வீட்டில் கொசுத் தொல்லையா? இந்த மூலிகைச் செடிகள் இருந்தால் கொசுவே வராது!

நொச்சி இலைகளை நெருப்பு மூட்டி அதில் போட்டு அந்த புகையை வீடு முழுவதும் காட்டினால் கொசுவை ஓட ஓட விரட்டலாம்.

வீட்டில் கொசுத் தொல்லையா? இந்த மூலிகைச் செடிகள் இருந்தால் கொசுவே வராது!
துளசி
  • News18
  • Last Updated: August 20, 2019, 5:28 PM IST
  • Share this:
ஆல் அவுட், குட்நைட், கொசுவத்தி, கொசுவத்திச் சுருள், ஹிட் இப்படி எதுவுமே இல்லாத காலகட்டத்தில் புகை மூட்டுவதுதான் பிரதானம். அது முன்னோர்கள் காலத்திற்கு மட்டுமல்ல .. இன்றும் அதன் வீரியம் கொசுக்களுக்கு பயம்தான். ஆனால் ஏனோ இன்றைய தலைமுறை அதைப் பயன்படுத்துவதில்லை. இதுவரை இல்லை என்றாலும் ஒரே ஒருமுறை இப்படி புகை மூட்டிப் பாருங்கள்.. இன்றைய எல்லா கொசு ஒழிப்பான் கருவிகளையும் தோற்கடித்துவிடும்.

தேங்காய் நாரை தீயிட்டுக் கொளுத்தி வீடுகளில் காட்டுவதால் கொசுக்கள் வராது. இதனால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

சோற்றுக்கற்றாழை சதையில் உள்ள சாறுடன் கற்பூரவல்லி சாறைப் பிழிந்துக் கலந்து வீடுகளில் கொசு மொய்க்கும் இடங்களில் தெளித்தால் கொசுக்கள் வராது.


மாங்காய் மரம் இருப்பின் அதன் பூக்களை தீயிட்டு புகையை வீடு முழுவதும் காட்டலாம்.துளசி இலை கொசுக்களுக்கு ஆகாது. அதை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசுக்களைத் தவிர்க்கலாம். துளசி சாறு மற்றும் யூகலிப்டஸ் இலைச் சாறு இரண்டையும் கலந்து மூலை முடுக்குகளில் தெளிக்க கொசுக்கள் ஓடிவிடும்.

Loading...

நொச்சி இலைகளை நெருப்பு மூட்டி அதில் போட்டு அந்த புகையை வீடு முழுவதும் காட்டினால் கொசுவை ஓட ஓட விரட்டலாம்.

வேப்பிலை, யூகலிப்டஸ் இலைகளையும் நெருப்பில் காட்டி அதன் புகையை வீடு முழுவதும் சுற்றவிட்டால் கொசுக்கள் ஒழியும்.

வேம்பு, துளசி, சிறியாநங்கை இலை, நொச்சி இலை, ஆடாதொடை, தும்பை ஆகிய இலைகளை வெயிலில் காயவைத்து அதை அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். சாம்பிராணி, குங்கிலியம் சேர்த்து தீ மூட்டி அதோடு அரைத்த பொடியை சேர்த்து புகையை வீடு முழுவதும் காட்டுவதால் கொசுக்களே இருக்காது.இதை தினமும் மாலை நேரம் செய்தால் கொசுக்கள் வராது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...