Home /News /lifestyle /

வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது மற்றவர்களை விட தனித்து தெரிவதற்கு என்ன செய்யலாம்.!

வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது மற்றவர்களை விட தனித்து தெரிவதற்கு என்ன செய்யலாம்.!

கோப்புப் படம்

கோப்புப் படம்

நிச்சயமாக பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு ஒரு கட்டத்தில் வேறு வேலைகளை தேடி செல்லும் சூழல் உருவாகும்.

  • News18
  • Last Updated :
நம் வாழ்வாதாரம் வேலை தான் என்றாகிவிட்ட நிலையில் எந்த துறையில் வேலை பார்த்தாலும் அதற்கேற்றவாறு நம் திறமைகளை வளர்த்து கொண்டால் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைகள் மிக எளிதாகவே கிடைத்து விடும். பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. உங்களுக்கும், திறமையான இன்னும் பலருக்கும் காத்திருக்கும் ஏராளமான வாய்ப்புகளால் வேலை சந்தை நிரம்பி காணப்படுகிறது.

இருப்பினும் சிறந்த வேலையைப் பெறுவது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்க கூடியதாக உள்ளது. இதற்கு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் சில புத்திசாலித்தனமான தந்திரங்கள் உள்ளன. அவற்றை முறையாக கையாண்டால் போதும். உங்கள் திறமைக்கேற்ற வேலை மற்றும் சம்பளம் நிச்சயம் கிடைக்கும். நம்மில் பெரும்பாலானோருக்கு படித்த துறையிலோ அல்லது பிடித்த வேலையோ அமைவது இல்லை. ஒரு அலுவலகத்தில் நாம் புதிதாக போய் சேர்க்கிறோம் என்றால் நம் வேலைகளுடன் சேர்த்து அந்த அலுவலகத்தில் துறை ரீதியாக என்னென்ன வேலைகள் நடக்கின்றன என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அலுவலகத்தில் இருப்பதிலேயே பொறுப்பு மிக்கவர் யார், அவர் எவ்வாறு அந்த நிலைக்கு உயர்ந்தார் என்பதை தெறித்து கொண்டு அவரை முன்னுதாரணமாக கொண்டு வேலை பார்க்க துவங்கினால், விரும்பிய வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலையை திறம்பட செய்து பேர் வாங்க முடியும். நிச்சயமாக பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு ஒரு கட்டத்தில் வேறு வேலைகளை தேடி செல்லும் சூழல் உருவாகும். அப்போது முந்தைய அலுவலகத்தில் நீங்கள் செய்து பழகிய வேலைகள் உங்கள் திறமைக்கான சான்றாக உங்களை பிரதிநிதித்துவப்படுத்தும். உங்கள் திறமைகளை ஓரிரு பக்கங்களில் எடுத்து காட்டிட உதவுகிறது சுயகுறிப்பு எனப்படும் Resume. எளிய முறையில் வேலை தேடவும், Resume-ஐ தனித்துவமாக்கவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

தொடர்புகளை வளர்த்து கொள்ளுங்கள்..

என்ன தான் திறமை இருந்தாலும் பெரும்பாலான நிறுவனங்கள் ரெஃபிரென்ஸ் அடிப்படையில் ஆட்களை எடுப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே உங்கள் தொழில்துறையில் நல்ல நிலையில் உள்ளவர்களை அறிந்து அவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி கொள்வது ஒரு நிறுவனத்தில் எளிதாக வேலை பெற உதவும்.

மல்டிமீடியா போர்ட்ஃபோலியோ தேவை..

வேலைக்கு ஆள் தேர்வு செய்யும் மேலாளர்கள் தற்போது கூடுதலாக வித்தியாசத்தை எதிர்பார்க்கிறார்கள். எனவே வழக்கமான போர்ட்ஃபோலியோவை விட நீங்கள் மல்டிமீடியா போர்ட்ஃபோலியோ தயாரித்து உங்கள் கல்வி மற்றும் வேலை அனுபவ தகவல்களை மல்டிமீடியா வடிவில் எடுத்து செல்லும்போது நிச்சயம் நீங்கள் தனித்து தெரிவீர்கள். மல்டிமீடியா போர்ட்ஃபோலியோ என்பது உங்கள் முந்தைய படைப்புகள் மற்றும் திட்டங்களைப் பற்றி மேலும் பகுப்பாய்வு செய்யப்பட்ட விளக்கம். இது உங்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்துகிறது.

Also read... உங்கள் தடுப்பூசி அட்டையை சமூக ஊடகங்களில் பகிர்கிறீர்களா? அதில் இருக்கும் அபாயம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்!

புதிய பார்வையை வெளிப்டுத்துங்கள்..

நேர்காணலில் உங்கள் விமர்சன சிந்தனை திறன்களை வெளிப்படுத்த இது மிகவும் பயனுள்ள வழி.ஏற்கனவே உள்ள ப்ராஜெக்ட்டிற்கு உங்களது புதிய யோசனை அல்லது பயனுள்ள தெளிவான எண்ணங்களையும் பரிந்துரைகளையும் கூறலாம். தேர்வாளர்களின் கவனத்தை உங்கள் பக்கம் இது திருப்பும்.

புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தலாம்..

முந்தைய வேலைகளில் உங்கள் இலக்குகளை நீங்கள் எவ்வாறு அடைந்துள்ளீர்கள் என்பதை காட்டும் திறமை சதவீதம் குறித்த புள்ளிவிவரங்களை ரெஸியூமில் பயன்படுத்தலாம். இது உங்கள் பணியமர்த்தல் மேலாளருக்கு, உங்களுக்கு வழங்கக்கூடிய பொறுப்புகளைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை வழங்கும்.

முதல் அபிப்பிராயம்..

தேர்வாளர்களிடம் நம்மை பற்றி பதியும் முதல் எண்ணத்துடனே கடைசி வரை அணுகுவார்கள். எனவே உடல்மொழியில் கவனம் செலுத்த வேண்டும். வளைந்து, நெளிந்து உட்காராமல் நெஞ்சை நிமிர்த்தி நேராக உட்கார வேண்டும். கை குலுக்கும் போது தயங்காமல் கைகளை குலுக்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் கூறும் போது தயக்கமின்றி உற்சாகமாகவும் அதேசமயம் புன்னகையுடனும் சொல்லுங்கள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Interview, Job Vacancy

அடுத்த செய்தி