என்னது... உப்பில் கூட கலப்படமா..? FSSAI எச்சரிக்கை... கண்டறியும் வழிகள் என்ன..?

உப்பு

உப்பு சுவைக்காக மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கான அவசியப் பொருளாகவும் உள்ளது. அதாவது உடலுக்கு தேவையான அயோடினை பெற வேண்டுமெனில் அதை எளிதான முறையில் உப்பிலிருந்துதான் பெற முடியும்.

  • Share this:
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்னும் பழமொழியை உணர்ந்த பலருக்கும் உப்பின் அருமை தெரியும். நம் இனிப்பு உணவுகளில் கூட ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால்தான் அந்த ஸ்வீடின் சுவை கூடும். அந்த வகையில் உப்பு நம் உணவின் பிரிக்க முடியாத அங்கம்.

உப்பு சுவைக்காக மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கான அவசியப் பொருளாகவும் உள்ளது. அதாவது உடலுக்கு தேவையான அயோடினை பெற வேண்டுமெனில் அதை எளிதான முறையில் உப்பிலிருந்துதான் பெற முடியும்.

இந்த அயோடின் மூளை சுருசுருப்பு, உடல் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துதல், உடல் வெப்பநிலையை பராமரித்தல் இப்படி பல வேலைகளை செய்கிறது. எனவே அயோடின் குறைபாடு இல்லாமல் பாதுகாப்பது இந்த உப்புதான்.உணவு கலப்படச் சட்டம், உற்பத்தியில் அயோடின் கலந்த உப்பு 30 பிபிஎம் -க்கும் குறைவாகவும் நுகர்வோர் அளவில் 15 பிபிஎம் -க்கும் குறைவாக இருக்கக்கூடாது என்று கூறுகிறது. ஒரு சில பிராண்டுகள் அயோடினை முறையாக அதில் சேர்ப்பதில்லை. அதாவது அவை பொதுவான உப்பில் அயோடின் கலந்த உப்பு கலக்கப்படுகிறது. இதனால் உடலுக்கு பல ஆபத்துகளை உண்டாக்கும். எனவே உப்பு கலப்படத்தை எப்படி கண்டறிவது என உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.ஒரு உருளைக்கிழங்கை இரண்டு துண்டுகளாக வெட்டுங்கள். அதில் வீட்டில் பயன்படுத்தும் உப்பை தூவுங்கள்.

ஒரு நிமிடம் கழித்து அதன் மீது இரண்டு சொட்டு எலுமிச்சை சாறை ஊற்றுங்கள்.

காய்கறிகள் ஃபிரெஷ்ஷாக இருக்க சாயம் பூசப்படுகிறதா..? கண்டறியும் முறை என்ன..? FSSAI விளக்கம்..!

சிறிது நேரத்தில் அதன் நிறம் நீலமாக மாறினால் அது கலப்படம் நிறைந்த உப்பு. ஒருவேளை எந்த நிறமும் மாறாமல் அப்படியே இருந்தால் அது கலப்படம் அற்ற தூய உப்பு.

உங்கள் ஆரோக்கியத்தையும், குடும்பத்தினர் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உடனே இந்த டெஸ்டை செய்து பாருங்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published: