சமையலறையை சிங்க்கை பளிச்சிட செய்வதற்கான சிறந்த வழிகள்

சிங்க் அசுத்தம் கிருமிகள், பூச்சிகள் காரணமாக பல சுகாதார அபாயங்களை அது உண்டாக்கலாம்

Web Desk | news18
Updated: August 21, 2019, 4:31 PM IST
சமையலறையை சிங்க்கை பளிச்சிட செய்வதற்கான சிறந்த வழிகள்
சமையலறை சிங்க் சுத்தம்
Web Desk | news18
Updated: August 21, 2019, 4:31 PM IST
சமையலறையில்  சுத்தமாக வைக்கப்பட வேண்டிய மிக முக்கியமான  இடங்களில் சிங்க் ஒன்றாகும். கிருமிகள், பூச்சிகள் காரணமாக பல சுகாதார அபாயங்களை அது உண்டாக்கலாம் என்பதால் சிங்கை அலட்சியமாக விட முடியாது.

தினசரி சுத்தம் செய்தல்: உங்கள் சிங்கை தினசரி சுத்தம் செய்யுங்கள். அனைத்து பாத்திரங்கள் மற்றும் மற்றவற்றை கழுவிய பிறகு எல்லா நீரையும் ஊற்றுவது சிங்கை சுத்தம் செய்யப் போவதில்லை, அதிலுள்ள கிருமிகளையும் நீக்கப் போவதில்லை. தினசரி சுத்தம் செய்வது பெரிய விஷயமாகத்  தெரிந்தாலும், அவ்வப்போது சிங்க்குகளை சுத்தம் செய்வது முக்கியமாகும். மிகவும் ஆழமாக சுத்தம் செய்ய வேண்டியதில்லை. பொதுவான சுத்தம் செய்யும் பழக்கம் போதும்.
 

வடிகால் குழாயையும் கவனிக்க வேண்டும்: இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு சிட்ரஸ் மற்றும் வினிகர் ஐஸ் கியூப் ஆகியவற்றை டிரைனில் போடவும். குழாயில் ஏதேனும் தூக்கியெறிந்த பொருட்கள் இருந்தால், இந்த ஐஸ் கியூப் அவற்றை அகற்றி விடும். முடிந்தால் சிங்க்கிற்காக ஒரு ட்ரைன் கவரை வாங்கவும்.Loading...

முடிந்தவரை சீக்கிரமாக பாத்திரங்களை கழுவவும்: எல்லா நேரத்திலும் சிங்க்கை காலியாக வைத்திருப்பது நல்லது. நீங்கள் சமையல் மற்றும் சாப்பிட்டு முடித்தவுடன் பாத்திரங்களை கழுவுவதை உறுதி செய்யுங்கள். இதன் மூலம் கிருமிகள் அதிகம் பெருகியிருக்காது. நீங்களும் அதை சுத்த செய்ய போராட வேண்டியதில்லை.
First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...