வீட்டில் பூஜை பாத்திரங்கள் புதிது போல் பளபளக்க இப்படி தேய்த்து பாருங்கள்..!

கடவுளை வழிபடும் முக்கிய நாட்களில் பூஜையறையையும், பூஜை பாத்திரங்களையும் தேய்த்து சுத்தப்படுத்துவோம்.

வீட்டில் பூஜை பாத்திரங்கள் புதிது போல் பளபளக்க இப்படி தேய்த்து பாருங்கள்..!
பூஜை பாத்திரங்கள்
  • Share this:
வீட்டில் வெள்ளிக்கிழமை, நல்ல நாள், அம்மாவாசை, பௌர்ணமி என கடவுளை வழிபடும் முக்கிய நாட்களில் பூஜையறையையும், பூஜை பாத்திரங்களையும் தேய்த்து சுத்தப்படுத்துவோம்.

பெரும்பாலானோர் வீடுகளில் பூஜை பாத்திரங்கள் பித்தளையில்தான் இருக்கும். அந்த பூஜை பாத்திரங்களை தேய்த்து எடுப்பதுதான் பெரும் சவாலாக இருக்கும். ஆனால் சிரமமே இல்லாமல் எப்படி புதிதுபோல் தேய்ப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :


அரிசி மாவு - 1 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
புளி தண்ணீர் பேஸ்ட் - 2 ஸ்பூன்விபூதி - 2 ஸ்பூன்

குறிப்பு : மேலே குறிப்பிட்டவற்றை உங்கள் வீட்டில் உள்ள பூஜை பாத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டிக்கொள்ளுங்கள்.செய்முறை :

முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, உப்பு மற்றும் புளி பேஸ்ட் மூன்றையும் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக பூஜை பாத்திரங்களில் உள்ள எண்ணெய்களை வழித்துவிட்டு அவற்றை தண்ணீரில் முக்கி குங்குமத்தை நீக்குங்கள்.

பெண்கள் இந்த 5 வகை பிராக்களை வைத்திருந்தால் எந்த உடைக்கும் அணிந்துகொள்ளலாம்..!

பின் தேங்காய் நார் அல்லது ஏதேனும் நார் கொண்டு கலந்து வைத்துள்ள புளி பேஸ்டில் தொட்டு தேயுங்கள். பளபளப்பாக மாறியிருப்பதை பார்ப்பீர்கள்.

பின் கழுவியதும் காட்டன் துணியால் ஒவ்வொன்றையும் துடைத்துவிட்டு இறுதியாக அதே காட்டன் துணியில் விபூதியை கொஞ்சம் கொஞ்சமாக தொட்டு தேய்த்துப் பாருங்கள். புதிதுபோல் ஜொலிப்பதை உங்கள் கண்களாலேயே நம்ப முடியாது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading