ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Christmas 2022 | குறைந்த செலவில் வீட்டில் இடத்தை அடைக்காத DIY கிறிஸ்துமஸ் ட்ரீ.!

Christmas 2022 | குறைந்த செலவில் வீட்டில் இடத்தை அடைக்காத DIY கிறிஸ்துமஸ் ட்ரீ.!

DIY கிறிஸ்துமஸ் ட்ரீ.!

DIY கிறிஸ்துமஸ் ட்ரீ.!

வீடு சிறியதாக இருந்தால் ட்ரீ வைக்க இடமிருக்காது அல்லது வீட்டில் இடத்தை அடைத்துக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வரப்போகும் கிறிஸ்துமஸிற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துமஸிற்கு என்னதான் கேக் , பரிசுப்பொருட்கள், தின்பண்டங்கள் என்று இருந்தாலும் வீடு கிறிஸ்துமஸ் செலிபிரேஷன் மோடில் அழகான டெக்கரேஷனுடன் இருந்தால் தான் முழுமை பெரும்.

இந்நேரம் பல பேர் வீட்டை கிறிஸ்துமஸிற்கு அலங்கரிக்க தொடங்கி இருப்பீர்கள். அப்படி முக்கியமான ஒன்று கிறிஸ்துமஸ் ட்ரீ. பெரும்பாலானோர் கடைகளில் சிறியது முதல் பெரிய அளவு வரை கிடைக்கும் கிறிஸ்துமஸ் ட்ரீயை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி வைப்பார்கள். சில சமயம் கடைகளில் கிடைக்கும் கிறிஸ்துமஸ் ட்ரீயின் விலை அதிகமாக இருக்கும். மேலும், வீடு சிறியதாக இருந்தால் ட்ரீ வைக்க இடமிருக்காது அல்லது வீட்டில் இடத்தை அடைத்துக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம்.. எளிதாக பட்ஜெட்டில், இடைத்தை அடைக்காமல் கிறிஸ்துமஸ் ட்ரீ டெகரேஷன் செய்ய DIY ஐடியா இதோ.!

தேவையான பொருட்கள் :

ஆணி - 3

மெல்லிய கம்பி

பச்சை நிற டின்செல் ( ஒப்பனைக்காகத் தொங்கவிடப்படும் பளபளப்பான நீண்ட வண்ணத்தாள் இழைகள் )

கிறிஸ்துமஸ் டெகரேடிவ்ஸ்

சிறிய பேப்பர் ஸ்டார்

சீரியல் பல்புகள்

' isDesktop="true" id="858325" youtubeid="SjD9B-UtybA" category="home-interior">

- முதலில் முக்கோண வடிவில் சுவற்றில் ஆணி அடித்து கொள்ள வேண்டும்.

- பின்னர் மெல்லிய கம்பியை கொண்டு முக்கோண வடிவில் ஆணியில் சுற்றி கொள்ளுங்கள்.

- அடுத்ததாக பச்சை நிற டின்செல் கொண்டு கம்பியில் குறுக்கே வருமாரு முக்கோண ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சுற்றினால் கிறிஸ்துமஸ் ட்ரீ முக்கால் வாசி ரெடி.

- பேப்பர் ஸ்டாரை ட்ரீயின் உச்சியில் வைக்கவும்.

- பின்னர் சீரியல் பல்புகளை டின்செலை சுற்றியவாறு சுற்றிக் கொள்ளுங்கள்.

- இறுதியாக கடைகளில் கிடைக்கும் கிறிஸ்துமஸ் டெக்கரேட்டிவ் ஐட்டம்ஸான சிறிய கிஃப் பாக்ஸ், குட்டி ஸ்டார்ஸ், சிறிய பெல்ஸ் மற்றும் குட்டி குட்டி சான்டா கிளாஸ்கள் மலிவான விலையிலேயே கிடைக்கும். அவற்றை வாங்கி ஆங்காங்கே தொங்க விட்டால் குறைந்த செலவில் இடத்தை அடைக்காத அழகான கிறிஸ்துமஸ் ட்ரீ ரெடி.!

First published:

Tags: Christmas, Christmas tree