கலைஞர் வீட்டு சமையல் என்றாலே அது மருத்துவம் மற்றும் மண் மணம் மாறாதது என்கிற கருத்து பலருக்கும் உண்டு. கலைஞர் முதல் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் வரை உணவு என்று கேட்டாலே வீட்டு உணவுகளைதான் அதிகம் விரும்புவோம் என்பார்கள். காரணம் வீட்டு உணவுதான் ஆரோக்கியம் என்பார்கள். அப்படி உணவில் சமரசம் செய்துகொள்ளாத கலைஞர் வீட்டு சமயலறை அதாவது துர்கா ஸ்டாலின் கோலோச்சும் சமையலறையின் டூர், யூடியூபின் தனியார் சேனல் ஒன்றில் பகிரப்பட்டது. அதிலிருந்து சில தொகுப்புகள் உங்களுக்காக..
துர்கா ஸ்டானின் சமையலறை மிகவும் எளிமையானது என்பது பார்க்கும்போதே தெரிகிறது. தேவையற்ற எதையும் குவித்து வைக்காமல் சமையலுக்கு தேவையானதை மட்டும் வைத்திருக்கிறார். குறிப்பாக மண் பாணை, அம்மிக்கல், அலுமினியப் பாத்திரங்கள் என எளிமையான சமையறை பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார்.
அந்த வீடியோவில் துர்கா ஸ்டாலின் மீன் குழம்பு வைக்கிறார். அதில் வீட்டில் அரைக்கும் குழம்பு மிளகாய் தூள்தான் பயன்படுத்துவோம். தனியா அதிகம் சேர்த்துக்கொள்வோம். காரம் விரும்ப மாட்டோம் என்கிறார். குறிப்பாக மீன் குழம்பு என்றாலே மண் சட்டியில்தான் வைப்பார்களாம்.
துர்கா, பொடிகளை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என்பதை அந்த வீடியோவில் பகிர்கிறார். அதாவது பருப்பு பொடி, எள்ளு பொடி, ஏலக்காய் பொடி என பொடிகள் நிறைய அரைத்து வைத்துக்கொள்வேன் என்கிறார்.
அதுமட்டுமன்றி கொரோனா காலத்தில் இருந்து வீட்டிலேயே மூலிகைப் பொடியும் அரைத்து வைத்துக்கொள்கிறாராம். அதுவும் செய்தித் தாளில் வந்த குறிப்பைப் பார்த்து அதன்படி ஆடாதோடை இலை, கற்பூரவல்லி, ஏலக்காய், சுக்கு , மிளகு, திப்பிலி, அதிமதுரம், கிராம்பு ஆகியவற்றை காய வைத்து அரைத்து பொடியாக்கி வைத்துக்கொள்வாராம். ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை ஸ்பூன் பொடி சேர்த்து அரை கிளாஸாக வரும் வரை கொதிக்க வைத்து வீட்டில் அனைவரும் குடிப்பார்களாம். இனிப்பு தேவைப்பட்டால் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து குடிக்கலாம் என்கிறார்.
துர்கா ஸ்டாலின் இன்றும் சமையலறை புத்தகக் குறிப்புகளை பின்பற்றும் பழக்கத்தை கொண்டிருக்கிறார். அவ்வப்போது பேரன் பேத்திகள், மருமகள்கள் வந்தால் பேக்கிங் செய்வதுண்டு, பாஸ்தா, பிரியாணி செய்வார்கள் என்கிறார்.
Also Read : சுண்டைக்காய் தரும் 5 நன்மைகளை மறக்காம தெரிஞ்சுக்கோங்க..!
தொப்பாளர் கிருத்திகா எந்த உணவு நன்றாக சமைப்பார் என்று கேட்டதற்கு “ பிரியாணி நன்றாக செய்வார். அதுவும் காய்கறி சேர்த்து, கொண்டைக்கடலை, காராமணி என பயறு சேர்த்த பிரியாணி நன்றாக செய்வார் என்கிறார். குறிப்பாக கிருத்திகா செய்வதிலேயே தாய்க்கறி மிகவும் பிடித்த உணவு என்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் கூட அதை விரும்பி சாப்பிடுவாராம். எப்போதாவது அந்த தாய்க்கறி சாப்பிட தோன்றினால் ஃபோன் செய்து கேட்பாராம். பின் அதை கிருத்திகா சமைத்து கொடுத்துவிடுவார்” என்கிறார் துர்கா ஸ்டாலின்.
பின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமைக்க தெரியுமா என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே ”அவருக்கு முதலில் சுடு தண்ணீர் வைக்க தெரியுமா என்று கேளுங்கள். அவர் கிட்சன் பக்கமே வந்தது கிடையாது” என சிரித்துக்கொண்டே பதிலளிக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durga Stalin, Home Tour, Kitchen Tips, MK Stalin