உங்கள் சமையலறையை நன்கு சுத்தமாக்குவதற்கான 10 பயனுள்ள வழிகள்

எந்த வகையான அழுக்கு மற்றும் தூசுகளாக இருந்தாலும் அவற்றை நீக்கி சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியமாகும்.

news18
Updated: August 21, 2019, 4:40 PM IST
உங்கள் சமையலறையை நன்கு சுத்தமாக்குவதற்கான 10 பயனுள்ள வழிகள்
உங்கள் சமையலறையை நன்கு சுத்தமாக்குவதற்கான 10 பயனுள்ள வழிகள்
news18
Updated: August 21, 2019, 4:40 PM IST
எந்த வகையான அழுக்கு மற்றும் தூசுகளாக இருந்தாலும் அவற்றை நீக்கி சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியமாகும். இந்த கட்டுரையில் நீங்கள் உங்கள் சமையலறையை நன்கு சுத்தம் செய்வதற்கான பத்து பயனுள்ள வழிகளை காணலாம்.

பேக்கிங் சோடா மேஜிக் : உங்களிடம் ஒரு அழுக்கான சிங்க் இருந்தால் அல்லது சிங்கில் ஒரு அழுக்கான கறை இருந்தால், அதன் மேல் கொஞ்சம் பேக்கிங் சோடாவை தெளித்து, தேவைப்பட்டால் ஒரு பழைய பல் துலக்கும் பிரஷ் அல்லது ஒரு ஸ்பாஞ்சால் சிங்கை தேய்க்கவும். இது ஸ்டீல் சிங்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இப்போது சிங்க் சுத்தமாகிவிடும்.அம்மோனியாவால் சுத்தமான பர்னர் : பர்னர்கள் மீதுள்ள கிரீஸ் கறைகளை எளிதில் நீக்க முடியாது. அம்மோனியா மற்றும் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு ஸிப் லாக் பையில் பர்னர்களை போட்டு வைத்திருங்கள். பர்னர்கள் ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் இருக்கட்டும். அடுத்த நாள் சோப்பு நீரில் அவற்றை ஊறவைக்கவும்.ஃபிரிட்ஜுக்கான பேக்கிங் சோடா : குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்ய ஏதேனும் வகை வேதிப்பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பேக்கிங் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீருடன் குளியல் தொட்டியை நிரப்பவும். அதில் குளிர்சாதனப்பெட்டியின் அனைத்து ஷெல்ஃப்களையும் முக்கவும். பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரின் கலவையுடன் முழு குளிர்சாதனப் பெட்டியையும் சுத்தம் செய்யவும்.

Loading...அவனை சுத்தம் செய்ய எலுமிச்சை உதவி : ஒரு கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் எலுமிச்சை சாற்றை சில துளிகள் சேர்க்கவும். நீரில் சில எலுமிச்சை துண்டுகளையும் சேர்க்கவும், இப்போது மூன்று நிமிடங்களுக்கு அதிக வெப்பநிலையில் நீரை மைக்ரோவேவ் செய்யவும். அதை எந்த வெப்பநிலையும் இல்லாமல் மேலும் 5 நிமிடங்கள் அவனுக்குள் வைத்திருங்கள். ஒரு ஈரமான துணியால் அவனை துடைக்கவும்.

 வெட்டும் பலகைகள் : வெட்டும் பலகையில் உள்ள ஏதேனும் வகை அழுக்கை நீக்க கோஷர் உப்பில் ஒரு எலுமிச்சை துண்டை முக்கியெடுத்து பயன்படுத்தவும்.


சிறிய சாதனங்கள் : சிறிய அப்ளையன்ஸ்களை சொப்பு நீரால் துடைக்கவும். அவற்றின் அளவு காரணமாக அவற்றை அலட்சியமாக விட வேண்டாம், அவற்றை நன்கு சுத்தம் செய்வதும் முக்கியாமாகும்.


கிச்சன் கேபினெட்கள் (சமையலறை அலமாரிகள்) : முதலில் வெளிர் நிற கேபினெட்களில் கவனம் செலுத்துங்கள், அவை சுத்தம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும். உங்களால் முடிந்தவரை விரைவாக சமையலறையை சுத்தம் செய்ய மேலிருந்து கீழே சுத்தம் செய்யும் முறையை தேர்ந்தெடுக்கவும்.


கவுண்டர்டாப்கள் : கவுண்டர்டாப்களை நன்கு சுத்தம் செய்ய சோப்பு நீரைப் பயன்படுத்தவும்.தரைகள் : தரைகளை பெருக்குவது அல்லது வாக்வம் செய்வது மட்டும் போதாது. நீங்கள் மற்ற அறைகளுடன் ஒப்பிடும்போது சமையலறையின் தரை மிகவும் எண்ணெய் பிசுக்காக இருக்கும் என்பதால் அதை ஈரமான மாப்பை பயன்படுத்தி சுத்தம் செய்வது முக்கியமாகும்.


செராமிக் சிங்கிற்கான சுத்தம் செய்யும் வேதிப்பொருள் : செராமிக் சிங்குகளுக்கு, சந்தையில் கிடைக்கும் வேதிப்பொருள் சுத்தம் செய்யும் தயாரிப்புகளை பயன்படுத்தவும்.
First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...