Home /News /lifestyle /

இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்.. இந்நாளின் வரலாறு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்..

இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்.. இந்நாளின் வரலாறு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

International Anti-Corruption Day 2021: ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை தடுப்பதில் ஊழலின் பங்கு மிக அதிகம்.

நமது சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஊழல் பாதிக்கிறது மற்றும் ஊழல் என்ற கொடூர செயல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படுகிறது. உலகளாவிய நோயாக இருந்து வரும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் உலகளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்: 

கடந்த 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச ஊழலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் மற்றும் முக்கிய படியை எடுத்து வைத்தது. ஐக்கிய நாடுகளின் பொது சபை (UNGA) 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை ஏற்று கொண்டது. இந்த தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதிலிருந்து, ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஊழலை கையாள்வதில் தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சட்ட அமலாக்கங்கள், அரசாங்கங்கள் மற்றும் ஊடகவியலாளர் உட்பட சமூகத்தின் ஒவ்வொரு பகுதியினரும் தங்களின் பங்கை முன்னிலைப்படுத்த இந்த நாள் முயல்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 'ஊழல் புலனாய்வுக் குறியீடு' என்ற அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிக்கை எந்தெந்த நாடுகளில் எவ்வளவு ஊழல் நடந்து வருகிறது, ஊழலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை காட்டுகிறது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் எந்த நாடும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை என்பதே கசப்பான உண்மை.

also read : காலையில் சீக்கிரம் எழுந்தால் நீங்கள் இத்தனை விஷயங்களை செய்யலாமா..?
 ஒரு அன்றாட சர்வதேச நிகழ்வாக இருக்கும் ஊழலுக்கான உலகளாவிய செலவு உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% அல்லது $2.6 டிரில்லியன் ஆகும் என ஐ.நா சபை கூறுகிறது. ஊழலை தடுப்பது சமூகத்திற்கு முக்கியமானது. ஏனெனில் இது நிலையான ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான சிறந்த அணுகலைப் பெற மக்களுக்கு உதவும். நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது என்பதை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் மக்களுக்கு எடுத்துரைக்கிறது.

கருப்பொருள்: 

நடப்பாண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமானது ஊழலுக்கு எதிராக மாநிலங்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், ஊடக பிரதிநிதிகள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒவ்வொரு நபரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முன்னிலைப்படுத்துகிறது.

இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் "உங்கள் உரிமை, உங்கள் பங்கு: ஊழலை வேண்டாம் என்று சொல்லுங்கள்" (Your right, your role: Say no to corruption) என்பதாகும். ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும் தடுப்பதிலும் ஒவ்வொரு தனிநபருக்கும் பங்கு உண்டு என்பதை இந்த தீம் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Corruption

அடுத்த செய்தி