• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீட்டுக்குள் இருக்கும் காற்று மாசு வெளிப்புற காற்று மாசுபாட்டை விட ஆபத்தானது : அதிர வைக்கும் ஆய்வின் உண்மை

வீட்டுக்குள் இருக்கும் காற்று மாசு வெளிப்புற காற்று மாசுபாட்டை விட ஆபத்தானது : அதிர வைக்கும் ஆய்வின் உண்மை

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு

நவீன மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் சூழல் மாறி வருவதால், உட்புற காற்றின் தரம் குறைந்து வருகிறது.

  • Share this:
அதிகரித்து வரும் காற்று மாசுபாடு உலகம் முழுவதும் பெரிய அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கிறது. சுவாசிக்கும் காற்றின் தரம் குறைந்து நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியாத இடங்களாக, பல நகரங்கள் மாறி வருகின்றன. நச்சுகாற்றை சுவாசிப்பது உடலுக்கு பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. வெளிப்புறத்தில் இருக்கும் காற்று மாசுபாட்டை பற்றி மட்டுமே கவலைப்பட்டு வரும் நேரத்தில், வீட்டுக்குள்ளும் காற்று மாசு உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். வீட்டுக்குள் ஏற்படும் மாசுபாட்டிற்கான காரணங்களைப் பார்க்கலாம்.

வீட்டுக்குள் அல்லது உட்புறங்களில் காற்று மாசுபாடு ஏற்படும் காரணங்கள்

சுவாசிக்கக் கூடிய சுத்தமான காற்றை பல விஷயங்கள் நச்சுத்தன்மை நிறைந்ததாக மாற்றும். நவீன மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் சூழல் மாறி வருவதால், உட்புற காற்றின் தரம் குறைந்து வருகிறது. உலக சுகாதார மையத்தின் தரவுகள் படி, கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்கள் உட்புற காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்துக்கொண்டாலும், மாசு அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. நிபுணர்களின் கணிப்புப்படி, நவீனமாக கட்டமைக்கப்பட்ட வீடுகளில், வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் காற்றின் தரத்தை பாதிக்கிறது. உதாரணமாக, நாற்காலி, மேசை உள்ளிட்ட ஃபர்னிச்சர்களில் பூசப்பட்டிருக்கும் பெயிண்ட், வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள், வீட்டுக் கட்டுமானப் பொருட்கள், ஃபேன்சி மெழுகுவர்த்திகள், டெஃப்லான் பூசப்பட்ட சமையல் பாத்திரங்கள், தரைவிரிப்புகள், போன்றவை.



சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்களில், சுற்றுசூழலை பாதிக்கக்கூடிய கரி அடுப்புகளை (அபாயகரமான தன்மை கொண்ட மரத்தை எரிபொருளாக பயன்படுத்துவது), சுகாதாரமற்ற தன்மை ஆகியவை உட்புற காசு மாசுபாட்டை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களே, உடலுக்கு பல்வேறு விதத்தில் கேடு விளைவிக்கும், NOx, SO2, O3, PM உள்ளிட்ட வாயுக்கள் மற்றும் கெமிக்கல்களை வெளிப்படுத்துகின்றன.

வெளிப்புற காற்றுமாசுபாட்டை விட உட்புற காற்றுமாசுபாடு ஆபத்தானதா?

வெளிப்புறங்களில் காற்று மாசுபாட்டின் அளவு, காற்று தர நிலை ஆகியவை ‘தீவிரமான ஆபத்து’ நிறைந்தது என்று வகைப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே, மூச்சு விடுவதில் சிரமம் கொண்டவர்கள், நுரையீரல் நோய்கள் அல்லது குறைபாடுகளால் பாதிகப்பட்டுள்ளவர்கள், இதனால் தீவிரமாக பாதிப்படையலாம். உட்புற காற்று மாசுபடுத்திகளின் அளவு பெரும்பாலும் வெளிப்புற அளவை விட 2 முதல் 5 மடங்கு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் வாழ்க்கையை மோசமானதாக மாற்றும் 5 பழக்க வழக்கங்கள்..

அதே நேரத்தில், போதிய வெண்டிலேஷன் இல்லாமல் இருப்பது வீட்டுக்குள் நீங்கள் சுவாசிக்கும் காற்றை நச்சு நிறைந்ததாக மாற்றுகிறது. வெளிப்புற மாசு அளவுக்கு தீவிரமாக உட்புற மாசு இல்லையென்றாலும், வீட்டுக்குள் மாசு அளவைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஏனென்றால், மூச்சுக்குழாய் நோய்கள், ஆஸ்துமா, சருமப் பிரச்சினைகள், மனநல பாதிப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகளை காற்று மாசுபாடு ஏற்படுத்தும்.



உட்புற காற்று மாசுபாட்டை குறைக்க என்ன செய்யலாம்?

வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் செலவிடுவதால், காற்று மாசு அளவைக் குறைக்க அவ்வபோது வென்ட்களை சுத்தம் செய்ய வேண்டும், சூரிய ஒளி வீட்டுக்குள் வருவது போல ஜன்னல்களை அமைக்க வேண்டும். நாம் முழுவதும் வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை மூடியே இருக்ககூடாது. மேலும், ஏர் பியூரிஃபையர்களை பயன்படுத்துவது, காற்றில் உள்ள நச்சு மற்றும் இரசாயனங்களை வடிகட்ட உதவுகிறது. அதே போல, இயற்கையா காற்றை சுத்திகரிக்க, பிரத்யேகமான காற்றை சுத்திகரிக்கும் செடிகளை வளர்க்கலாம். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கவனத்துடன் தேர்வு செய்யுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: