Christmas Eve | கிறிஸ்துமஸ் ஈவ் பற்றி என்ன தெரியும்? இதோ உங்களுக்காக சில தகவல்கள்..

மாதிரி படம்

ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் டிசம்பர் 24ம் தேதி பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

  • Share this:
கிறிஸ்துமஸ் ஈவ் (Christmas Eve) என்பது கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் அல்லது இயேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று குறிப்பிடப்படுகிறது. இன்று (டிச.24), உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை பரிமாறிக்கொள்வார்கள். மேலும் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் வண்ண விளக்குகள், குடில், கிறிஸ்துமஸ் மரங்கள் ஆகியவற்றை வைத்து அலங்கரிப்பர். ஆனால் கிறிஸ்துமஸ் ஈவ் குறிப்பிடத்தக்க மத முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

கிறிஸ்துமஸ் ஈவ் கொண்டாடப்படும் தேதி:

கிறிஸ்மஸ் ஈவ் கிரிகோரியன் நாட்காட்டியின் படி டிசம்பர் 24 அன்று கொண்டாடப்படுகிறது. இது அட்வென்ட் பருவத்தின் உச்சத்தை குறிக்கிறது. கத்தோலிக்க திருச்சபையின் கூற்றுப்படி, அட்வென்ட் என்பது கிறிஸ்மஸுக்கு முந்தைய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளின் ஒரு தொகுப்பு ஆகும். அட்வென்ட் என்பது லத்தீன் வார்த்தையான அட்வெனியோவிலிருந்து பெறப்பட்டது.கிறிஸ்துமஸ் ஈவ் பண்டிகையின் முக்கியத்துவம்:

உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கான பரிசுகளை வழங்க சாண்டா கிளாஸ் வட துருவத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும் நாள் தான் கிறிஸ்துமஸ் ஈவ் என்று நம்பப்படுகிறது. குழந்தைகள் தங்கள் வீட்டில் தொங்கவிட்டிருக்கும் சாக்ஸ்களில் சாண்டா பரிசுகளை விட்டு செல்வார் என்றும், அவருக்காக குழந்தைகள் வைக்கும் பால் மற்றும் குக்கீகளை சாப்பிட்டு செல்வார் என்றும் கூறப்படுகிறது.

Christmas Gifts | பிரியமானவர்களுக்கு பரிசளிக்க சூப்பரான கிறிஸ்துமஸ் கிஃப்ட்ஸ்.. நீங்களே உருவாக்கலாம்..

அதுவே மத அடிப்படையில் இருந்து பார்க்கும்பொழுது, கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது ஒரு விருந்து மற்றும் வெவ்வேறு வாசிப்புகளுடன் நான்கு குறிப்பிட்ட வழிபாடுகளை கொண்ட ஒரு பண்டிகையாகும். அவை விஜில் அப் தி நேட்டிவிட்டி அப் தி லார்ட் (Vigil of the Nativity of the Lord), மாஸ் அட் மிட்நைட் (Mass at Midnight), மாஸ் அட் டான் (Mass at Dawn), மாஸ் டியூரிங் தி டே (Mass During the Day) ஆகும். இதில், விஜில் மாஸ் டிசம்பர் 24ம் தேதி பிற்பகலில் தொடங்கி கொண்டாடப்படுகிறது. இதனால் கிறிஸ்துமஸ் ஒரு நாள் முன்னதாகவே தொடங்குகிறது. அதேபோல கிறிஸ்துமஸ் ஈவ் நள்ளிரவில், மிட்நைட் மாஸ் ஏற்பாடு செய்யப்படும்.அந்த வகையில் கிறிஸ்துமஸ் ஈவ் கொண்டாட்டத்தின் போது மக்கள் தேவாலயங்களுக்கு செல்வார்கள். வீடுகளை ஒளிரச் செய்வார்கள். மெழுகுவர்த்திகளுடன் பிரார்த்தனை செய்வார்கள். கிட்டத்தட்ட எல்லா தேவாலயங்களிலும் கேரோல்ஸ் இசை ஒலிக்கும். இவை கிறிஸ்மஸிற்கான மாஸ் முன் பயிற்சி அமர்வுகளாக செயல்படுகின்றன. மேலும் ஈவ் அன்று கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டு, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக பரிசுகளை மரத்தின் அடியில் வைப்பார்கள். பல ஐரோப்பிய நாடுகள் 24ம் தேதியே கிறிஸ்துமஸைக் கொண்டாடுகின்றனர்.

ஏனெனில் அன்று சாண்டா கிளாஸ் பூமியின் மேல் பறந்து செல்வார் என்பதற்காக. மேலும், ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் டிசம்பர் 24ம் தேதி பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. கி.பி.240களில் மார்ச் 28ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் நிகழ்ந்ததாக அக்கால கிறிஸ்தவ நாள்காட்டி குறிப்பிடுகிறது. பிறகு, டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் கி.பி.336ஆம் ஆண்டு ரோம் நகரில் தோன்றியதாம்.

இந்த தேதிக்கு, போப் முதலாம் ஜூலியஸ் அங்கீகாரம் வழங்கினார். கிறிஸ்துமஸ் கேரல் கீதங்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் ஆலயங்களிலும், 13ம் நூற்றாண்டு முதல் தெருக்களிலும் பாடப்படுகின்றன. கிறிஸ்துமஸ் விழாவின்போது, இயேசு பிறந்த காட்சியை குடிலாக அமைக்கும் வழக்கத்தை, அசிசி புனித பிரான்சிஸ் 1223ம் ஆண்டு தொடங்கி வைத்தார் என்று கூறப்படுகிறது.

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: