சமையலை விட சமையல் பாத்திரங்களில் நாம் காட்டும் அக்கறை தான் உடல் நலத்தை பேணி காக்க உதவுகிறது. ஏனெனில் சமையல் பாத்திரங்களில் கலர் மற்றும் பளபளப்பிற்காக பூசப்படும் சில கெமிக்கல் பூச்சுக்கள் குடலை பதம் பார்க்க கூடும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் செரிமானத்திற்கு முக்கிய உறுப்பான குடலை பாதுகாப்பது அவசியம். அப்படி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வாா்ப்பு இரும்பில் செய்யப்பட்ட பாத்திரங்களை சமைப்பதற்குப் பயன்படுத்துவது நல்லது.
ஆரம்பத்தில் தோசைக்கல், வடை சட்டி ஆகியவற்றில் மட்டுமே கிடைத்து வந்த வார்ப்பிருப்பு பாத்திரங்கள் தற்போது நவீன யுகத்திற்கு ஏற்றார் போல் கடாய், தவா, பேன், கிரில் பேன், டச் ஓவன் என விதவிதமாக கிடைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும், வார்ப்பிருப்பு எனப்படும் காஸ்ட் அயர்ன் பாத்திரங்களில் எளிதில் துருபிடிக்க கூடியவை என்பது மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் துருப்பிடிப்பதால் உங்கள் வார்ப்பிரும்பு பாத்திரத்தை வெளியே எறியாதீர்கள். வார்ப்பிரும்பை சுத்தம் செய்ய எளிமையான செயல்முறையும் பல தலைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. சமையல் அறையில் இருக்கும் மலிவான பொருட்களைக் கொண்டு உங்கள் சமையல் பாத்திரங்களை பாதுகாக்கவும், வார்ப்பிரும்புகளிலிருந்து துருவை அகற்றவும் முடியும்.
காஸ்ட் அயர்ன் பாத்திரங்கள் துருபிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்...
இந்த மேட்டர் தெரிஞ்சா பாதாம் தோலை இனிமேல் தூக்கி போடவே மாட்டீங்க..!
காஸ்ட் அயர்ன் பாத்திரங்களை சுத்தப்படுத்துதல்:
எந்த பாத்திரமாக இருந்தாலும், அதனை நல்ல விதத்தில் பராமரிக்க பாத்திரங்களை கழுவுவது முக்கியமானது. ஈரப்பதத்தைத் தவிர்க்க, கழுவிய பின் உங்கள் பாத்திரத்தை விரைவாக உலர வைக்க வேண்டியது அவசியம்.கடாயில் இன்னும் ஈரப்பதம் இருந்தால், அதை உலர வைக்க குறைந்த வெப்பத்தில் பர்னரில் வைக்கவும். நீங்கள் அதை நேரடியாக சூரிய ஒளியில் வைக்கலாம், உள்புறம், வெளிப்புறம் என இரண்டு புறமும் நன்றாக திருப்பி வைத்து காய வைப்பதை கட்டாயம் மறந்துவிடாதீர்கள். பின்னர் சுத்தமான துணியை பயன்படுத்தி துடைக்கவும்.
பேக்கிங் சோடாவை பயன்படுத்தவும்:
காஸ்ட் அயர்ன் பாத்திரங்களில் படித்துள்ள துருவை அகற்ற, பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.
அதற்கு முதலில், இரண்டு கப் தண்ணீரை மெதுவாக கொதிக்க வைத்து, அதில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது, இந்த கரைசலில் பழைய பிரஷை வைத்து நனைத்து, காஸ்ட் அயர்ன் பாத்திரத்தில் துருப்பிடித்த பகுதியில் சில நிமிடங்கள் தேய்க்கவும். அதை 20 நிமிடங்கள் அப்படியே ஊறவைக்கவும்.
பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் வரும் ஆபத்துகள்..!
அதன் பிறகு, பாத்திரத்தில் ஒட்டி இருக்கும் கறையை அகற்ற சான்ட் பேப்பர் கொண்டு நன்றாக தேய்க்கவும். பாத்திரத்தில் படித்திருக்கும் துரு மெதுவாக உதிர்வதை நீங்கள் கண்கூடாக காணலாம். தேய்த்து முடித்ததும், பாத்திரத்தை நன்றாக கழுவவும். சுத்தம் செய்த பிறகு, பாத்திரங்களை மீண்டும் துடைத்து, 20 நிமிடங்கள் வெயிலில் வைத்து நன்றாக காயவிடவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cooking tips, Kitchen Hacks