் வெப்பம் குறையும். மேலே அறை இருக்கும் பட்சத்தில் அந்த அறையை கூலாக வைத்துக்கொள்ள ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். சீலிங் ஃபேன் ஓட விடுங்கள்.ஏ.சி இருக்கும் அறையை அதிக பொருட்களால் அடைத்து வைக்காதீர்கள். அலங்காரம் என்கிற பெயரில் லைட்ஸும் அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள்.


கதவு , ஜன்னல்களில் விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அறையின் காற்று வெளியேறுகிறதா என்று கவனித்து அதை அடைத்துவிடுங்கள். கதவுக்கு அடியில் நிச்சயம் இடைவெளி இருக்கும். அதை அடைக்க அடியில் துணி வைத்து மூடுங்கள். வெளிக்காற்று உள்ளே வராது. உள் காற்றும் வெளியேறாது.


மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏ.சி ஃபில்டரை மாற்றுங்கள். வாரம் ஒரு முறை ஃபில்டரை சுத்தம் செய்யுங்கள். ஏ.சி  மெக்கானிக் அறிவுரைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


இதையும் படிக்க :

ஏசி வாங்கப் போறீங்களா? அப்போ இதை படித்துவிட்டுச் செல்லுங்கள்!

குளு குளு ஏசியால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா?

வெயில் காலத்தில் ஏசியே தேவையில்லை... இந்த பத்து விஷயங்களை டிரை பண்ணுங்க...!


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...