Home /News /lifestyle /

வணிகம் மற்றும் தொழிலில் அதிர்ஷ்டம் வேண்டுமா? கண்ணாடியை இப்படி பயன்படுத்துங்க!

வணிகம் மற்றும் தொழிலில் அதிர்ஷ்டம் வேண்டுமா? கண்ணாடியை இப்படி பயன்படுத்துங்க!

கண்ணாடியை

கண்ணாடியை

எப்படி எல்லாம் கண்ணாடியைப் பயன்படுத்தினால், உங்கள் தொழில் வாழ்க்கை மேம்படும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

சமீபகாலமாக கோவிட் தொற்று காரணமாக பலரும் வீட்டிலேயே வேலை செய்து வருகிறார்கள். வீட்டில் வேலை செய்யும் இடம் அல்லது மேசை ஆகியவை சுத்தமாக, நேர்த்தியாக இருந்தால் மட்டுமே வேலையில், செய்யும் தொழிலில் கவனம் செலுத்த முடியும். சிலருக்கு, எவ்வளவு முயற்சி செய்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் ஃபுரபஷனல் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய முடியாமல் ஏதோ தடை இருப்பதைப் போல உணர்வார்கள். சிறப்பாக திறமையாக உழைத்தாலும், தேவையான அங்கீகாரம் மற்றும் வருமானம் கிடைப்பதில்லை.

நீங்களும் உங்கள் வேலை மற்றும் தொழில்முறை வாழ்க்கையை மேம்படுத்த, வளர்ச்சி அடைய விரும்பினால், வாஸ்து சாஸ்த்திர விதிகளின் படி கண்ணாடியைப் பயன்படுத்தலாம். எப்படி எல்லாம் கண்ணாடியைப் பயன்படுத்தினால், உங்கள் தொழில் வாழ்க்கை மேம்படும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரம் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். 8000 ஆண்டு பழமையான வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டடத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவியலைக் கூறுகிறது. இது இந்தியாவில் கிமு 6000 முதல் கிமு 3000 ஆண்டுக்குள் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சீனர்களின் ஃபெங் ஷுய் பிளவே, இந்தியாவில் கட்டிடங்கள், கட்டிட அமைப்புகளை எப்படி உருவாக்க வேண்டும், அவற்றை மனிதர்களின் வாழ்க்கையோடு இணைத்து எப்படி மேம்படுத்த வேண்டும் என்பது பற்றி கூறுவது தான் வாஸ்து சாஸ்திரம்.



இதில், நீங்கள் ஒவ்வொரு பொருளையும் எப்படிப் பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்தக்கூடாது, எந்தப் பொருளை எதற்காக பயன்படுத்தலாம் என்பது பற்றிய விதிகளும் உள்ளன. அந்த வகையில், உங்கள் தொழில் வாழ்க்கைக்கு, வேலைக்கு, வணிகத்திற்கு உதவும் கண்ணாடிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்ற குறிப்புகள் இங்கே.

ALSO READ |  வாஸ்துபடி வீட்டில் சமையலறை, குளியலறை, படுக்கையறையை இப்படித்தான் செட் செய்ய வேண்டும்..!

உங்கள் அலுவலக அறை அல்லது வேலை செய்யும் இடத்தில் வடக்கு அல்லது கிழக்கு சுவர்களில் கண்ணாடிகள் மற்றும் கண்ணாடிப் பொருட்களை வைக்க வேண்டும். சமையலறையில் எப்போதுமே கண்ணாடிகளை வைக்கக்கூடாது, குறிப்பாக எரிவாயு அடுப்பு அல்லது சமையல் அறையை பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடி வைக்கக்கூடாது.



கண்ணாடியை தரையில் இருந்து குறைந்தது 4-5 அடி உயரத்தில் வைக்கவும். கண்ணாடி எப்போதும் சுவரில் சாய்ந்து இருக்கும் படி வைக்கக்கூடாது, எப்போதும் தட்டையாக வைக்க வேண்டும். உலோகத்தை விட மரத்தால் செய்யப்பட்ட கண்ணாடியின் சட்டகம் இருப்பது அதிக அதிர்ஷ்டத்தைத் தரும்.

கண்ணாடியை உங்கள் படிப்பு அல்லது பணி சம்மந்தப்பட்ட அட்டவணையில் இருந்து தள்ளி வைக்கவும். அவை உங்கள் கவனத்தைக் கலைக்கலாம் அல்லது திசைதிருப்பலாம். மேலும், அப்படி வைத்தால் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கும்.
உங்கள் கண்ணாடியை தினமும் சுத்தம் செய்வது அவசியம். சுத்தமாக, பளிச்சென்று இருப்பது நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி, தடைகளை நீக்கும். உங்கள் மனதிலும் குழப்பம் அல்லது தாமதப்படுத்தலாம் என்ற எண்ணத்தை விதிக்காது.

ALSO READ |  2021ல் புது வீடு கட்ட போறீங்களா? அப்போ இந்த வாஸ்து டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்!

நீங்கள் வணிகம் செய்தாலோ மற்றும் உங்கள் பணியிடத்திலோ, நீங்கள் பணம் வைக்கும் லாக்கருக்கு எதிரே ஒரு கண்ணாடியை வைக்கவும். இது செல்வத்தை ஈர்க்கும் மற்றும் உங்கள் நிதி நிலைமையை இரட்டிப்பாக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல, உங்கள் பீரோவின் உள்ளே இருக்கும் லாக்கரின் உள்ளேயும் ஒரு கண்ணாடியை வைக்கலாம்.



அலுவலகம் அல்லது வீட்டில் வேலை செய்யும் இடத்தில் , வடக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கில் ஆகிய இடத்தில் இருக்கும் தண்ணீர் ஆற்றல் உள்ள பகுதிகளில் மட்டும் கண்ணாடிகளை வைக்கவும்.

நீங்கள் ஆடை, நகை அல்லது கடிகாரக்கடை நடத்தி வந்தால், அது சமீபத்தில் விரிவாக்கப்பட்டிருந்தால், அது விரிவாக்கப்பட்ட இடத்தில் கண்ணாடியை எப்போதும் வைக்க வேண்டாம். இது, வாஸ்து படி, ஏற்றத்தாழ்வு உண்டாக்கி மற்றும் எதிர்மறை ஆற்றல் விளைவிக்கும்.



சில கடைகளுக்குள் நுழையும் போது இருபுறமும் கண்ணாடிகள் இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஏனென்றால், வாஸ்து படி, இது அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இருப்பதாக பிம்பத்தை உருவாக்குகிறது மற்றும் அதன் விளைவாக, அதிக வணிகத்தை ஈர்க்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

அடுத்த செய்தி