ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மைக்ரோவேவில் சமைத்து சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடா..? உண்மை இதுதான்..!

மைக்ரோவேவில் சமைத்து சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடா..? உண்மை இதுதான்..!

மைக்ரோவேவ் ஓவன்

மைக்ரோவேவ் ஓவன்

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே கிட்டத்தட்ட, எல்லா நாடுகளிலுமே மைக்ரோவேவ் ஓவன் பயன்பாட்டில் இருக்கின்றது. மைக்ரோவேவில் ஒரு உணவு எவ்வாறு சமைக்கப்படும் என்பதையெல்லாம் முழுமையாக ஆய்வு செய்த பிறகு உலக சுகாதார நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட பிறகுதான், மைக்ரோவேவ் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் மாறி வருவதற்கு ஏற்றவாறு நவீன வசதிகளும் பெருகிவிட்டன. குறிப்பாக சமையலறையிலேயே நாள் முழுவதும் பெண்கள் இருக்க வேண்டும் என்ற நிலை மாறியதற்கு புதுப்புது கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய உதவியாக இருக்கின்றன. அதேபோல விதவிதமாக சமைப்பதற்கும், சமையல் உபகரணங்கள், சாதனங்கள் ஆகியவை வந்துள்ளன. ஜூசர், காய்கறி நறுக்கும் இயந்திரம் என்று சமையலை துரிதமாக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களை போலவே விதவிதமாக சமைப்பதற்கு வீட்டிலேயே கேக், பேஸ்ட்ரி ஐட்டங்களை செய்வதற்கும் மைக்ரோவேவ் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, விலை அதிகம் என்று கருதப்பட்டு இருந்த மைக்ரோவேவ் ஓவன் தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் சில ஆயிரம் ரூபாய்களில் கிடைத்த மைக்ரோவேவ் ஓவனை வாங்கிப் பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்று கூறலாம். மைக்ரோ ஓவன் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் கேக் செய்வதில் நிபுணர்களாக, வீட்டிலேயே விதவிதமான சுவையான ஆரோக்கியமான தின்பண்டங்களை செய்வதில் கைதேர்ந்தவர்களாக மாறியிருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே கிட்டத்தட்ட, எல்லா நாடுகளிலுமே மைக்ரோவேவ் ஓவன் பயன்பாட்டில் இருக்கின்றது. மைக்ரோவேவில் ஒரு உணவு எவ்வாறு சமைக்கப்படும் என்பதையெல்லாம் முழுமையாக ஆய்வு செய்த பிறகு உலக சுகாதார நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட பிறகுதான், மைக்ரோவேவ் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மைக்ரோவேவ் பற்றி தொடர்ந்து கட்டுக்கதைகளும் தவறான புரிதல்களும் இன்னும் இருக்கின்றன.

Also Read : உங்களுக்கே தெரியாமல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் ஆபத்தான 5 உணவுகள்..!

உண்மையிலேயே ஓவனில் சமைக்கும் உணவுகள் ஆபத்தானதுதானா? அதைப் பயன்படுத்தினால் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படும் கருத்துக்களில் எவையெல்லாம் பொய்யானவை, தவறானவை என்பது பற்றி இங்கே பார்க்கலாம்

மைக்ரோவேவில் சமைத்தால் சத்துக்கள் இருக்காது என்பது தவறானது

பச்சை காய்கறிகளில் உள்ள சத்துக்கள் வேகவைக்க காய்கறிகளில் கிடைக்காது. மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும் பொழுது கொஞ்சம் ஊட்டச்சத்துக் குறையும், ஆனால் ஊட்டச்சத்தே இல்லாமல் போய்விடும் என்று பலர் கருதுகிறார்கள்.

சமைக்கும் உணவுகளில் ஊட்டச்சத்து குறைவது, சமைக்கும் முறையைப் பொருத்து, உடன் என்ன உணவுகளை சேர்க்கிறோம் என்பதை பொறுத்து மாறுபடும். உதாரணமாக காய்கறிகளை மிக மிக சிறிய துண்டுகளாக வெட்டினால் கூட ஒரு சில சத்துக்களை இழந்து விடுவோம். அதேபோல, அதிகமாக வேக வைப்பது அல்லது எண்ணெய்யில் போட்டு வறுப்பது கூட காய்கறிகளில் உள்ள சத்துக்களை குறைக்கும்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மற்ற சமையல் முறைகளை விட மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும் பொழுது குறைவான அளவுதான் ஊட்டச்சத்துக்கள் வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோவேவில் சமைப்பது மிகவும் சுலபம்

என்ன உணவு செய்ய வேண்டுமோ அதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் சில நிமிடங்களில் உங்களுக்கு தேவையான உணவு கிடைத்து விடும். மைக்ரோவேவில் சமைப்பது மிக மிக எளிது. எந்த உணவுகளை எந்த டெம்பரேச்சரில் எந்த வைத்து சமைக்க வேண்டும், எவ்வளவு நேரம் சமைக்க வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.

Also Read : கைகளை இப்படித்தான் கழுவனுமாம்... கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

நம்முடைய பாரம்பரிய இனிப்பான மைசூர்பாகை கூட மைக்ரோவேவ் ஓவன்ல் சில நிமிடங்களில் செய்துவிட முடியும். சாதாரணமாக செய்ய வேண்டும் என்றால் அடுப்பு முன்பு நின்று மாவை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மைக்ரோவேவில் நீங்கள் அதற்கான கலவையை தயார் செய்து சில நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவை கொஞ்சம் கூட மாறாத பாரம்பரிய சுவையுடைய இனிப்பு தயாராக இருக்கும்.

சமையல் மட்டுமல்லாமல், உணவை விரைவாக சில நிமிடங்களில் சூடுபடுத்தும் ஆப்ஷனும் மைக்ரோவேவில் இருக்கின்றன. உணவு சூடாக வேண்டுமென்றால் இரண்டு நிமிடம் ஓவனில் வைத்து எடுத்தால் சுடச்சுட உணவு தயாராகிவிடும்.

மைக்ரோவேவ் சமையல் ஆரோக்கியமானது

பேக்கரிகளில் கிடைக்கக்கூடிய பன், பிரெட், கேக் என்ற அதிக கலோரிகள் கொண்ட அதிக இனிப்பு கொண்ட பல உணவுகளை, ஏற்கனவே கூறியுள்ளது போல வீட்டிலேயே தயாரிக்க முடியும். இதற்கு மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் மட்டும் போதுமானது. இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட மைதாவால் செய்யப்படும் பல்வேறு விதமான பேக்கரி உணவுகளை தவிர்த்து, கோதுமை மற்றும் சிறுதானிய மாவுகளில் பயன்படுத்தி பெண்கள் ஆர்வமாக செய்து வருகின்றனர். இதனால் மைதா பயன்பாடு குறைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதுமட்டுமல்லாமல் வெவ்வேறு விதமாக சிறுதானிய உணவுகளும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மீண்டும் இணைந்துள்ளன. எண்ணெயில் பொரிப்பது, வறுப்பது உள்ளிட்ட சமையலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடை கொடுக்கலாம். உணவுகளில் லேசான எண்ணெய் தடவினால் போதுமானது. உணவுகளை சுவையாக, ஆரோக்கியமாக, அதிக கலோரிகள் இல்லாமல் சமைக்க முடியும். இதன் மூலம் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை வழிவகுக்கலாம்.

குறைவான எண்ணெய் பயன்படுத்தி சமைக்கும் முறைகள் என்று வரும் பொழுது மைக்ரோவேவ் ஓவன் மிக மிக ஆரோக்கியமானது. அது மட்டுமல்லாமல் மைக்ரோவேவில் ஆன்டி பாக்டீரியல் தன்மை இருக்கும். எனவே சமைக்கும் உணவில் பாக்டீரியாவால் ஏற்படும் ஏற்படக்கூடிய பிரச்சனை இருக்காது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைகள் :

மைக்ரோவேவ் ஓவன் என்றாலே நிறைய செலவு செய்ய வேண்டும் என்ற நிலையெல்லாம் மாறி, குறைந்த விலையில், வெவ்வேறு வகைகளில் ஓவன்கள் தற்போது கிடைக்கின்றன. அதுமட்டுமில்லாமல் மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களும் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன, ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே கூட போதும். ஏற்கனவே கோவிட் தொற்றின் போது மைக்ரோவேவ் பயன்பாடு அதிகரித்து வந்துள்ளது. தற்பொழுது இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் மைக்ரோவேவ் சாதனத்திற்கான சந்தை 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cookery tips, Microwave