Explainer : மிக்ஸி ஜார் பொருட்களை சரியாக அரைக்கவில்லையா..? அதன் பிளேடுகளை கூர்மையாக்குவதற்கு நீங்களே இதை செய்யலாம்..

Explainer : மிக்ஸி ஜார் பொருட்களை சரியாக அரைக்கவில்லையா..? அதன் பிளேடுகளை கூர்மையாக்குவதற்கு நீங்களே இதை செய்யலாம்..

மிக்ஸி ஜார்

எந்த பொருளையும் சட்டென விருப்பத்திற்கு ஏற்ப அரைக்க வேண்டுமெனில் ஜாரின் பேளேடுகள் நல்ல கூர்மையான நிலையில் இருக்க வேண்டும்.

  • Share this:
    சமையலறையில் மிக்ஸி இல்லையெனில் சமைப்பவர்களுக்கு ஒரு கை இழந்துவிட்டதைப் போல்தான் தோன்றும். ஆம்..இன்று அவர்களின் வேலையை மிச்சம் செய்திருப்பதில் மிக்ஸிக்கு பெரும் பங்கு உண்டு. வேலை மிச்சம் மட்டுமன்றி நேரத்தையும் மிச்சம் செய்திருக்கிறது. இப்படி பல வகைகளில் உதவும் மிக்ஸியை பராமரிப்பது மிகவும் அவசியம். அதோடு அதில் அரைக்க உதவும் ஜார்தான் பிரதான பங்கைக் கொண்டுள்ளது.

    எந்த பொருளையும் சட்டென விருப்பத்திற்கு ஏற்ப அரைக்க வேண்டுமெனில் ஜாரின் பேளேடுகள் நல்ல கூர்மையான உபயோகத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் எந்த பொருளையும் அரைக்க முடியும். அப்படி அந்த ஜாரின் பேளேடுகளை கூர்மையாக வைத்திருக்க சில பராமரிப்பு விஷயங்களைக் கையாள வேண்டும். அவை என்னென்ன பார்க்கலாம்.



    ஜாரின் பேளேடுகளை கூர்மையாக்க என்ன செய்வது..?

    ஜாரின் பிளேடுகளை கூர்மையாக்க வீட்டில் கல் உப்பு இருப்பின் அதை ஒரு கையளவு எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் மிக்ஸியில் போட்டு ஒன்றாம் என்னில் 5 நொடிகளுக்கு திருப்பி விட்டு சுற்ற வைத்து பின் அணைத்துவிடுங்கள். இப்படியாக பத்து நிமிடங்களுக்கு மெதுவாக சுற்ற விட்டு அணைக்க பிளேடுகள் கூர்மையாகும்.

    பின் ஜாரைக் கழுவிட்டு தண்ணீர் கொஞ்சம் நிரப்பி ஒரு சுற்று சுற்றி எடுங்கள். பின் நன்கு காய வைத்துப் பயன்படுத்தலாம்.

    Explainer : ஃபிரெஷ்ஷான, நல்ல மீன்களை எப்படி பார்த்து வாங்கவேண்டும்..? உங்களுக்கான வழிகாட்டுதல் இங்கே..

    மசாலா பொருட்களை அரைத்தாலும் வெதுவெதுப்பான நீரில் சோப்பு ஆயில் கலந்து அதில் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் அலசி கழுவ வாசனை நீங்கி பிளேடுகளிலும் ஒட்டியில்லாமல் சுத்தமாக இருக்கும்.

    இப்படி மாதம் ஒரு முறை செய்தால் ஜாரின் பிளேடுகள் நீண்ட நாள் உழைக்கும். உங்களுக்கு உதவ தடைபடாமல் இயங்கும்.
    Published by:Sivaranjani E
    First published: