ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Toilet Cleaner : வீட்டிலேயே டாய்லெட் கிளீனர் தயாரிக்கலாம்..! செய்முறைகள் இதோ...

Toilet Cleaner : வீட்டிலேயே டாய்லெட் கிளீனர் தயாரிக்கலாம்..! செய்முறைகள் இதோ...

காட்சி படம்

காட்சி படம்

டாய்லெட்டை சுத்தம் செய்வதற்கென்று கடைகளில் ஏராளமான கெமிக்கல் கிளீனர்கள் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சுகாதாரத்தை பேணுவதில் டாய்லெட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதும் ஒன்று. அன்றாடம் காலை, மாலை என இருவேளைகளிலும் டாய்லெட்டை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் துர்நாற்றம் வீசுவதுடன் கிருமிகள் உருவாகி, உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். டாய்லெட்டை சுத்தம் செய்வதற்கென்று கடைகளில் ஏராளமான கெமிக்கல் கிளீனர்கள் உள்ளன. குறைந்த விலையில் இருந்து காஸ்ட்லியான விலை வரை கிடைக்கின்றன.

உங்களுக்கு கெமிக்கல் கிளீனர் பயன்படுத்துவற்கு ஒவ்வாமை என்றால், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தரமான டாய்லெட் கிளீனரை தயார் செய்ய முடியும். டாய்லெட் மட்டுமல்லாது பைப்களில் படிந்திருக்கும் கறை, பாத்திரம் கழுவும் சிங்கில் இருக்கும் கறைகளையும் சுத்தப்படுத்திக்கொள்ளலாம்.

வீட்டிலேயே டாய்லெட் கிளீனரை செய்வதற்கு தேவையான பொருட்களை இங்கே பார்க்கலாம்:

மரத்தில் செய்யப்பட்ட ஸ்பூன், ஒரு கண்ணாடி கிண்ணம், பேக்கிங் சோடா, சிட்ரிக் அமில தூள், கிருமிகளை நீக்கும் எண்ணெய், காய்ச்சி வடிகட்டிய வெள்ளை வினிகர், புனல், 2 கண்ணாடி ஜாடிகள், மார்க்கர், தேக்கரண்டி, டாய்லெட் பிரஷ், ஒரு மைக்ரோஃபைபர் துணி, சிலிகான் மோல்ட்.

டாய்லெட் கிளீனர் செய்முறை

1. ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 2 கப் பேக்கிங் சோடாவை எடுத்து, அதில் 1/2 கப் சிட்ரிக் அமில தூள் சேர்த்து மர கரண்டியால் கலக்கவும்.

2. தேயிலை எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், ஆரஞ்சு எண்ணெய் மற்றும் பைன் எண்ணெய் ஆகியவை நுண்ணுயிரிகளை கிருமி நீக்கம் செய்பவை. இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். அதன்படி, கிருமியை நீக்குவதற்காக வாங்கிவைக்கப்பட்டுள்ள எண்ணெய்யை கண்ணாடி கிண்ணத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

லாக்டவுனில் ஜிம் மூடியுள்ளதா..? கலோரிகளை குறைக்கும் ஜிம்முக்கு நிகரான இந்த வீட்டு வேலைகளை செய்யுங்கள்..!

3. தற்போது, ஏற்கனவே கலக்கி வைத்துள்ள கலவையில், அத்தியாவசிய கிருமிநீக்கி எண்ணெயை சேர்க்க வேண்டும். ஒரு டீ ஸ்பூன் எடுத்து நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் எண்ணெய்யை, ஒவ்வொரு துளியாக சேர்த்து கலவை கலக்கிக்கொண்டே இருங்கள். பின்னர், அந்த கலவையை ஒரு கண்ணாடி கிண்ணத்துக்கு மாற்றம் செய்துவிடுங்கள்.

4. தற்போது 20 விழுக்காடு வெள்ளை வினிகரை எடுத்து மற்றொரு ஜாடியில் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்

5. இந்த வெள்ளை வினிகர், டாய்லெட்டை சுத்தம் செய்யும்போது தனியாக பயன்படுத்தப்படும்.

6. எஞ்சியிருக்கும் வினிகரை பேக்கிங் சோடாவுடன் கலக்கி, சிலிகான் மோல்டில் ஊற்றி அச்சுஏற்றவும். 24 மணி நேரம் கழித்தபின்னர் அந்த வினிகர், பேங்கிங் சோடா கலந்த அச்சை எடுத்து ஒரு ஜாடியில் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கழிப்பறையை சுத்தம் செய்வது எப்படி?

1. முதலில், தண்ணீர் உற்றி கழிப்பறையை சுத்தமாக கழுவ வேண்டும். டாய்லெட் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

2. ஜாடியில் இருக்கும் பேங்கிங் சோடா கலவையை டாய்லெட் முழுவதும் அப்ளை செய்யுங்கள்.

3. வாங்கி வைத்திருக்கும் பிரஷ்ஷைப் பயன்படுத்தி, டாய்லெட்டை நன்றாக தேய்த்து கழுவுங்கள்

4. தற்போது கிண்ணத்தில் இருக்கும் வெள்ளை வினிகரை டாய்லெட் முழுவதும் ஊற்றுங்கள்.

5. 5 நிமிடங்கள் காத்திருந்து மீண்டும் ஒருமுறை டாய்லெட்டை சுத்தமாக கழுவுங்கள்.

தற்போது நீங்கள் செய்த டாய்லெட் கிளீனர் மூலம் உங்கள் கழிப்பறை மிகவும் சுத்தமாக இருக்கும். வாசனையும் முகர்வதற்கு நன்றாக இருக்கும்.

First published:

Tags: Home Care, Toilet Clean