வீட்டில் செல்லப் பிராணி வளர்ப்பால் துர்நாற்றம் மூக்கை துளைக்கிறதா..?

வளர்ப்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கவில்லை என்றாலும் வீட்டிற்கு வரும் விருந்தினரை பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும்.

வீட்டில் செல்லப் பிராணி வளர்ப்பால் துர்நாற்றம் மூக்கை துளைக்கிறதா..?
செல்லப் பிராணி
  • News18
  • Last Updated: September 28, 2019, 11:35 AM IST
  • Share this:
வீட்டில் செல்லப் பிராணிகளின் வளர்ப்பு துர்நாற்றத்தை வீடு முழுவதும் பரப்பிவிடும். அது வளர்ப்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கவில்லை என்றாலும் வீட்டிற்கு வரும் விருந்தினரை பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும். அதற்கு என்ன செய்யலாம்..?

காற்றை உள்ளே அனுமதியுங்கள் : வீட்டு ஜன்னல் ,கதவுகளை மூடி வைக்காமல் திறந்து வையுங்கள். இதனால் துற்நாற்றம் சற்று வெளியேறும்.

வீட்டை துடைத்தல் : வீட்டுத் தரையை நல்ல வாசனை நிறைந்த திரவியம் கொண்டு துடையுங்கள். அடிக்கடி துடைப்பதால் துர்நாற்றம் மட்டுமன்றி கிருமிகளும் அகன்றுவிடும்.


ஸ்க்ரீன் , சோஃபா உறைகளை சுத்தம் செய்யுங்கள் : ஜன்னல் திரை, வாசல் திரை, சோஃபா மீது போடப்பட்டுள்ள உறை, தரையின் கார்பெட் ஆகியவற்றை துவைத்து சுடு தண்ணீரில் அலசுங்கள். இதனால் பிராணியின் முடிகள் இருந்தாலும் நீங்கும். துர்நாற்றமும் இருக்காது.செல்லப் பிராணியின் துணிகளை சுத்தம் செய்யுங்கள் : செல்லப் பிராணி தூங்கும் பெட், துணி போன்றவற்றை தினமும் அலசி வெயிலில் நன்கு காய வைப்பதால் துர்நாற்றம் இருக்காது.நறுமணத்தைப் பரப்புங்கள் : பாட் பூரி, வாசனை நிறைந்த மெழுகுவர்த்தி,வாசனை எண்ணெய் போன்ற நறுமணம் கமழும் பொருட்களை வீடு முழுவதும் வையுங்கள். இதனால் உங்கள் செல்லப்பிராணி சிறுநீரை உள்ளேயே கழிக்கும் பழக்கம் இருந்தாலும் அதன் துர்நாற்றம் சற்று குறையும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading