Home /News /lifestyle /

இரவு வெக்கையை தவிர்க்க பெட்ஷீட்டை ஃபிரிட்ஜில் வைக்கலாமா..? கோடை இரவை சமாளிக்க புதுமையான டிப்ஸ்

இரவு வெக்கையை தவிர்க்க பெட்ஷீட்டை ஃபிரிட்ஜில் வைக்கலாமா..? கோடை இரவை சமாளிக்க புதுமையான டிப்ஸ்

கோடை இரவை சமாளிக்க புதுமையான டிப்ஸ்

கோடை இரவை சமாளிக்க புதுமையான டிப்ஸ்

ஒரு ஏசி அல்லது ஏர் கூலர் அளவுக்கு மிகுந்த குளுகுளு சூழலை உங்கள் வீட்டில் ஏற்படுத்த முடியாவிட்டாலும், ஓரளவுக்கு வெப்பத்தை சமாளிக்கக் கூடிய வாய்ப்புகளை உங்கள் வீட்டிலேயே உருவாக்கிக் கொள்ளலாம்.

சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க ஏசி, ஏர் கூலர் போன்றவற்றை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதெற்கெல்லாம் வசதி இல்லை என்ற நிலையில் கோடை வெயில் உங்களை வாட்டுவது குறித்து கவலை கொள்கிறீர்களா? குறிப்பாக, வீட்டுக்கு உள்ளே அமர முடியாத அளவுக்கு புழுக்கம் நிறைந்து இருப்பது குறித்து வருத்தம் கொள்கிறீர்களா? அப்படியானால், தொடர்ந்து படியுங்கள்.

ஒரு ஏசி அல்லது ஏர் கூலர் அளவுக்கு மிகுந்த குளுகுளு சூழலை உங்கள் வீட்டில் ஏற்படுத்த முடியாவிட்டாலும், ஓரளவுக்கு வெப்பத்தை சமாளிக்கக் கூடிய வாய்ப்புகளை உங்கள் வீட்டிலேயே உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் ஏசி வைத்திருப்பவர்களும் கூட, அதை எப்போதும் பயன்படுத்திக் கொண்டே இருக்க இயலாது. விண்ணை முட்டும் அளவுக்கு கரெண்ட் பில் வந்துவிடும் என்ற அச்சத்தில் எப்போதாவது தான் அதை பயன்படுத்தி வருவீர்கள்.

அப்படியே நீங்கள் தாராளமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் கூட, கோடை காலத்தில் அவ்வபோது நிகழும் மின்வெட்டு என்பது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த கூடும். எது எப்படியாகினும், செலவின்றி வீட்டில் குளுமையை ஏற்படுத்துவதற்கு சில எளிமையான வழிமுறைகள் உண்டு. அவற்றை இப்போது பார்க்கலாம்.



ஐஸ் வாட்டர் பாட்டிலை பயன்படுத்தலாம்

கோடை காலத்தில் வீட்டில் வைத்திருக்கும் தண்ணீர் கூட சுடு தண்ணீர் போல சூடாக இருக்கும். அதை குடிக்கும் போது உங்களுக்கு வெறுப்பு ஏற்படக் கூடும். ஆகவே, மனதுக்கு இதமான குளு குளு தண்ணீரை பருகவும். வீட்டில் ஃபிரிட்ஜ் இருந்தால், வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி பயன்படுத்தலாம். அது இல்லை என்றாலும் கவலை இல்லை. மண் பானை ஒன்றை விலை கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சிறிது மணலை ஓரிடத்தில் நிரப்பி, அதன் மீது பானையை வைத்து தண்ணீரை நிரப்பி வைக்கவும். இப்போது ஜில்லென்ற தண்ணீர் தயார்.

கோடை காலத்தில் ஜலதோஷம்  பிடிப்பது கொரோனாவின் அறிகுறியா..? வித்தியாசத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

பெட்ஷீட்களை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்

கேட்பதற்கு புதுமையான ஐடியாவாக தோன்றுகிறதா. ஆம், உங்கள் பெட்ஷீட்களை ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து எடுத்து, அதை விரித்து உறங்கச் சென்றீர்கள் என்றால் குளு, குளுவென இருக்கும். அதே சமயம், பெட் ஷீட்களை நேரடியாக வைத்தீர்கள் என்றால், அதில் அழுகிய தக்காளி அல்லது ஐஸ் ஏறிய பீஸா வாடை அடிக்கக் கூடும். ஆகவே, ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃபிரிட்ஜில் வைக்கவும்.



இரவில் உடல் சூட்டை தவிர்க்க

என்னதான் இரவு நேர உடையை நீங்கள் அணிந்திருந்தாலும், அந்த சமயத்தில் உள்ளாடை அணிந்திருந்தீர்கள் என்றால், அது உங்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக, பிறப்பு உறுப்பு அமைந்துள்ள பகுதிகளில் வியர்வை சுரப்பிகள் அதிகம். ஆகவே, இரவு தூங்கும் சமயத்தில் கொஞ்சம் ‘காற்றோட்டமாக’ விட்டு விடுங்கள்.

சில சமயங்களில் உங்கள் பெட்ஷீட்டை தண்ணீரில் பிழிந்து எடுத்து, அதன் மீது எப்போதும் போல ஈரம் அற்ற ஒரு டவலை விரித்து, அதன் மீது படுத்து உறங்கலாம். இது வெப்பத்தை குறைக்க உதவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: AC, Air Cooler, Summer Heat

அடுத்த செய்தி