முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்த காரணங்களால்தான் மாரடைப்பு உண்டாகிறது : இந்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இந்த காரணங்களால்தான் மாரடைப்பு உண்டாகிறது : இந்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இதய நோய்

இதய நோய்

நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், அதிகமான கொலஸ்ட்ரால் மற்றும் புகைபிடிப்பது ஆகிய இதய நோய்களை அதிகப்படுத்தும் முக்கிய ஆபத்து காரணிகளை ஆய்வு செய்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய தலைமுறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இதய நோய்கள் மாறி வருகிறது. கார்டியோவாஸ்குலார் நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் இதய நோய்களால் 1.8 கோடி உயிர்கள் பலியாகின்றன.

லட்சக்கணக்கானவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இதய நோயால் ஏன் பாதிக்கப்படுகிறார்கள், இதய நோய் உண்டாவதற்கு, மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது பற்றி பலவிதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் மருத்துவ ஆய்வாளர்கள் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டார்கள். அதில் மாரடைப்புக்கான புதிய காரணங்களைக் கண்டறிந்துள்ளனர்.

இதய நோய்களால் ஏற்படும் பாதிப்புகளில் ‘கொரோனரி ஆர்டரி டிசீஸ்’ (Coronary Artery Disease – CAD) அதிகரித்து வருவதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது. இதய நோய் பாதிப்பால் இறப்பவர்களில் 28% அதிகரித்துள்ளது; 14% சதவீத நபர்கள் CAD பாதிப்பால், ஏதேனும் குறைபாட்டுடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளனர். 1990 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட CAD ஆய்வின்படி இந்த சதவீதம் 15.2% மற்றும் 6.9% இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வில் கண்டறியப்பட்ட மெட்டபாலிக் ஆபத்துக் காரணிகள் :

இந்த ஆய்வின் பெயர், முதல் அக்யூட் கொரோனரியை உண்டாக்கும் மெட்டபாலிக் ரிஸ்க் காரணிகள் என்பதுதான் இந்த ஆய்வின் பெயர் (Metabolic risk factors in first acute coronary syndrome (MERIFACS) Study). இது இந்தியன் இதய ஜர்னலில் வெளியாகியுள்ளது

இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள தகவலின் படி, பாடி மாஸ் இண்டெக்ஸ், மற்றும் இடுப்பு வயிறு சுற்றளவு விகிதம் ஆகியவை தான் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையின் மூத்த இதய நோய் நிபுணரான மருத்துவர் ஹய்கிரி ராவ் 2153 நோயாளிகளில் ஆய்வை மேற்கொண்டார்.

இரும்புச் சத்து குறைபாடு : கண்களில் காணப்படும் இந்த அறிகுறி பற்றித் தெரியுமா?

நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், அதிகமான கொலஸ்ட்ரால் மற்றும் புகைபிடிப்பது ஆகிய இதய நோய்களை அதிகப்படுத்தும் முக்கிய ஆபத்து காரணிகளை ஆய்வு செய்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த காரணிகளால் மட்டுமே ஒருவர் இதய நோயால் பாதிக்கப்படவில்லை மற்றும் அக்யூட் கொரோனரி சிண்ட்ரோம் இதன்மூலம் அதிகரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

குறைந்த அளவில் உயர்-அழுத்த லிப்போ புரோட்டின் கொலஸ்ட்ரால் HDL மற்றும் அதிகரிக்கும் பாடி மாஸ் சென்டர் மற்றும் இடுப்பு மற்றும் வயிற்று சுற்றளவுக்கான ரேஷியோ மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய் ஆகியவை தான் அக்யூட் கொரோனரி சிண்ட்ரோம் பாதிப்பை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

ஆய்வு எவ்வாறு கணக்கிடப்பட்டது?

இந்த ஆய்வில் பின்வரும் அளவீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1. பாடி மாஸ் இடெக்ஸ் சர்வதேச அளவில் எவ்வாறு கணக்கெடுக்கப்படுமோ அதேபோல கணக்கெடுக்கப்பட்டது. BMI 28 க்கும் மேல் இருந்தால், ஆபத்து அறிகுறிகளாகும்.

2. இடுப்பு மற்றும் வயிற்று பகுதிக்கான அதிகப்பட்ச வேல்யூ ஆண்களுக்கு 0.9 மற்றும் பெண்களுக்கு 0.85க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

3. HDL கொலஸ்ட்ரால் ஆண்களுக்கு 40 Mg% மற்றும் பெண்களுக்கு 50 mg% மேல் இருப்பது ஆபத்துக் காரணியாகும்.

4. அதேபோல டிரைகிளசரைடு 150 mg க்கும் அதிகமாக இருப்பது ஆபத்தாகும்.

இந்த ஆய்வு, 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வு ஒன்றை ஆண்டுகளுக்கு நீடித்தது. அனைத்து பங்கேற்பாளர்களும் 18 மாதங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். ஆய்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில் 76.5 சதவீதம் ஆண்கள் மற்றும் 23.5 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே சிறுநீரகங்களை பரிசோதித்து கொள்ளுங்கள்!

மாரடைப்பு வருவதற்கான பாரம்பரியமான காரணங்கள் என்ன?

மாரடைப்பு வருவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று பாரம்பரியமான ஏற்படக்கூடிய காரணங்கள், இரண்டாவது குறிப்பிட்ட மெட்டபாலிக் காரணங்கள்.

பாரம்பரியமான ஆபத்து காரணிகளில் ஹைப்பர் டென்ஷன், அதாவது ஸ்ட்ரெஸ் அதன் மூலம் ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தம், தீவிரமான நீரிழிவு நோய் மற்றும் அதிகரித்த கொலஸ்ட்ரால் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை முக்கியமான காரணிகளாக கூறப்பட்டுள்ளன.

மாரடைப்புக்கான குறிப்பிட்ட மெட்டபாலிக் ஆபத்துக் காரணிகள் :

இதய நோய் ஏற்படக்கூடிய பாரம்பரியமான காரணங்களை விட, மெட்டபாலிக் காரணங்கள் 97% அதிக ஆபத்தை விளைவிக்கின்றன. ஆய்வில் கலந்து கொண்டவர்களில், பின்வரும் மெட்டபாலிக் காரணங்கள் இதய நோய் ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கின்றன.

1. அப்நார்மல் BMI (52.6%) – 1133 நபர்கள்

2. இடுப்பு வயிறு சுற்றளவு விகிதம் (76.2%) – 1641 நபர்கள்

3. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு (36.6%) – 787 நபர்கள்

4. டிரைகிளசரைடு (9%) – 557 நபர்கள்

5. HDL (9%) – 1182 நபர்கள்

ஆண்களின் விந்தணு உற்பத்தியை பாதிக்கும் 5 உணவுகள்... தவறி கூட சாப்பிடாதீங்க...

இன்டர்ஹார்ட் ஆய்வு :

உலக அளவில் இன்டர்ஹார்ட் ஆய்வு, 52 நாடுகளில் மற்றும் 262 மையங்களில் நடத்தப்பட்டது. இதில், மேலே உள்ள காரணங்களுடன், உடல் பருமன், உளவியல்-சமூக இன்டக்ஸ் ஆகியவை மையோகார்டியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே போல, பழங்களும் காய்கறிகளும் பாதுகாப்பை அளிக்கிறது.

top videos

    இதய நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நோய் பற்றிய ஆரம்ப அறிகுறிகள், உள்ளிட்ட எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது நோய் வராமல் தடுக்க முடியும்.

    First published:

    Tags: Heart attack, Heart disease