ஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்தி இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா..?

கண்ணாடி பொருட்கள், கண்ணாடி பாத்திரங்களில் உள்ள பிசுக்குகளை நீக்கவும் ஆரஞ்சு தோலை தேய்க்கலாம்.

ஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்தி இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா..?
ஆரஞ்சு பழம்
  • Share this:
ஆரஞ்சு பழம் விட்டமின் சி நிறைந்த நீர்ச்சத்து மிக்க பழம். அதேபோல் பழம் வாங்க வேண்டும் என்றால் நிச்சயம் ஆரஞ்சும் அதில் இடம் பெறக்கூடும்.

பலருக்கும் விருப்பமான இந்த ஆரஞ்சு பழத்தின் சதைகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தேவையில்லை என எறிந்துவிடுவோம். ஆனால் இந்த பழத்தின் தோல் பல வகைகளில் உங்களுக்கு உதவும் என்பது தெரியுமா..?

துடைப்பான் : வினிகரில் ஆரஞ்சு தோலை ஊற வைத்து அதைப் பயன்படுத்தினால் வாசனை நிறைந்த அதேசமயம் கெமிக்கல் அல்லாத துடைக்கும் லிக்விடாகப் பயன்படுத்தலாம். இந்தக் கலவையை ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி கிச்சன், கண்ணாடி பொருட்கள் , மிக்ஸி என துடைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.


வாசனை : துர்நாற்றம் வீசக்கூடிய இடத்தில் ஆரஞ்சு தோலை வைத்தால் துர்நாற்றம் நீங்கும். உதாரணத்திற்கு ஷூ கடுமையான துர்நாற்றம் வீசுகிறதெனில் ஷூவிற்குள் வைக்கலாம். ஃபிரிட்ஜ் துர்நாற்றமாக இருந்தால் அதிலும் ஆரஞ்சு தோலில் உப்பு தடவி வைக்கலாம்.

உங்களின் அழுக்குப் படிந்த ஹேண்ட் பேக், ஷூ, பெல்டை சுத்தம் செய்ய இதுவே சரியான நேரம்..!

வீட்டில் பனிக்காலத்தில் நெருப்பு மூட்டி குளிர் காய்கிறீர்கள் அல்லது வீட்டிற்கு சாம்பிராணி புகை போட்டால் அதில் ஆரஞ்சு தோலையும் அப்படியே போட்டால் நல்ல நறுமணம் கிடைக்கும்.கறை நீக்கி : ஆடைகளில் எண்ணெய் கறை, கிரீஸ், பிசுபிசுப்புக் கறைகள், பூமர் ஒட்டியிருந்தால் அவற்றை நீக்க ஆரஞ்சு தோலை சோப்பு ஆயில் அல்லது சர்ஃப் பவுடர் தண்ணீரில் ஊற வைத்து அதில் பிசுபிசுப்பு கொண்ட துணியை ஊற வையுங்கள்.கண்ணாடி பொருட்கள், கண்ணாடி பாத்திரங்களில் உள்ள பிசுக்குகளை நீக்கவும் ஆரஞ்சு தோலை தேய்க்கலாம்.

பியூட்டி : ஆரஞ்சு தோலை பவுடராக்கி அதில் தேன் மற்றும் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்தால் முகம் பளபளக்கும்.

ஆரஞ்சு தோலை இரவு ஊற வைத்து அந்த தண்ணீரை தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.

உருளைக்கிழங்கு சீஸ் ரோல் செய்வது எப்படி..?

அலங்காரம் : வீட்டில் விளக்கு ஏற்ற டெக்கரேஷன் போல் ஆரஞ்சு தோலை உருளையாக வெட்டி அதற்குள் விளக்கை வைத்தால் மணமாகவும் இருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

மேலும் பார்க்கவும் :

 

 

 
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading