Happy Holi 2021: கலாச்சாரத்திற்கு ஏற்ப நாடு முழுவதும் பலவிதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை!

Happy Holi 2021: கலாச்சாரத்திற்கு ஏற்ப நாடு முழுவதும் பலவிதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை!

ஹோலி

சில பண்டிகைகள் நாடு முழுவதும் அனைத்து கலாச்சாரங்களை கொண்ட மக்களால் கொண்டாடப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பல நூற்றாண்டுகளாக மாறுபட்ட கலாச்சாரங்கள், மொழிகள், இனங்கள் மற்றும் மதங்கள் என இணைந்து காணப்படும் ஒரே நாடு இந்தியா. கலாச்சாரங்களுக்கு ஏற்ப பண்டிகைகளும் பலவிதமாக கொண்டாடப்படுகின்றன. அதிலும் சில பண்டிகைகள் நாடு முழுவதும் அனைத்து கலாச்சாரங்களை கொண்ட மக்களால் கொண்டாடப்படுகிறது. அதில் ஒரு பண்டிகை தான் ஹோலி. இந்த பண்டிகை வருகிற மார்ச் 29ம் தேதி, திங்கட்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அவை தீமைக்கு எதிரான நல்ல வெற்றியைக் கொண்டாடுகின்றன.

மேலும் கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகை ராதா மற்றும் கிருஷ்ணரின் நித்திய சங்கத்தை அடையாளப்படுத்துகின்றன. தீபாவளி பண்டிகையை அடுத்து இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொண்டாடப்படக்கூடிய பண்டிகை என்றால் அது ஹோலி பண்டிகை. இருப்பினும் ஒவ்வொரு கலாச்சாரங்களுக்கு ஏற்ப ஹோலி வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஹோலியின் சில மரபுகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

1. பாகுவா: (Phaguwa)

அசாமிய மக்கள் ஹோலியை பாகுவா (Phakuwa) மற்றும் டவுல் (Doul) என இரண்டு நாட்கள் கொண்டாடுகிறார்கள். புராண அரக்கியான ஹோலிகாவின் அழிவை குறிக்கும் வகையில் அந்த தினத்தில் களிமண் குடிசைகளை மக்கள் எரிப்பார்கள். மறுநாள் வண்ணங்களுடன் விளையாடுவார்கள். பாகுவா பண்டிகை பீகார் மற்றும் ஜார்க்கண்டிலும் கொண்டாடப்படுகிறது.

2. உக்குலி: (Ukkuli)

கோவான் மக்கள் ஹோலியை உக்குலி என்று அழைப்பது மட்டுமல்லாமல் வசந்த பண்டிகையான ஷிக்மோவின் (Shigmo) ஒரு பகுதியாக கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகை ஒரு மாதம் முழுவதும் நடைபெறுகிறது. மேலும் இந்த மாதம் முழுவதும் பல கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

3. துலேதி (Dhuleti)

அகமதாபாத்தில் உள்ள இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தோள்களில் ஏறி அந்தரத்தில் தொங்கவிடப்பட்ட மோர் பானையை உடைப்பதே இந்த விழா. குழந்தை கிருஷ்ணர் வெவ்வேறு வீடுகளில் இருந்து வெண்ணெய் திருட முயற்சிப்பதன் மறுசீரமைப்பு தான் இந்த பண்டிகை.

Also read... Happy Holi 2021: மார்ச் 31 வரை சிறப்பு ரயில்களை இயக்கும் இந்தியன் ரயில்வே - முழு பட்டியல் உள்ளே!

4. லாத்மர் ஹோலி (Lathmar Holi)

லாத்மார் என்ற சொல்லுக்கு “குச்சிகளால் அடிப்பது” என்று பொருள். இந்த பண்டிகையின் போது உத்தரபிரதேச பெண்கள் ஆண்களை விளையாட்டாக அடிப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்துகிறார்கள். ராதாவின் கிராமமான பர்சானாவின் பெண்கள் கிருஷ்ணாவை எப்படி செல்லமாக விரட்டியடிப்பார்கள் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த பண்டிகை.

5. பெதரா வேஷா (Bedara Vesha)

இது கர்நாடக மாநிலத்தில் ஹோலியின் ஒரு தனித்துவமான கொண்டாட்டமாகும். அங்கு ஹோலி பண்டிகை சுமார் 5 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. அந்த ஐந்து நாட்களும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்த பண்டிகை இரு வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது.

6. ஹோலா மொஹல்லா (Holla Mohalla)

இந்த சீக்கிய திருவிழா பஞ்சாபில் மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. நிஹாங் சீக்கியர்களுக்கு தற்காப்பு திறன்களைப் பயிற்றுவிப்பதற்காக நடைபெறுகிறது. இதை 10வது சீக்கிய மதத் தலைவர் குரு கோவிந்த் சிங் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு ஹோலி கொண்டாட்டத்தின் போதும் பின்பற்றப்படுகிறது.

7. டால் ஜாத்ரா (Dol Jatra)

வசந்தக் கால பண்டிகையான பசந்தா உத்ஸாவின் (Basanta Utsav) ஒரு பகுதியாக மேற்கு வங்க மக்கள் ஹோலியை கொண்டாடுகிறார்கள். டால் ஜாத்ரா என்று அழைக்கப்படும் இந்த ஹோலி பண்டிகையின் போது ஊர்வலம் நடைபெறும். இதில் மக்கள் ராதா மற்றும் கிருஷ்ணர் சிலைகளை ஒன்றாக பல்லக்குகளில் வைத்து நகரங்கள் மற்றும் கிராமங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார்கள்.

8. யோசாங் (Yaosang)

மணிப்பூர் பூர்வீகவாசிகள் தங்கள் கடவுளான பகங்க்பாவிடம் பிரார்த்தனை செய்து பின்னர் குடிசைகளை எரிக்கும் நிகழ்வு நடைபெறும். பின்னர் குழந்தைகள் மூலம் நன்கொடைகளை சேகரிக்கப்படும். இதைத் தொடர்ந்து யோசாங் என்ற ஐந்து நாள் விளையாட்டு நிகழ்வு நடைபெறுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: