வெயில் வெப்பத்தைத் தணிக்க கார் முழுவதும் மாட்டுச்சாணம் தடவிய பெண்: வைரலாகும் கார்

பளபளவென மின்னிய கார் தற்போது சாணத்தின் வாசத்தோடு கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

news18
Updated: May 22, 2019, 3:31 PM IST
வெயில் வெப்பத்தைத் தணிக்க கார் முழுவதும் மாட்டுச்சாணம் தடவிய பெண்: வைரலாகும் கார்
சாணம் மொழுகிய கார்
news18
Updated: May 22, 2019, 3:31 PM IST
வெயில் தினமும் நம்மை அச்சுறுத்துகிறது. இதற்கு பயந்துகொண்டே பலரும் வெளியே வருவதில்லை. இருப்பினும் கட்டாயம் வெளியே சென்றுதான் ஆக வேண்டும் என்னும் சூழலைத் தவிர்க்கவும் முடியாது.


குறிப்பாக வெயில் காலத்தில் காரில் பயணம் செய்வது என்பது அத்தனை பாதுகாப்பு இல்லை. அதனால்தான் காரில் பயணிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை ஊடகங்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, யாருமே சொல்லாத ஒரு குறிப்பை அகமதாபாத்தைச் சேர்ந்த சேஜல் ஷாஹ் என்னும் பெண் கூறியுள்ளார். அந்தக் குறிப்பு சமூகவலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.Loading...அதாவது காரை குளுமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மாட்டுச் சாணத்தை கார் முழுவதும் தடவியுள்ளார். இதை அவர் ஃபேஸ்புக்கிலும் புகைப்படமெடுத்து ஷேர் செய்துள்ளார். பளபளவென மின்னிய கார் தற்போது சாணத்தின் வாசத்தோடு கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.


அந்த புகைப்படத்திற்குக் கீழ், காரை குளுமையாக வைத்துக்கொள்ள சாணத்தின் பயனைப்போல் வேறெதிலும் கண்டதில்லை. எவ்வளவு வெப்பம் இருந்தாலும் குளுமையாக்கிவிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இப்படிச் செய்தால் கார் குளுமையாகும் என்பதற்கு எந்தவித சான்றும் கிடையாது. அது அவரே தன்னுடைய கற்பனைத் திறனில் செய்துள்ளார்.


இதைப் பார்த்து பலரும் இது அதுல்ல... என்பதுபோல் தெர்மாகோல் செய்தியோடு ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
First published: May 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...