• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • திங்கட்கிழமை என்றாலே அலர்ஜியா..? அதற்கு உங்கள் குழந்தை பருவம்தான் காரணமாம்..

திங்கட்கிழமை என்றாலே அலர்ஜியா..? அதற்கு உங்கள் குழந்தை பருவம்தான் காரணமாம்..

காட்சி படம்

காட்சி படம்

நீங்கள் திங்கிட்கிழமையை வெறுப்பதற்கு உங்கள் குழந்தை பருவம் தான் காரணமாம்.

 • Share this:   வாரத்தின் முதல் நாளான திங்கள்  காலையில் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது ஒரு வாரத்தின் தொடக்கத்தில் மிகவும் மன அழுத்தமாக இருக்கும். முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ அல்லது நெட்ஃபிளிக்ஸ் உடன் ஓய்வெடுத்ததால், வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.


  வாரத்தின் முதல் நாளுடன் வார இறுதி நாளை ஒப்பிடும் போது மனநிலை முற்றிலும் மாறுபடும். இத்தகைய எதிர்மறை உணர்ச்சிகள், திங்கள் கிழமைகளுடன் தொடர்புடையவை, இது நம் குழந்தை பருவத்திலிருந்தே காணப்படுகின்றன.
  குழந்தை பருவத்திலிருந்து தொடரும் எதிர்மறை உளவியல்  குழந்தைப் பருவத்தில் நாம் பலருக்கும் விளையாட தான் தோன்றும். கையில் நோட்டுப் புத்தகம் அல்லது ப்ராஜக்ட் போன்ற பல பணிகளை செய்ய விருப்பம் இருக்காது தான். பெரும்பாலான பள்ளிகளில் இது போன்றவை திங்களன்று சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படும். அதனால் குழந்தை பருவத்தில் இருப்பவர்கள் பலரும் திங்கட்கிழமையை கண்டு அஞ்சுவது வழக்கமாகிறது. நம் வீட்டிலுள்ள வசதியை விட்டுவிட்டு, அலுவலகத்திற்குச் செல்வதும், சாதாரண உடையிலிருந்து, திடீரென மனநிலையை மாற்றுவது போல் உணர்வைதால் அலுவலகத்துக்கு செல்லும் பொது வெறுப்பு உண்டாகும்.
  மனிதர்கள் சமூக உயிரினங்கள் அவர்கள் பழக்கவழக்கத்தையும், விருப்பத்தையும் விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் பாதுகாப்பு உணர்வுடன் இருக்கிறார்கள். நம் வசதிகளில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். இதுபோன்ற கவலையை நாம் நம் பள்ளி நாட்களிலிருந்து அனுபவித்து வருகிறோம்.

  நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணி நாய் உங்களுக்கான காதலை தேடித்தருமாம்..  பொதுவாக குழந்தைகளுக்கு பலவற்றை பிரித்துமேய ஒரு உள்ளார்ந்த ஆர்வம் உள்ளது பொதுவாக அவர்களின் பொம்மைகள், கதைப்புத்தகங்கள் அல்லது நண்பர்களுடன் வெளியில் விளையாடும்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள். பள்ளிகள், ஒழுக்கம் மற்றும் கட்டுக்கோப்பின் மூலம் கடுமையான இணக்கத்தன்மை கொண்ட ஒரு இடம், மேலும் நாம் நமக்கு அளிக்கப்பட்ட வேலையை சரிவர செய்யவில்லை எனில் தண்டனை அச்சுறுத்தல்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.


   இயற்கையாகவே, குழந்தைகள் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை பள்ளிக்கு செல்லவேண்டும் என்றால் அச்சம் கொள்கிறது. பள்ளி மற்றும் திங்கட்கிழமைகளுடனான இந்த எதிர்மறையான தொடர்பு, நாம் வேலை செய்யும் நபர்களாக மாறினாலும், நம் ரத்தத்தில் ஊறியுள்ளது. வகுப்பறைகள், அங்குள்ள மர பெஞ்சுகள் மற்றும் அச்சமூட்டும் கரும்பலகையுடன், இறுக்கமான அறைகள் மற்றும் பாடத்திட்டங்களால் பல குழந்தைகள் அச்சம் கொள்கின்றனர்.  பணிபுரியும் நபர்களிடையே மன அழுத்தம் ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், எடிட்டர்கள், கணக்காளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களாக பணிபுரிபவர்களுக்கு அதிக மன அழுத்தம் உள்ள வேலைகள் உள்ளன. பள்ளியைப் போலவே, ஒழுங்கு நடவடிக்கை குறித்த அச்சமும் அவர்களுக்கும் உள்ளது. டாக்டர்கள் அல்லது நர்சிங் ஊழியர்களைப் (surgeons or nursing staff) பொறுத்தவரை, அவர்கள் செய்யும் சிறிய தவறு பலரின் வாழ்க்கையை மாற்றிவிடும் மேலும் சிறு கவனமின்மை இறப்பிலும் முடியலாம்.
  பத்திரிகையாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அலுவலக அமைப்பில் பணிபுரியும் மற்றவர்களும் கடுமையான அழுத்தத்தில் உள்ளனர். பலருக்கு நேர்மறையான பள்ளி அனுபவம் இல்லை, அவர்கள் வெறுக்கும் வேலைகளைச் செய்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பணிச்சூழல் அந்த குறிப்பிட்ட பணியாளருக்கு நச்சுத்தன்மையாக மாறும். அத்தகைய ஊழியர்களுக்கள், வார இறுதி நாட்களில் வீட்டில் இருக்கும் ஆறுதல் மற்றும் தளர்வுடன் ஒப்பிடுகையில் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமைகளில் எதிர்மறையானவற்றை பெறுகின்றார்கள்.


  அது வேலை, மட்டுமல்லாது சில நேரங்களில் அவர்களது வாழ்க்கையையே மாற்றி விடுகின்றன. ஆகவே இதுபோன்ற மன நிலையில் நீங்கள் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள தனியாக உட்கார்ந்து உங்களுக்கு பிடித்தவற்றை திங்களன்று தூங்கி எழும்போது செய்யுங்கள். திங்களன்று சமர்ப்பிக்க வேண்டியவற்றை அதற்கு முன்தினமே முடித்துவிட்டு பின்னர் குடும்பத்துடன் மகிழ்வுடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள். எப்பொழுதும் வேலைகளை தள்ளிப்போடாமல் உடனுக்குடனே முடித்து விடுவது உங்களுக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகம் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுக்கும்.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: