கருகருவென இருக்கும் தோசைக் கல்லை புதிது போல் மாற்றுவது எப்படி..?

அந்த சூடு பதத்திலேயே தேய்க்க வேண்டும். கைகளால் தேய்க்க முடியாது. ஏதேனும் கரண்டி பயன்படுத்தி பிடித்துகொண்டு தேயுங்கள்.

கருகருவென இருக்கும் தோசைக் கல்லை புதிது போல் மாற்றுவது எப்படி..?
தோசைக் கல்
  • Share this:
வீட்டில் தோசை சுட பயன்படுத்தும் தோசைக் கல் எப்போதும் எண்ணெய் பிசுக்குடன் இருக்கும். அதோடு அழுக்குப் படிந்து கருகருவென இருக்கும். அவற்றை நீக்கி எப்படி புதிதுபோல் மாற்றுவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

லெமன் சால்ட் - 1 பாக்கெட்


ஸ்கிரப்
சோப்பு
எலுமிச்சை பழம் - 1

செய்முறை :

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடேற்றுங்கள்.

சூடேறியதும். அந்த வெப்பப்பதத்திலேயே அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள்.

பின் லெமன் சால்ட் ( சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் அல்லது உப்பு பயன்படுத்தலாம் ) சுற்றிலும் தூவி இரும்பு ஸ்கிரப் கொண்டு தேயுங்கள்.

அந்த சூடு பதத்திலேயே தேய்க்க வேண்டும். கைகளால் தேய்க்க முடியாது. ஏதேனும் கரண்டி பயன்படுத்தி பிடித்துகொண்டு தேயுங்கள்.

அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மீண்டும் நன்கு தேயுங்கள்.

பின் கல்லை அடுப்பிலிருந்து எடுத்துவிட்டு அதே சூடு பதத்தில் சோப்பு, சபீனா கொண்டு ஸ்கிரப் கொண்டு தேயுங்கள்.

பின்புறம், கல் முணையில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை கூர்மையான கத்தி அல்லது கரண்டி கொண்டு தேய்த்து எடுங்கள்.

பின் மீண்டும் ஸ்கிரப் கொண்டு தேய்த்து கழுவிப் பாருங்கள். பிசுக்குகள், கருகருவென படிந்திருந்த அழுக்குகள் எல்லாம் நீங்கி புதியது போல் மாறியிருக்கும்.

பயன்படுத்தும்போது எண்ணெய் விட்டு வெங்காயம் வைத்து தேய்த்துவிட்டு பயன்படுத்துங்கள்.

இப்படி மாதம் ஒரு முறை செய்தாலே உங்கள் தோசைக்கல் எப்போதும் புதிதுபோல் இருக்கும்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 

 
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading