முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வீட்டு கால் மிதிகளை பளபளவென துவைக்க இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க..!

வீட்டு கால் மிதிகளை பளபளவென துவைக்க இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க..!

வீட்டு கால் மிதி

வீட்டு கால் மிதி

பின் அதை நன்குக் கரைத்து ஊற வைத்துள்ள கால் மிதிகளை தற்போது இந்த சோப்புக் கலவை தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :

வீட்டின் அனைத்து அறைகளிலும் கால்களை துடைக்க பயன்படுத்தும் கால்மிதிகளில்தான் அழுக்கு அதிகம் சேர்ந்திருக்கும். அழுக்கு நீக்க எவ்வளவு தேய்த்தாலும் பளபளக்கவில்லை என உணர்ந்தால் அடுத்த முறை இப்படி செய்து பாருங்க...

சுடு தண்ணீரை அரை பக்கெட் ஊற்றி அதில் கால் மிதிகளை நன்கு உதறி மூழ்க வையுங்கள். அரை மணி நேரம் ஊர வையுங்கள்.

பின் மீண்டும் மற்றொரு ஃபிரெஷ் சுடு தண்ணீர் அரை பக்கெட் ஊற்றி அதில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா, சோப்பு பவுடர் 2 ஸ்பூன், டெட்டாயில் 3 மூடி எனக் சேர்த்து நன்குக் கலந்துகொள்ளுங்கள். சோப்பு பவுடர் கரைய 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள்.

பின் அதை நன்குக் கரைத்து ஊற வைத்துள்ள கால் மிதிகளை தற்போது இந்த சோப்புக் கலவை தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். இதிலும் குறைந்தது அரை மணி நேரம் ஊற வேண்டும். தண்ணீர் சூடாக இருக்க வேண்டும்.

பின் அதை வாஷிங் மிஷினில் போடலாம் அல்லது கைகளில் துவைக்கலாம். துவைத்து நன்கு வெயில் படும்படி காய வைத்து எடுத்துப்பாருங்கள். முன்பை விட கால்மிதிகள் பளிச்சென இருக்கும்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


பார்க்க :

First published: