காலையில் பரபரப்பாக சமைக்கும்போது இஞ்சி தோலை உரிக்க சிரமமாக உள்ளதா..? இந்த ட்ரிக்ஸை டிரை பண்ணுங்க..!

இஞ்சி தோல் உரிக்கும் முறை | Ginger peeling tricks

தேநீர் முதல் அசைவ உணவுகள் வரை இஞ்சி சேர்க்காத உணவு பொருட்களே இல்லை எனலாம்

  • Share this:
இந்தியாவில் உள்ள அனைவரது சமையலறைகளிலும் பொதுவாக இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. தேநீர் முதல் அசைவ உணவுகள் வரை இஞ்சி சேர்க்காத உணவு பொருட்களே இல்லை எனலாம். புதிய இஞ்சியின் சுவையும், நறுமணமும் அனைவருக்கும் விருப்பமான ஒன்று. இஞ்சியின் சுவைக்காக அதனை சமையலில் சேர்க்க அனைவரும் விரும்புகிறோம், ஆனால் இஞ்சியின் தோலை உரிப்பது, சற்று கடினமானது. ஏனெனில் இஞ்சி ஒரு ஒழுங்கற்ற வடிவத்தை கொண்டுள்ளது, இது தோலுரிப்பதை சிறிது கடினமாக்குகிறது.

இதன் காரணமாக கண்டிப்பாக இஞ்சியின் தோலை உரித்து தான் பயன்படுத்த வேண்டுமா? என்ற சந்தேகமும் சிலருக்கு எழுகிறது. இஞ்சி என்பது ஒரு வேர் தாவரமாகும். இது நிலத்தடியில் வளரும் என்பதால் மண் நிறைந்திருக்கும். எனவே தோலை அகற்றுவது நல்லது. மேலும் தோலை அகற்றாமல் பயன்படுத்தினால் உணவு கசப்பான சுவையில் இருக்கும்.

இஞ்சியின் தோலை சுலபமாக உரிக்க கூடிய சில எளிமையான வழிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்....

ஸ்பூனை பயன்படுத்தவும் :

இஞ்சியை எளிமையாக உரிக்க உங்கள் ஸ்பூனை கத்தியை ஒரு கரண்டியால் மாற்றவும், அதன் விளிம்பைப் பயன்படுத்தி மெல்லிய தோலை மெதுவாக உரிக்கவும். இது மிகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். நீங்கள் ஸ்பூனுக்கு பதிலாக சீஸ் ஸ்பூனையும் பயன்படுத்தலாம். இஞ்சி தோலின் அடுக்கு மிகவும் மெல்லியதாக இருப்பதால், கூர்மையான கத்தி தேவையில்லை.

வெளிப்புற அடுக்கை நறுக்கவும் :

நீங்கள் மிகவும் விரைவாக இஞ்சியின் தோலை உரிக்க விரும்பினால், இஞ்சியின் வெளிப்புற அடுக்கை கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி நறுக்கலாம். ஆனால் இந்த முறையில் இஞ்சியின் சதை பகுதி வீணாகும். ஆனால் உங்களுக்கு அதிக நேரம் இல்லையென்றால் இது ஒரு சுலபமான வழியாகும். இஞ்சி தோலை தேநீர் தயாரிக்க பயன்படுத்தலாம்.இஞ்சி பீலரை பயன்படுத்துங்கள் :

இஞ்சி பீலர் எனும் தோலுரிப்பான்கள் சந்தையில் எளிதாகக் கிடைக்கும். அவை தடிமனான அடுக்கை கூட எளிதாக உரிக்க உதவுகின்றன. எனவே அவற்றை வாங்கி சுலபமாக உரித்து விடலாம்.

வெளிப்புற அடுக்கைத் தோலுரித்த பிறகு, இஞ்சியை எப்படி வெட்டுவது என்பது நீங்கள் தயாரிக்கும் உணவு வகையை பொறுத்தது. இஞ்சியை மெல்லிய நாணயம் வடிவ துண்டுகளாக நறுக்க வேண்டும். உங்கள் தேவை என்றால் அவற்றை தடிமனாக வெட்டலாம். உங்கள் உணவுக்கு இஞ்சியின் மெல்லிய கீற்றுகள் தேவைப்பட்டால், மெல்லிய கீற்றுகளாக வெட்டவும். சட்னிக்கு என்றால் அவற்றை துண்டு துண்டாக வெட்டினால் போதுமானது.

தக்காளியை அளவுக்கு மீறி உணவில் சேர்ப்பதால் இவ்வளவு பாதிப்புகள் இருக்கா..?

நீண்ட நாள் இஞ்சி பிரெஷாக இருக்க செய்ய வேண்டியது :

முதலில் இஞ்சியை நன்கு கழுவ வேண்டும். இஞ்சியை கழுவ ஓடும் நீரை பயன்படுத்தவும். அதில் இருக்கும் தூசுகள், மணல் துகள்கள் அனைத்தும் வெளியேறும் வரை தேய்த்துக் கொண்டே இருங்கள்.

இஞ்சியை குளிர்சாதன பெட்டியில் சரியான முறையில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். எப்போதும் இஞ்சியை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து பிரீஸரில் வைக்கவம். இப்படி செய்தால் இஞ்சி 6 மாதங்களுக்கு கூட கெடாமல் இருக்கும்.இஞ்சியின் நன்மைகள் :

* நுரையீரல், கருப்பை, புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இஞ்சியில் நிறைந்து உள்ளது

* இஞ்சியில் உள்ள ஆன்டிஹிஸ்டமைன் பண்புகள் ஒவ்வாமைகளை குணப்படுத்த உதவும் பயனுள்ள மருந்தாக விளங்குகின்றன.

* செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும். இதை உட்கொள்வது செரிமானத்தை தூண்டி விட உதவும். நாம் உட்கொள்ளும் உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, ஜீரணிக்க இஞ்சி பயன்படுகிறது.

* உடலில் காணப்படும் இரத்த குளுக்கோஸ் அளவுகளை குறைக்க இஞ்சி பயன்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நீரழிவு நோயாளிகளுக்கு இஞ்சி சிறந்த தேர்வாக இருக்கும்.

* சில நேரங்களில் சாப்பிட்ட உடன் எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் பிரச்சினை உண்டாகலாம். இந்த நெஞ்செரிச்சல் பிரச்சினை வேதனைக்கு உரியது. இதை சரி செய்ய இஞ்சி உதவுகிறது.

 
Published by:Sivaranjani E
First published: