• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீட்டிற்கு புது கேஸ் ஸ்டவ் வாங்கும்போது நீங்கள் எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்..? சில டிப்ஸ்

வீட்டிற்கு புது கேஸ் ஸ்டவ் வாங்கும்போது நீங்கள் எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்..? சில டிப்ஸ்

கேஸ் ஸ்டவ்

கேஸ் ஸ்டவ்

பர்னர் தூரம் என்பது இரண்டு பர்னர்களுக்கு இடையிலான தூரம். நீங்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பர்னர்களுடன் ஒரு அடுப்பை

  • Share this:
    தற்போது அனைவரது வீட்டிலும் கேஸ் அடுப்பு உள்ளது. கால மாற்றத்திற்கேற்ப பல்வேறு டிசைன்கள் உள்ளன. முன்னர் ஒன்று மற்றும் இரண்டு பர்னர்கள் கொண்ட அடுப்புகள் இருந்த நிலையில் தற்போது மூன்று, நான்கு பர்னர்கள் மற்றும் கிளாஸ் மாடல்களில் அடுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அடுப்பு வாங்குவதற்கு முன்னர் ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம், அப்போது தான் நீங்கள் வாங்கும் அடுப்பு பாதுகாப்பானதாகவும், நீண்ட நாட்கள் நிலைக்க கூடியதாகவும் இருக்கும்.

    அடுப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

    பர்னர்களின் எண்ணிக்கை :

    அடுப்பின் அளவு மற்றும் பர்னர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு குடும்பத்தின் தேவையை பொறுத்து வித்தியாசப்படுகிறது. கணவன் மற்றும் மனைவி இருக்கும் குடும்பத்தினருக்கு இரண்டு பர்னர் அடுப்பு போதுமானது, கூட்டு குடும்பமாக இருந்தால் நான்கு பர்னர் உள்ள அடுப்பையும், குழந்தைகள் மட்டும் இருப்பவர்கள் மூன்று பர்னர் உள்ள அடுப்பையும் வாங்கி பயன்படுத்தலாம்.

    பர்னர்களின் தூரத்தை சரிபார்க்கவும் :

    பர்னர் தூரம் என்பது இரண்டு பர்னர்களுக்கு இடையிலான தூரம். நீங்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பர்னர்களுடன் ஒரு அடுப்பை வாங்கினாலும் ஒரே நேரத்தில் பெரிய பாத்திரங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். ஒரு நேரத்தில் பெரிய பாத்திரங்களை யன்படுத்த நேரிடும் போது இது சிக்கலை ஏற்படுத்தும். பொதுவாக இந்த பிரச்னை மூன்று பர்னர்கள் உள்ள அடுப்பை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும். நான்கு பர்னர் அடுப்பில் இந்த சிக்கல் இல்லை, ஏனெனில் இதில் இரண்டு எதிர் பர்னர்களில் ஒரே நேரத்தில் சமைக்க உங்களை அனுமதிக்கிறது.



    பித்தளை அல்லது அலுமினிய பர்னர்கள் :

    பித்தளை மற்றும் அலுமினிய பர்னர்கள் கொண்ட அடுப்பில் எதனை பயன்படுத்துவது என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்படும். பெரும்பாலானோர் அலுமினிய பர்னர்கள் கொண்ட அடுப்பை வாங்க விரும்புகின்றனர், ஆனால் சமீபத்தில் பித்தளை பர்னர்கள் அதிகமாக வருகிறது. இரண்டிற்கும் இடையே ஒரு சில வித்தியாசம் இருந்தாலும், இரண்டும் பாதுகாப்பானவை.

    பாசிட்டிவ் எனர்ஜி தரும் மணி பிளான்ட்..‌ எந்த இடத்தில் வைத்து வளர்த்தால் நல்லது..?

    பித்தளை பர்னர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளன மற்றும் மழை மற்றும் வெயில் களங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். அதே நேரத்தில் அலுமினிய பர்னர்களுக்கு அடிக்கடி பராமரிப்பு தேவைப்படுகிறது.

    ஐஎஸ்ஐ சான்றிதழ் :

    ஐஎஸ்ஐ இந்திய தர நிர்ணய நிறுவனம் (ஐஎஸ்ஐ) வழங்கும் தரத்தின் ஒரு அடையாளமாகும். எரிவாயு அடுப்புகள் உட்பட அனைத்து மின்னணு வீட்டு உபகரணங்களுக்கும் ஹால்மார்க் அவசியம். நீங்கள் ஒரு எரிவாயு அடுப்பை வாங்கும் போது, ஐஎஸ்ஐ சான்றிதழை சரிபார்க்கவும், ஏனெனில் கேஸ் அடுப்பு உற்பத்தியாளர் ஐஎஸ்ஐ சான்றிதழை பெற அதற்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள். எனவே ஐஎஸ்ஐ சான்றதழ் உள்ள கேஸ் அடுப்பை வாங்குவது நல்லது.



    அடுப்பு டிசைன் :

    எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கியமான விஷயம் நாம் வாங்கும் அடுப்பின் டிசைனை சரியாக தேர்ந்தெடுப்பது தான். கடினமான கண்ணாடி கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள அடுப்புகள், எஃகு மூலம் தயாரிக்கப்படும் சில்வர் நிறத்தில் இருக்கும் எரிவாயு அடுப்புகள் என இரண்டு வகைகள் உள்ளது. எஃகு அடுப்பின் அடுப்பு வெப்பம் அடைந்தாலும், உலோகம் ஆயுள் அளிக்கிறது மற்றும் சேதத்திற்கு வாய்ப்பில்லை.

    கண்ணாடி அடுப்புகள் பார்க்க அழகாக இருந்தாலும், விரைவில் உடையக்கூடிய மற்றும் அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே அவற்றில் எது உங்களுக்கு சரியாக இருக்கும் என்பதை பார்த்து வாங்கலாம். ஒரு கேஸ் அடுப்பை வாங்கும் போது கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பல்வேறு உணவுகளை வெவ்வேறு வெப்பநிலையில் சமைக்க ஏதுவாக குறைவான மற்றும் அதிகமான தீயை கட்டுப்படுத்தும் அமைப்புகள் இருக்கிறதா? என பார்த்து வாங்க வேண்டும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: