பணிச்சூழல் இனிமையானதாக இருக்க வேண்டும் என்றால், அங்கு பணியாளர்களுக்கு சௌகரியமான அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். தொந்தரவுகள் அதிகம் இருக்கக் கூடாது. சுதந்திரமான மற்றும் சௌகரியமான பணிச்சூழலில் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கும். பெரிய, பெரிய இலக்குகளை கூட சாதாரணமாக எட்டி விடலாம்.
ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் தான் மதிப்பு மிகுந்த சொத்து என்பது நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட பணியாளர்களுக்கு, அலுவலகத்தில் எப்போதுமே பாசிட்டிவ் எனர்ஜி தேவை. பணியாளர்களுக்கு சரியான ஓய்வு கிடைக்கிறதா, முறையாக சாப்பிடுகிறார்களா என்பதை கூட நிறுவனங்கள் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இவையெல்லாம் உளவியல் ரீதியாக ஒருவரை பாதிக்கக் கூடும்.
பணியாளர்களின் கவலை என்பது நிறுவனத்தின் பணிகளில் எதிரொலிக்கும் :
பணியாளர்களுக்கு மனச் சோர்வு, உடல் சோர்வு, மன அழுத்தம் மற்றும் கவலைகள் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும். நிறுவனங்கள் இவற்றை உரிய நேரத்தில் கவனித்து, பணியாளர்களுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்கான புத்துணர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்துவது அவசியமாகும். இல்லை என்றால் நிறுவனத்தின் உற்பத்தி திறனை அது பாதிக்கக் கூடும்.
சுற்றுலா அழைத்துச் செல்லலாம் :
ஆண்டு முழுவதும் உழைத்து, உழைத்து பணியாளர்கள் சோர்வடைந்து போயிருப்பார்கள். தனிப்பட்ட முறையில் சுற்றுலா செல்வதற்கு போதுமான வாய்ப்புகள் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அதே சமயம், நிறுவனத்தில் பணியாற்றும் சக பணியாளர்களுடன் குதூகலமாக நேரம் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள். ஆகவே, 6 மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறையேனும் நிறுவனத்தின் சார்பில் பணியாளர்களை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம்.
Also Read : வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டை பாதித்த அலோபேசியா நோய் பற்றி தெரியுமா..?
வெற்றிகளை அங்கீகரிக்க வேண்டும் :
பணியாளர்கள் பெறும் ஊதியத்திற்கு உழைக்கிறார்கள். அதற்கு ஏற்ப உற்பத்தி திறன் கிடைக்கிறது என்று அப்படியே விட்டுவிட கூடாது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை உற்பத்தி திறன் மூலமாக எட்டும்போது, அதை ஊழியர்கள் மத்தியில் வெற்றிச் செய்தியாக அறிவிக்க வேண்டும். அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், அதை கொண்டாடவும் செய்ய வேண்டும். இலக்குகளை எட்டும் சமயங்களில் ஊழியர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கலாம் அல்லது ஊக்கத்தொகை கொடுக்கலாம்.
Also Read : வாழ்க்கையில் வெற்றியடைய எலான் மஸ்க் கூறும் 6 ரகசியங்கள்..!
புத்தாக்க சிந்தனைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் :
நிறுவனம் சொல்லும் வேலையை மட்டும் ஊழியர்கள் செய்து கொண்டிருந்தால் போதுமானது என்று நினைக்கக் கூடாது. நிறுவனம் வளர்ச்சி அடைய பணியாளர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். சிலருக்கு புத்தாக்க சிந்தனைகள் நிறைய இருக்கும். அவை நிறுவனத்திற்கு பயனுள்ளதாக அமையும். சாதாரண கடைநிலை ஊழியர் கூட, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனை ஒன்றை கூறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே, புத்தாக்க சிந்தனைகளை ஊழியர்களிடம் இருந்து கேட்டுப் பெறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lifestyle, Mental Health, Work stress