Home /News /lifestyle /

வீட்டில் ’மைக்ரோஃபைபர் துணி’ இருந்தால் இத்தனை விஷயத்திற்கு பயன்படுத்தலாம்..!

வீட்டில் ’மைக்ரோஃபைபர் துணி’ இருந்தால் இத்தனை விஷயத்திற்கு பயன்படுத்தலாம்..!

மைக்ரோஃபைபர் துணி

மைக்ரோஃபைபர் துணி

கிச்சன் பயன்பாட்டிற்கு உகந்த துணி. அழுக்கை அடியோடு நீக்கும். கீரல்கள் விழாது. நல்ல பளபளப்பு தரும். ஈரத்தை சட்டென உறிஞ்சுக்கொள்ளும்.

    மென்மையாக இருக்கும் இந்த மைக்ரோஃபைபர் துணி வீட்டில் இருந்தால் பல விஷயங்களுக்கு உதவும். எப்படினு தெரிஞ்சுக்கனுமா..? கீழே ஸ்கிரால் பன்னுங்க..!

    பியூட்டி : முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் மேக்அப்-ஐக் கலைக்க இந்த துணியை வைத்து ஸ்கிரப்பிங் செய்யலாம்.

    கறை நீக்கி : சோபா, டைனிங் டேபி, கிச்சன் , கிளாஸ் பொருட்களை சுத்தம் செய்ய இந்த துணியைப் பயன்படுத்தலாம். காஃபி , டீ ஊற்றிக்கொண்டாலும் இதில் துடைத்தால் சட்டென உறிஞ்சுக்கொள்ளும். கிச்சன் பயன்பாட்டிற்கு உகந்த துணி

    ஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்தி இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா..?

    வீட்டுத் தரையை துடைக்கும் மாப் மைக்ரோஃபைபர் துணியாக என கேட்டு வாங்குங்கள். தரையின் கறைகளை நன்கு நீக்கும். ஈரத்தை உறிஞ்சும்.



    தூசு நீக்கி : நகை, கடிகாரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களில் உள்ள அழுக்கு அல்லது, பளபளவென பராமரிக்க இந்த துணி கொண்டு துடைக்கலாம்.

    தலை துவட்ட : தலையில் உள்ள ஈரத்தை உடனடியாக உறிஞ்சுவிடும் என்பதால் தலைக்கு குளித்தால் இந்த துணியைப் பயன்படுத்தலாம். மைக்ரோஃபைபர் துணியில் டவல் வாங்குங்கள்.

    வீட்டைத் துடைக்கப் பயன்படும் ஃப்ளோர் மாப்: நீங்களே செய்ய எளிய டிப்ஸ் இதோ..!

    பாத்ரூம் : பாத்ரூமில் உள்ள சுவரின் டைல்ஸ் கறைகளை துடைக்கவும், கழுவவும் மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தலாம்.

    கார் துடைப்பான் : கார் , பைக் துடைக்கவும் இந்த துணியைப் பயன்படுத்தலாம். அழுக்கை அடியோடு நீக்கும். கீரல்கள் விழாது. நல்ல பளபளப்பு தரும். ஈரத்தை சட்டென உறிஞ்சுக்கொள்ளும்.

    பார்க்க :

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி