வீட்டை தினமும் துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்வது சுகாதாரமான வாழ்க்கைக்கான பிரதிபலிப்பு எனலாம். ஆரோக்கிய உணவு மட்டுமன்றி நாம் வாழும் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்வதும் இன்றியமையாதது. அந்தவகையில் வீட்டின் தரையைத் துடைக்கப் பயன்படும் ஃப்ளோர் மாப் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பனியன் டீ ஷர்ட்
ஒரு லிட்டர் காலியான ஸ்பிரைட் பாட்டில்
மெழுகு வர்த்தி
ஸ்கெட்ச்
ஸ்டீல் அல்லது கட்டைக் கொம்பு ( பழைய மாப்பின் கொம்பு இருந்தாலும் போதுமானது )
கத்தி
டீ ஷர்ட்டை தரையில் பரப்பி அதை மெல்லிய கயிறு போல் ஒவ்வொன்றாக வெட்டி எடுங்கள். கழுத்துப்பகுதியை வெட்டி எடுத்துவிடுங்கள்.
ஸ்பிரைட் பாட்டிலின் மூடியுடன் கொண்ட கழுத்துப் பகுதியை கத்தி கொண்டு வெட்டி எடுங்கள்.
வெட்டிய கழுத்துப் பகுதியைச் சுற்றிலும் துளையிட அரை மீட்டர் இடைவெளியில் மார்க் செய்து கொள்ளுங்கள். அப்படி 22 துளைகள் போட வேண்டும்.
மார்க் செய்த இடத்தில் கம்பி பயன்படுத்தி மெழுகின் நெருப்பில் காட்டி துளையிடுங்கள்.
தற்போது அந்த ஓட்டைகளில் வெட்டிய துணிகளை ஒவ்வொன்றாகக் கோர்த்து இரு முனைகளையும் முடிச்சு போடுங்கள். இவ்வாறு செய்து முடித்ததும் மாப் போன்ற தோற்றம் கிடைத்துவிடும்.
அடுத்ததாக மூடி போடும் இடத்தில் குச்சியை சொருகுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.