Happy Holi 2021: மார்ச் 31 வரை சிறப்பு ரயில்களை இயக்கும் இந்திய ரயில்வே - முழு பட்டியல் உள்ளே!

ஹோலி பண்டிகை

தீமைக்கு எதிரான நன்மையை கொண்டாடும் விதமாக நாளை ஹோலிகா தஹான் என்றழைக்கப்படும் சோட்டி ஹோலி ஆடல், பாடல்களுடன் கொண்டாடப்பட உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீமைக்கு எதிரான நன்மையை கொண்டாடும் விதமாக நாளை ஹோலிகா தஹான் என்றழைக்கப்படும் சோட்டி ஹோலி ஆடல், பாடல்களுடன் கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கலர் பவுடர்களை மேலே பூசி விளையாடுவது பலூன்களில் கலர் பொடி கலந்த தண்ணீரை நிரப்பி தெருக்களுக்கு சென்று ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடி மகிழும் ஹோலி நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது.

ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதியான பயணத்திற்காக இந்தியன் ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குகிறது. ஹோலிக்கு செல்லும் மக்கள் கூட்டத்தை கணக்கில் கொண்டு ரயில்வே நிர்வாகம் 28-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. ஹோலி சிறப்பு ரயில்கள் மார்ச் 31 வரை இயங்கும். காத்திருப்பு பட்டியல் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு தேவைப்பட்டால் புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

மேலும் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கூட்டமாக இருக்காது என்று நம்புவதாக குறிப்பிட்டார். இந்த மாதத்தில் சில வழித்தடங்களுக்கு மொத்தம் 130 ரயில்கள் இயக்கப்படும். இது தவிர ஏற்கனவே விடுமுறை சிறப்பு மற்றும் பண்டிகை சிறப்பு ரயில்களையும் அதிகரித்துள்ளோம். பயணத்தின் போது கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் அவசியம். குறிப்பாக பயண டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே ரயில் நிலையம் வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 31 வரை இயக்கப்பட உள்ள ஹோலி சிறப்பு ரயில்களின் பட்டியல் கீழே..

Also read... Happy Holi 2021 : ஹோலி கொண்டாட்டத்தில் வாட்டர் கலர்களை ஏன் பயன்படுத்த கூடாது.? பாதுகாப்பாக கொண்டாட்ட வழிகள்

1. 03511 டாடாநகர்-அசன்சோல் சிறப்பு ரயில் (ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி)

2. 03509 அசன்சோல்-கோண்டா சிறப்பு ரயில் (திங்கள்)

3. 03507 அசன்சோல்-கோரக்பூர் சிறப்பு ரயில் (வெள்ளிக்கிழமை)

4. 2335 பாகல்பூர்-லோக்மான்ய திலக் டி சிறப்பு ரயில் (தினசரி)

5. 02336 லோக்மான்ய திலக் டி-பாகல்பூர் சிறப்பு ரயில் (தினசரி)

6. 03510 கோண்டா-அசன்சோல் சிறப்பு ரயில் (புதன்கிழமை)

7. 03508 கோரக்பூர்-அசன்சோல் சிறப்பு ரயில் (சனிக்கிழமை)

8. 03402 தானாபூர்-பாகல்பூர் சிறப்பு ரயில் (தினசரி)

9. 03419 பாகல்பூர்-முசாபர்பூர் சிறப்பு ரயில் (தினசரி)

10. 03420 முசாபர்பூர்-பாகல்பூர் சிறப்பு ரயில் (தினசரி)

11. 03023 ஹவுரா-கயா சாஹிப்கஞ்ச் வழி சிறப்பு ரயில் (தினசரி)

12. 03024 கயா-ஹவுரா சாஹிப்கஞ்ச் வழி சிறப்பு ரயில் (தினசரி)

13. 02315 கொல்கத்தா-உதய்பூர் நகர சிறப்பு ரயில் (வியாழக்கிழமை)

14. 02316 உதய்பூர் நகரம்-கொல்கத்தா சிறப்பு ரயில் (திங்கள்)

15. 02361 அசன்சோல்-சிஎஸ்டி மும்பை சிறப்பு ரயில் (ஞாயிற்றுக்கிழமை)

16. 02362 சிஎஸ்டி மும்பை-அசன்சோல் சிறப்பு ரயில் (புதன்கிழமை)

17. 03002 சியுதிஹாவாடா சிறப்பு ரயில் (தினசரி)

18. 03506 அசன்சோல்-திகா சிறப்பு ரயில் (ஞாயிற்றுக்கிழமை)

19. 03505 திகா-அசன்சோல் சிறப்பு ரயில் (ஞாயிற்றுக்கிழமை)

20. 03418 மால்டா டவுன் - திகா சிறப்பு ரயில் (வியாழக்கிழமை)

21. 03417 திகா-மால்டா டவுன் சிறப்பு ரயில் (வியாழக்கிழமை)

22. 03425 மால்டா டவுன்-சூரத் சிறப்பு ரயில் (சனிக்கிழமை)

23. 03415 மால்டா டவுன்-பாட்னா சிறப்பு ரயில் (புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு)

24. 03416 பாட்னா-மால்டா டவுன் சிறப்பு ரயில் (வியாழன், சனி மற்றும் திங்கள்)

25. 03165 கொல்கத்தா - சிட்டாமர்ஹி சிறப்பு ரயில் (சனிக்கிழமை)

26. 03166 சிட்டாமர்ஹி - கோலகாட்டா சிறப்பு ரயில் (ஞாயிற்றுக்கிழமை)

27. 03502 அசன்சோல்-ஹால்டியா சிறப்பு ரயில் (ஞாயிற்றுக்கிழமை தவிர)

28. 03501 ஹால்டியா-அசன்சோல் சிறப்பு ரயில் (ஞாயிற்றுக்கிழமை தவிர)



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: