அடுத்த முறை வெளியே இளநீர் குடித்தால் தூக்கி எறியாமல் பத்திரமாக வீடிற்குக் கொண்டு வாருங்கள். இப்படி இயற்கையான முறையில் செடிகள் வளர்க்க உதவும். பிளாஸ்டிக் மாற்றுகளை நோக்கி நகரும் நமக்கும் இந்த யோசனை நல்ல பலன் தரும்.
அதேபோல் தேங்காய் சிரட்டைகளைக் கொண்டும் செடிகள் வளர்க்கலாம். இப்படி குடுவை, சிரட்டைகளை செடி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் போது அவை செடிகளுக்கு கூடுதல் ஆரோக்கியத்தை அளிப்பதாக கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் தாவரவியல் வல்லுநர் சுபிர் பேரா தெரிவிக்கிறார்.
அதில் “இந்த சிரட்டை, குடுவைகள் எளிதில் மக்கும் தன்மைக் கொண்டது. அவை மக்கினாலும் மண்ணில் புதைந்து உரமாக மாறுமே தவிற மண் வளத்தை பாதிக்காது. அவை தேங்காயின் அதீத நார்ச் சத்துகளைக் கொண்டுள்ளன. அதுமட்டுமன்றி எளிதில் தண்ணீரை உறிஞ்சி செடிக்கு அவ்வபோது தண்ணீர் அளிக்க ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மைக் கொண்டது.
காற்று உள்ளே புகவும் ஏற்றது. இதனால் செடி விரைந்து வளர உதவும். அதுமட்டுமன்றி இந்த இளநீர் குடுவையில் காப்பர், ஸிங்க், இரும்பு பொன்றச் சத்துகள் உள்ளதால் அவை செடிகள் வளர கூடுதல் ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அவை மரமாக வளரும் செடிகளுக்கு வேர்கள் வளர தடையாக இருப்பின் மாற்றி நட முயற்சித்தாலும் எளிதில் வேர்களுக்கு மட்டும் வழிவிட்டு உடைத்து அப்படியே மண்ணில் நட்டு வைக்கலாம்“ என்கிறார்.
எனவே வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கிறீர்கள். உங்கள் பால்கணியை செடிகளால் அலங்கரிக்கிறீர்கள் எனில் இப்படி மாற்றுவழியில் முயற்சித்துப் பாருங்கள். வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளையும் இந்த இளநீர் குடுவை, தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி நல்ல அலங்கரிப்பை தரலாம்.
எப்படி செய்வது ?
தேங்காய் குடுவைகளில் செடி வைக்க நினைத்தால், குடுவையின் வாய்ப் பகுதியை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். பின் வீட்டில் ஸ்குரூ ட்ரைவர் இருந்தால் அதை பயன்படுத்தி குடிவையின் ஒரு முனையில் குத்தி மறு முனையில் வருமாறு துளையிடுங்கள். இதனால் காற்று உள்ளே செல்ல ஏதுவாக இருக்கும். பின் மண்ணை நிரப்பி செடியை நடுங்கள்.
இதேபோல் தேங்காய் சிரட்டையில் நார்கள் இல்லாதவாறு சுரண்டிக் கொள்ளவும். அழகுக்கு தேவைப்பட்டால் அதில் பெயிண்ட் செய்து கொள்ளலாம். பின் சிரட்டையில் உட்பகுதியில் மண் நிரப்பி செடி நட்டு வளர்க்கலாம்.
பார்க்க : வயிற்றுப் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுப்பது எப்படி ?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.