நம் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுவதற்கு நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் அவசியமானது. அந்த தூக்கத்தை கெடுக்கும் வெளிப்புற காரணிகளில் முதன்மையாக இருப்பது கொசு. ஆனால், இன்றைக்கு பெரும்பாலான கொசு விரட்டிகளை பயன்படுத்தி, அதனிடம் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொண்டுள்ளோம்.
ஆனால், நாம் தூங்கும் போது நம் உடலில் நமக்கே தெரியாமல் ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் ஒட்டுண்ணிகளாக மூட்டை பூச்சிகள் இருக்கத் தான் செய்கின்றன. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக இதுபோன்ற ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதற்கு பிறகு நிறைய பூச்சிக் கொல்லிகளின் வரவு காரணமாக இந்த ஒட்டுண்ணிகள் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால், தற்போது ஆடம்பரமான ஹோட்டல்கள், ஸ்பாக்கள், பல்பொருள் அங்காடிகள், ரயில் சுரங்கப் பாதைகள், திரையரங்குகள் போன்ற இடங்களில் இவை நிறைந்துள்ளன. இவ்வளவு ஏன் சில வீடுகளையும் கூட இந்த மூட்டை பூச்சிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.
மூட்டைப் பூச்சிகள் எப்படி பெருக்கம் அடைகிறது :
நம் படுக்கை அறையில், நம் தூக்கத்தை கெடுக்கும், நம் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் மூட்டை பூச்சிகளை யாரும் வேண்டுமென்றே அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், பன்னெடுங்காலமாக மனிதர்கள் வாழும் அனைத்து இடத்திலும் இந்த ரத்த உறிஞ்சி ஒட்டுண்ணிகள் கூடவே பயணித்து வருகின்றன.
ஏறத்தாழ 1990-களின் நடுப்பகுதியில் வளரும் நாடுகளில் மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு ஓரளவுக்கு ஒழிக்கப்பட்டது. ஆனால், சில பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் இழப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கைகளில் பின்னடைவு போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான நகரங்களை அது ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.
சமையலில் தவறுதலாக மஞ்சள் அதிகமாக சேர்த்து விட்டீர்களா..? உடனே சரி செய்யும் டிப்ஸ்..!
மூட்டைப் பூச்சிகளின் வடிவம் எப்படி இருக்கும் :
நன்றாக முதிர்ச்சி அடைந்த ஒரு மூட்டைப் பூச்சியின் நீளம் 5 மி.மீ. அளவுக்கு இருக்கும். முட்டை வடிவில் மற்றும் தடையான உருவத்தை கொண்டிருக்கும். தனக்கான உணவை அது உட்கொள்ளாத போது, சிறிய கரப்பான்பூச்சி போன்ற வடிவத்தில் இருக்கும். வாய்ப்பகுதியில் நமது ரத்தத்தை உறிஞ்சுவதற்கான குழாய் இருக்கும்.
மூட்டைப் பூச்சியானது, அதன் உடல் எடையை விட 6 மடங்கு கூடுதலான ரத்தத்தை சுமார் 3 முதல் 10 நிமிடங்களுக்குள் உறிஞ்சக் கூடியது. பெரிய பூச்சிகள் சிவப்பு நிறத்திலும், சிறிய பூச்சிகள் மஞ்சள் - வெள்ளை நிறத்திலும் காட்ச்யளிக்கும்.
என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும்?
நம் வீட்டில் அல்லது கட்டிலில் உள்ள விரிசல்கள் அல்லது ஓட்டைகள் போன்ற இடங்களில் இவை மறைந்திருக்கும். இவை நாம் தூங்கும் போது வெளியே வந்து ரத்தத்தை உறிஞ்சி விட்டு, மீண்டும் தங்களுடைய புகலிடங்களில் சென்று ஒளிந்து கொள்கின்றன.
மூட்டைப் பூச்சி கடிக்கும் இடங்களில் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. தோல் அரிப்பு, அழற்சி போன்ற பிரச்சினைகளை உண்டு செய்யும். மூட்டைப் பூச்சிகளுக்கு பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக இருக்கிறது என்ற முதுமொழி கூட உண்டு. அந்த அளவுக்கு பெரும் தொந்தரவு தரக் கூடிய இந்த ஒட்டுண்ணிகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்வது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home Cleaning Tips, Sleep