Home /News /lifestyle /

சரியான முறையில் மெத்தை, தலையணையை சுத்தம் செய்வது எப்படி?

சரியான முறையில் மெத்தை, தலையணையை சுத்தம் செய்வது எப்படி?

மெத்தை, தலையணை

மெத்தை, தலையணை

Bed Clean : ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை உங்கள் மெத்தையை ஆழமாக சுத்தம் செய்வது அவசியம்.

உங்களுக்கு தூக்கமும், ஓய்வும் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உங்கள் மெத்தையும், தலையணையும் சுத்தமாக இருப்பதும் முக்கியமே.

மெத்தையை சுத்தம் செய்வது ஏன் மிகவும் முக்கியம்?

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை உங்கள் மெத்தையை ஆழமாக சுத்தம் செய்வது அவசியம். வழக்கமான பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்தல், தூசி, அழுக்கு மற்றும் டெட்-ஸ்கின் செல்களை நீக்கும், அதையும் நீங்கள் செய்யவில்லை என்றால், ஒவ்வாமையைத் தூண்டும் தூசிப் பூச்சிகளுக்கு நல்ல தீனி தான்!

வியர்வை மற்றும் உடல் எண்ணெய்கள் வழியாகவும் கூட மெத்தையில் கறை ஏற்படலாம் துர்நாற்றம் வீசலாம். இப்படி ஒரு மெத்தை அழுக்காக பாதுக்காப்பானதாக இல்லாமல் போக பல காரணங்கள் வழிகள் உள்ளன. இந்த இடத்தில் தான் மெத்தைக்காக நீங்கள் செய்ய வேண்டிய அல்லது செய்யக்கூடாத சில விஷயங்களை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மெத்தையை ஆழமாக சுத்தம் செய்வது எப்படி:?- பெட்டை அகற்றி, உங்கள் கட்டிலை நன்றாக துடைக்கவும் / கழுவவும்
- மெத்தையின் வாசனையை நீக்க பேக்கிங் சோடாவை தெளிக்கலாம். சில மணிநேரங்களுக்கு அதை அப்படியே விடவும்.
- தெளித்த பேக்கிங் சோடாவை வேக்யூம் செய்யுங்கள்
- மெத்தை புரட்டக்கூடியதாக இருந்தால், முந்தைய மூன்று படிகளை மீண்டும் செய்யவும்.
- மெத்தையை திறந்த ஜன்னலுக்கு அருகில் வைக்கவும் அல்லது முடிந்தவரை நன்றாக காற்று வீசும் இடத்தில் வைக்கவும். சூரிய ஒளி படும் பட்சத்தில் இன்னும் சிறப்பு!

சிறுநீர் மற்றும் பிற கசிவுகளை சுத்தம் செய்வது எப்படி?- முதலில் ஷீட்களை சலவை இயந்திரம் வழியாக கழுவவும்.
- ஒரு துணி அல்லது காகித துண்டுகளைப் பயன்படுத்தி, மெத்தையில் இருந்து முடிந்த அளவு திரவத்தை துடைக்கவும். தேய்க்காமல், மிகவும் மெதுவாக இதைச் செய்ய முயற்சிக்கவும், ஏனெனில் அது மெத்தையில் ஆழமாக பரவலாம்.
- ஒயிட் வினிகர் (அல்லது என்சைம் சார்ந்த சோப்பு) மற்றும் தண்ணீரை சரிக்கு சமமாக கலந்து அதைக்கொண்டு கறையை சுத்தம் செய்யவும். முடிந்த வரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலைப் பயன்படுத்தவும், இது மெத்தையை நனைக்காமல் பார்த்துக்கொள்ளும்.
- சிறிது பேக்கிங் சோடாவை எடுத்து கறையின் மேல் தெளிக்கவும். இதை குறைந்தது 7-8 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். அது உலர்ந்ததும், வேக்யூம் செய்யவும்.

வியர்வை கறையை சுத்தம் செய்வது எப்படி?வியர்வை கறைகள் மிகவும் பிடிவாதமாக இருந்தால், தண்ணீர், லிக்விட் சோப்பு மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை சமமாக கலந்து தெளிக்கவும். 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் ஒரு காகித தூண்டால் அதை துடைக்கவும். பின் சிறிது பேக்கிங் சோடாவை தெளிக்கலாம், அதை பல மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) அப்படியே விட்டு, பின் வேக்யூம் செய்யவும்.

மெத்தையில் உள்ள தூசி பூச்சிகளை சுத்தம் செய்வது எப்படி?தூசிப் பூச்சிகளின் கழிவுகள் தும்மல், அரிப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளைத் தூண்டும். அவைகள் டெட்-ஸ்கின் செல்களை தின்னும், ஈரப்பதமான காற்றில் இருந்து நீரைப் பெறும் என்பதால் உங்கள் மெத்தையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

ALSO READ |  இரவு நிம்மதியான தூக்கத்திற்கு படுக்கை அறையை இந்த 5 வழிகளில் தயார் செய்யுங்கள்..!

- உங்கள் படுக்கை விரிப்புகளை தவறாமல் கழுவ வேண்டும்
- இறுக்கமான நெசவு கொண்ட மெத்தை விரிப்புகளை மற்றும் தலையணை கவர்களை பயன்படுத்துவும்.
- 130 டிகிரி பாரன்ஹீட் (54 செல்சியஸ்) வெப்பநிலையில் ஷீட்களைக் கழுவினால் இன்னும் சிறப்பு.

கடைசியாக நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:- மெத்தைக்கென ஒரு கவர் மிகவும் அவசியம்
- தற்செயலான கசிவுகளை உடனே சுத்தம் செய்யவும்.
- படுக்கை விரிப்பை வாரம் ஒருமுறை வெந்நீரில் கழுவவும்.
- மெத்தையில் ஏதேனும் புதிய கறைகள் தென்படுகிறதா என்று அடிக்கடி பார்க்கவும்
- ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மெத்தையை ஆழமாக சுத்தம் செய்து வேக்யூம் செய்யவும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Home clean

அடுத்த செய்தி