அதிகரித்து வரும் வெயில் ஒவ்வொரு நாளும் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. இத்தகைய சூழலில், வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க ஏசி, ஏர் கூலர் அல்லது ஃபேன் போன்றவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். தினசரி 2 அல்லது 3 முறை குளிப்பதன் மூலமாக தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பலர் முயற்சி செய்கின்றனர். இருப்பினும், குளியல் அறையில் உள்ள வெப்பமே நம்மை எரிச்சல் அடைய வைக்கிறது.
நீங்கள் இருக்கும் அறையை குளுமையாக வைத்துக் கொள்வது என்றால், அது எளிமையான விஷயம் தான். ஆனால், குளியல் அறையை குளுமையாக வைத்துக் கொள்வது கடினமான விஷயம். குறிப்பாக, குளியல் அறையில் காற்றோட்டம் இல்லாத சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில், குளியல் அறையை குளுமைப்படுத்த சில யோசனைகளை நீங்கள் பின்பற்றலாம்.
உங்கள் ஜன்னல்களை மூடி வைக்கவும்
உங்கள் குளியல் அறை ஜன்னல் வழியாக, நேரடி சூரிய வெளிச்சம் பளீரென்று உள்ளே வருகிறது என்றால், வெப்பமான சமயங்களில், அந்த ஜன்னலில் உள்ள மடக்கும் கண்ணாடிகளை மூடி வைக்கவும். வெயிலை எதிரொலிக்கும் தகடுகள் அல்லது இன்சுலேட்டட் விண்டோ ஃபிலிம் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
குளியல் அறையின் எக்ஸாஸ்ட் ஃபேனை பயன்படுத்தவும்
நீங்கள் குளியல் அறைக்குள் நுழையும் முன்பாக எக்ஸாஸ்ட் ஃபேனை ஆன் செய்ய மறக்காதீர்கள். உள்ளே இருக்கும் வெப்பமான காற்றை வெளியேற்றுவதற்கு இது உதவிகரமாக இருக்கும். காற்றோட்டம் இல்லையே என்ற பிரச்சனை இருக்காது. உங்களிடம் எக்ஸாஸ்ட் ஃபேன் இல்லை என்றால், சிறிய அளவில் இருக்கும் ஸ்டேஷனரி ஃபேன் வாங்கி பயன்படுத்துங்கள்.
கதவுகளை திறந்து வைக்கவும் :
குளியல் அறை அனைத்து பக்கமும் அடைத்திருப்பதால், அதன் உள்ளேயே வெப்பமான காற்று சுற்றிக் கொண்டிருக்கிறது. பயன்பாடு இல்லாத பெரும்பாலான நேரங்களில் குளியல் அறை கதவுகளை திறந்து வைக்கவும். உங்கள் குளியல் அறையை குளுமையாக வைத்துக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.
டவலில் ஹேர் டை கறை ஒட்டிக்கொண்டதா..? அதை நீக்குவதற்கான சிம்பிள் ட்ரிக்ஸ் இதோ...
மாலையில் ஜன்னல், கதவுகளை திறக்கவும் :
சூரியண் மறையத் தொடங்கும் மாலை வேளையில் வெப்பமும் குறையும். அந்த சமயத்தில் ஜன்னல், கதவுகளை திறந்து வைக்கவும். இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்தீர்கள் என்றால், குளியல் அறை உள்ளே வெப்பம் தங்காது.
எலெக்ட்ரிக் பொருள் பயன்பாட்டை குறைக்கவும் :
குளியல் அறையில் முடிந்த வரையில் லைட் மற்றும் ஹீட்டிங் சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், லைட் வெளிச்சத்தின் காரணமாக வெப்பம் உருவாகும். நீங்கள் குளிக்கச் செல்லும் முன்பாக குளியல் அறை முழுவதும் தண்ணீரை ஊற்றி கழுவி விடுங்கள். சற்று நேரம் கழித்து சென்று பயன்படுத்தினால், முடிந்தவரை உள்ளே உள்ள வெப்பம் வெளியாகியிருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bathroom Cleaning, Home Care